Sunday, July 29, 2012

0

புவி சூடாதல்

Posted in

புவி சூடாதல்

20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமடைதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது.[1][A] இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது.[1] கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளது.[2][3] இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட[4] 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.[B] ஒரு சிறு எண்ணிகையிலான அறிவியலாளர்கள் இந்த முடிவுகளுடன் உடன்படவில்லை.

தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்காலா மதிப்பீடுகள் இருபத்தொறாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் 1.1 தொடக்கம் 6.4 °C வரை (2.0 - 11.5 °F) கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.[1] ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிகால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி சூடாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன. கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும், வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு, வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்ட்டுக்கு அப்பாலும் புவி சூடாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[5][6][7]

கூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும், மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம்.[8]பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வுக்க்கூறப்படுகிறது. சூடாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல், உயிரின அழிவு வேகம் கூடுதல், வேளாண்மை விளைச்சளின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும்.

புவி சூடாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் (சிலர் ஒன்றும் தேவையில்லை எனவும் கருதுகின்றனர்) கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல், சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்வாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.

பொருளடக்கம்

வெப்பநிலை மாற்றங்கள்

வெவ்வேறு கருதுகோள்களின் கீழ் பெறப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலைகள் பத்தாண்டு அள்விடையில் காணல் நீக்கிய வளைகோடுகளாக தரப்பட்டுள்ளன. காணல் நிக்கா நிலையில் 2004 ஆம் ஆண்டுக்கான மதிப்பிடு ஒப்பீட்டிற்காகக் குறிக்கப்பட்டுள்ளது.

புவி சூடாதலின் போது புவிக்கு அண்மித்த வெப்பநிலையின் உலகலாவிய சராசரியின் மாற்றம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை 0.74 °C ±0.18 °C ஆல் கூடியுள்ளது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை கூடும் வீதத்தோடு ஒப்பிடுகையில் அதன் கடைசி 50 ஆண்டுகளில் வெப்பநிலை கூடும் வீதம் இரட்டிப்பாகியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C ±0.03 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.07 °C ± 0.02 °C என்பதை ஒப்பிடுக). நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு புவி சூடாதலுக்கு 1900 ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு 0.002 °C என்ற வீத்ததால் புவி வெப்பநிலையைக் கூட்டியுள்ளது.[9] செய்மதி அளவீடுகளின் படி 1979 ஆம் ஆண்டு முதல் அடிவளிமண்டலத்தின் கீழ் பகுதியில் வெப்பநிலை பத்து ஆண்டுகளுக்கு 0.12 தொடக்கம் 0.22 °C வரை கூடியுள்ளது (0.22 - 0.4 °F). 1850 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒன்று அல்லது இரண்டு ஆயிரம் ஆண்டுகளின் காலத்தில், இடைமத்திய கால வெப்பமான காலகட்டம் அல்லது சிறு பனி யுகம் ஆகிய உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் தவிர்ந்தவிடத்து ஒப்பீட்டளவில் சராசரி வெப்பநிலை கூடுதல் மாற்றம் இருந்திருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நாசாவின் கோடார்டு விண்வெளி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, 1800 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெப்பநிலை தொடர்பான நம்பகமான பரவலான கருவியியல் அளவீடுகள் கிடைக்கப் பெற்றதில் இருந்து 2005 ஆம் ஆண்டே வெப்பநிலைக் கூடிய ஆண்டாகும். இவ்வெப்பநிலை வெப்பநிலைத் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்த 1998 ஆம் ஆண்டினதை விட சில கீழ்நூறு பாகைகள் கூடுதலாகும்.[10] உலக வானிலையியல் அமைப்பும் தட்பவெப்பநிலை ஆராய்ச்சிப் பிரிவும் மேற்கொண்ட மதிப்பீடுகளின் படி 1998 ஆம் ஆண்டு முதலிடத்தையும் 2005 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.[11][12] 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வலிமையான எல் நீனோ 1998 ஆம் ஆண்டில் நடைப்பெற்றமையால் அவ்வாண்டின் வெப்பநிலைகள் சராசரி அளவைவிட கூடுதலாக காணப்பட்டன.[13]

வெப்பநிலை மாற்றம் உலகுமுழுவது ஒரே அளவில் நடைப்பெறவில்லை. 1979 ஆம்ஆண்டு முதல் நிலத்தின் வெப்பநிலை கடல் வெப்பநிலையைவிட இரண்டு மடங்கு வேகமாக கூடியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.25 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C என்பதை ஒப்பிடுக).[14] நிலத்தைவிட கடல் கூடுதல் வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளமையும் கடல் ஆவியாதல் மூலம் நிலப்பரப்பை விடவும் வெகு துரிதமாக வெப்பத்தை இழக்கக் கூடியமையும் என்ற இரண்டு கரணியங்களால் கடல் வெப்பநிலைகள் நிலப்பரப்பினதை விடவும் மெதுவாகவே கூடுகின்றன[15] வடக்கு அரைக்கோளம் தெற்கு அரைக்கோளத்தை விட கூடுதல் நிலப்பரப்பை கொண்டிருப்பதாலும் பனி-வெண் எகிர்சிதறல் பின்னூட்டச் சக்கரத்துக்குள்ளாகும் கூடுதலான பருவ-தூவிப்பனியுள்ளநிலப் பகுதிகளும் கடல் பனியும் காணப்படுவதாலும் வடவரைக்கோளம் துரிதமாக வெப்பமடைகிறது. வெப்பம்சிக்குறுத்தும் வளிமங்கள் கூடுதலாக வடவரைக்கோளத்தில் கூடுதலாக உமிழப்பட்டாலும் அவ்வளிமங்கள் இரண்டு அரைக்கோளங்களின் வளிமங்கள் கலக்க எடுக்கும் நேரத்தை விட கூடிய நேரம் வளிமண்டலத்தில் இருப்பதால் வெப்பமடைதலில் எந்த வித்தியாசத்திற்கும் காரணமாவதில்லை.[16]

பெருங்கடல்களின் கூடுதலான வெப்பக்கொள்ளளவுக் காரணமாகவும் ஏனைய நேரில் விளைவுகளின் மெதுவான தாக்கம் காரணமாகவும் தட்பவெப்பநிலை சீராக பலநூற்றாண்டுகள் ஆகலாம். ஆய்வுகளின் படி வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களிம் உமிழ்வு 2000 ஆம் ஆண்டு அள்வுகளில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெப்பநிலை 0.5 °C (0.9 °F) யினால் மேலும் கூடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.[17]

வெளிக் கரணியங்கள்

தட்பவெப்பநிலையுடன் தொடர்பில்லாத கரணியங்களுக்கும் தட்பவெப்பநிலை மாற்றங்களைக் காட்டுகிறது. வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் அளவு, சூரிய ஒளிர்வில் உள்ள மாற்றங்கள், எரிமலை வெடிப்புகள், புவி சூரியனைச் சுற்றும் பாதையில் ஏற்படும் மாற்றங்கள் என்பன தட்பவெப்பநிலையில் செல்வாக்குச் செலுத்தும் வெளிக் கரணியங்களாகும்.[2] பொதுவாக இதில் முதல் மூன்று கரணியங்களே வெப்பநிலை மாற்றத்துக்கு ஏதுவாகிறது. நிலவுலகு சூரியனைச் சுற்றும் பாதை மிக மெதுவாகவே மாற்றமடைவதால் கடந்த நூற்றாண்டின் வேகமான வெப்பநிலை மாற்றங்களுக்கு இது கரணியமாகாது.

வெப்பம் சிக்குறும் விளைவு

வெப்பம் சிக்குறும் விளைவைக் காட்டும் வரைப்படம். ஆற்றல் வளிமண்டலம், விண்வெளி, நிலவுலகு என்பவையிடையிலான ஆற்றல் பாய்ச்சல் சதுரமீட்டருக்கு வாட் (W/m2) என்ற அலகில் தரப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் (CO2) சமீபத்திய கூடுகை. மாத CO2 அளவீடுகள் ஆண்டுக்குள் பருவத்துடன் வேறுபடும் போஒக்கையும் ஆண்டளவீடுகள் தொடர்ந்து கூடும் போகையும் காட்டுகின்றன.

வளிமண்டலத்திலுள்ள வளிமங்கள் அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சி மீண்டும் உமிழ்வதன் மூலம் கோள் ஒன்றின் கீழ் வளிமண்டலமும் அதன் மேற்பரப்பும் வெப்பமடைதல் வெப்பம் சிக்குறும் விளைவு எனப்படுகிறது. வெப்பம் சிக்குறும் விளைவை ஜோசப் ஃபோரியர் 1824 ஆம் ஆண்டு கண்டறிந்தார், 1896 ஆம் ஆண்டில் சிவாந்தே அரினியஸ் வெப்பம் சிக்குறும் விளைவின் அளவைக் கண்டறிந்தார்.[18] புவிசூடாதலுக்கு மாந்த நடவடிக்க்கைகள் ஒரு கரணியமல்லவென கருது அறிவியலாளர்கள் உட்பட் எவராலும் வெப்பம் சிக்குறும் விளைவின் இருப்பு மறுப்புக்குள்ளாகவில்லை. மாறாக மாந்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் உள்ள வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்கள் செறிவு மாறும் போது வெப்பம் சிக்குறும் விளைவு எவ்வாறு மாற்றமைடையும் என்பதே கேள்விகுள்ளாகியுள்ளது.

இயற்கையாக வளிமண்டலத்திலுள்ள வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்கள் சுமார் 33 °C (59 °F) வரை சராசரியான வெப்பமாக்கும் விளைவைக் கொண்டுள்ளன.[19][C] நீராவி (இது வெப்பம் சிக்குறும் விளைவில் 36-70 சதவீதத்திற்கு கரணியமாகிறது), கரியமில வளிமம்(CO2, இது வெப்பம் சிக்குறும் விளைவில் 9-26 சதவீதத்திற்கு கரணியமாகிறது), மீத்தேன் (CH4 இது வெப்பம் சிக்குறும் விளைவில் 4-9 சதவீதத்திற்கு கரணியமாகிறது), ஓசோன் ( இது வெப்பம் சிக்குறும் விளைவில் 3-7 சதவீதத்திற்கு கரணியமாகிறது) என்பன முக்கிய வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களாகும்.[20][21] கதிரியக்க சமநிலையில் முகில்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆனால் இவை நீரை நீர்ம நிலையிலோ அல்லது திண்ம நிலையிலோ கொண்டிருப்பதால் இதன் வெப்பம் சிக்குறுத்தும் விளைவு நீராவியிலிருந்து வேறாக கணிக்கப்படுகிறது.

தொழிற்புரட்சி முதல் மாந்தரின் நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் செறிவை கூட்டியது, இதன் மூலம் CO2, மீத்தேன், அடிவளிமண்டல ஓசோன், குளோரோபுளோரோகாபன், நைட்ரஸ் ஆக்சைடு வளிமங்களில் இருந்தான கதிர்வீச்சு திணிப்பிற்கு இட்டுச் செல்கிறது. 1700களின் நடு ஆண்டுகள் தொடக்கம் வளிமண்டலத்தில் CO2, மீத்தேனின் செறிவு முறையே 36% மற்றும் 148% ஆல் கூடியிருக்கிறது.[22] பனிக் கருவங்களிலிருந்து நம்பகமான தரவுகள் பெறப்பட்டுள்ள கடந்த 650,000 ஆண்டுகளைவிட இந்த அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு கூடுதலானவையாகும்.[23] நேரில் புவியியல் தரவுகளின் படி வளிமண்டலத்தில் இந்த அளவு CO2 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே நிலவுலகில் காணப்பட்டது.[24] கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு மாந்த நடவடிக்கைகளின் போது எரிக்கப்பட்ட புதைபடிவ எரிபொருள் மூலமே கூடியிருக்கும் CO2 அளவில் சுமார் முக்கால் பங்கிகு உமிழப்பட்டுள்ளது. மிகுதி CO2 அளவில் பெருமளவு காடழிப்பை முதன்மையகக் கொண்ட நில-பயன்பாடு மாற்றத்தினால் உமிழப்பட்டுள்ளது.[25]

புதைபடிவ எரிமங்களின் எரிப்பு நில-பயன்பாடு மாற்றம் கரணியமாக CO2 செறிவு கூடிச்செல்கிறது. எதிர்காலத்தில் CO2 செறிவு கூடிச்செல்லும் வேகம் பொருளாதார, சமுக, தொழில்நுட்ப, இயற்கை துறைகளில் ஏற்படும் வளர்ச்சிகளில் தங்கியுள்ளது. தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் (IPCC) வளிம உமிழ்வு சூழல்கள் மீதான சிறப்பு அறிக்கையில் 2100 ஆம் ஆண்டில் CO2வின் செறிவுக்கு 541 ppm முதல் 970 ppm வரை ஒரு பரந்த வீச்சை கொடுத்துள்ளது.[26] நிலக்கரி, தார் மணல், மீத்தேன் சோமம் ஆகியவை அளவுக்கு மீறி பயன்படுத்தப்படுமானால் புதைபடிவ எரிமங்களே குறித்த அளவை எட்டுவதற்கு போதுமானவை என்பதோடு 2100 ஆம் ஆண்டு தாண்டியும் உமிழ்வுகள் தொடரக் கூடும்.[27]

குளோரோபுளோரோகாபன்களால் மேல் வளிமண்டல ஓசோன் படை அழிக்கப்படுதல் சிலவேளைகளில் புவிசூடாதலுக்குக்கு ஒரு கரணியமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஒசோன் படை அழிவிற்கும் புவிசூடாதலுக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. மேல் வளிமண்டல ஓசோன் அழிவு ஒரு குளிர்விக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது, ஆனால் 1970களின் பிற்பகுதி வரையில் ஓசோன் ஓட்டையின் பெரும்பகுதி ஏற்பட்டிருக்கவில்லை.[28] கீழ் வளிமண்டலத்தில் ஓசோன் காணப்பட்டால் அது புவி சூடாதலுக்கு கரணியமாகிறது.[29]

வளிதொங்கல்களும் புகைக் கரியும்

ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கரையில் கப்பல் சென்ற பாதைகளுக்கு மேலாக அவை விட்டுச் சென்ற வளித்தொங்கல்களைக் காணலாம்.

நிலவுலகின் மேற்பரப்பில் கிடைக்கப்பெறும் ஒளிக்கதிர்களின் அளவு குறந்துச் செல்லுதல் நிகழ்வான புவி மங்குதல் 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புவி சூடாதலை பகுதியளவில் எதிரீடு செய்துவந்துள்ளது.[30] மாசுக்களாலும் எரிமலைகளாலும் உற்பத்திச்செய்யப்படும் வளித்தொங்கல்கள் நிலவுகு மங்களுக்கும் முக்கிய கரணியமாகும். உள்வரும் சூரிய ஒளியின் தெறிப்பைக் கூட்டுவதன் மூலம் இவை ஒரு குளிர் விளைவை ஏற்படுத்துகின்றன. புதைபடிவ எரிமங்களின் எரிப்பின் போது வெளியாகும் கரியமில வளிமத்தால் (CO2) உண்டாகும் சூடாக்கும் விளைவை அதே எரிப்பில் வெளியாகும் வளித்தொங்கல்கள் இல்லாது செய்து விடுகின்றன, எனவே அண்மைய ஆண்டுகளில் உள்ள வெப்பநிலை கூடுதலுக்கு கரியமில வளிமமல்லாதா ஏனைய வெப்பசிக்குறுத்தும் வளிமங்களே கரணியம் என சேம்சு என்சன்னும் (James Hansen) அவரது சகாக்களும் ஒரு கோட்பாட்டை முன்மொழிந்திருக்க்கின்றனர்.[31]

சூரிய வெளியீடு மாற்றம்

கடந்த முப்பது வருடங்களில் சூரிய வெப்ப மாறுபாட்டின் அளவு.

சூரிய வெபியீட்டில் ஏற்படும் மாற்றங்கள் இறந்தகாலத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்து கரணியமாக இருந்துள்ளது.[32] இருப்பினும் சூரிய வெளியீட்டில் உள்ள மாற்றம் அண்மைய நிலவுலகுச் சூடாதலுக்கு போதாது என்பது பொதுவான கருத்து.[33][34] சில ஆய்வுகள் இப்பொதுக்கருத்தை பொய்பிக்கின்றன, இவ்வாய்வுகளின் படி சூரிய வெளியீட்டினால் ஏற்படும் நிலவுலகுச் சூடாதல் விளைவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.[35][36]

வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களும் சூரிய திணிப்புகளும் வெப்பநிலையை வெவ்வேறுவிதமாக பாதிக்கின்றன. இரண்டு கரணியங்களின் கூடுகையானது அடிவளிமண்டலத்தின் வெப்பநிலையைக் கூட்டும் அதேவேளை சூரிய திணிப்பின் கூடுகை அடுக்குமண்டலத்தை சூடாக்குவதோடு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் கூடுகை அடுக்குமண்டலத்தை குளிர்விக்க வேண்டும்.[2] 1979 இல் செயற்கைக்கோள் அளவீடுகள் கிடைக்கப்பெற்றது முதல் அடுக்குமண்டலத்தின் வெப்பநிலை சீராகவோ அல்லது குறைவதாகவோ உள்ளது.அதற்கு முன்னர் தட்பவெப்பநிலை பலூன் அளவீடுகளையும் உள்ளடக்கினால் 1958 ஆம் ஆண்டு முதல் அடுக்குமண்டலம் குளிர்வடைவதைக் காணலாம்.

என்றிக் சிவென்சுமார்க் (Henrik Svensmark) முன்வைத்துள்ள கருதுகோளின் படி, சூரிய காந்த செயற்பாடுகள் அண்டக் கதிர்களை விலகச் செய்கிறது இதனால் முகில்கள் உருவாக தொடக்கப் புள்ளியாக செயற்படும் துகல்கள் பாதிக்கப்பட்டு முகில் துவக்கம் தடைப்படுகிறது. முகில்கள் ளால் மேக விதைப்பால் பெருக்கப்பட்டு, சமீபத்திய வெப்பநிலை அதிகரிப்பிற்கு காரணமாகியிருக்கலாம் என்பது தான் அது.[37] ஏனைய ஆய்வுகள் அண்டக் கதிர்களுக்கும் நிலவுலகுச் சூடாதலுக்கும் தொடர்பில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.[38][39] அண்மைய ஆய்வின் படி ஆண்டக் கதிர்களுக்கும் முகிழ் தோற்றத்துக்குமான தொடர்பு, முகிலில் நிகழ்ந்த மாற்றத்தைவிட நூறுமடங்கு சிறியதாகுயம்.[40]

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==

பின்னூட்டங்கள்

வெப்பமடையும் போக்கு தொடர்ந்து கூடுதலான வெப்பமடைதலுக்கு தூண்டும் விளைவுகளில் முடிகிற சமயத்தில், அது ஒரு நேர்மறை எதிரொலியாக குறிப்பிடப்படுகிறது; விளைவுகள் குளிர்விப்பைத் தூண்டுவதானால், அந்த நிகழ்முறை எதிர்மறை எதிரொலியாக குறிப்பிடப்படுகிறது. அடிப்படை நேர்மறை எதிரொலியில் நீராவி அடங்கியிருக்கிறது.அகச்சிவப்பு கதிர்வீச்சு உமிழ்வில் வெப்பநிலையின் விளைவே அடிப்படை எதிர்மறை எதிரொலியாகும்: ஒரு பொருளின் வெப்பநிலை உயரும்போது, அதன் தனிமுதல் வெப்பநிலையின் நான்காவது அடுக்கு அளவாக உமிழப்படும் கதிர்வீச்சு அதிகரிக்கிறது.'[41] இது நாளடைவில் காலநிலை அமைப்பை ஸ்திரப்படுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த எதிர்மறை எதிரொலியை வழங்குகிறது.

நீராவி பின்னூட்டம்
வளிமண்டலம் வெப்பமடையும் போது, நிரம்பலாவியமுக்கம் கூடுகின்றது இதன் போது வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு கூடும். நீராவி ஒரு வெப்பம் சிக்குறுத்தும் வளிமமாகையால் நீராவியின் கூடுகை வளிமண்டலத்தை மேலும் வெப்பமடையச் செய்கிறது; இந்த வெப்பமடைதலானது வளிமண்டலம் இன்னும் கூடுதல் நீராவியைப் பிடித்துக் கொள்வதற்கு கரணியமாகிறது. மற்ற நிகழ்முறைகள் பின்னூட்டச் சுற்றை நிறுத்தும் வரையில் இது தொடரும். இதன் விளைவாக கரியமில வளிமத்தை விடக் கூடுதலான அளவு வெப்பம் சிக்குறுத்தப்படுகிறது.இந்த பின்னூட்டச் சுற்றிந் போது வளிமண்டலத்திலுள்ள நீராவியின் அளவு கூடினாலும் சாரீரப்பதன் ஒரே அளவில் காணப்படும் அல்லது சிறிது குறைவைக்காட்டும்.[42]
முகில் பின்னூட்டம்
சூடாதல் மூலம் முகிலின் வகையும் பரம்பலும் வேறுபடும். முகில்கள் அகச்சிவப்பு கதிர்களை மீண்டும் மேற்பரப்பு நோக்கிச் செலுத்துகின்றன எனவே ஒரு வெப்பமூட்டும் விளைவை செலுத்துகின்றன, அதே முகில்கள் சூரிய ஒளியைப் தெறிக்கச் செய்வதோடு விண்வெளிக்கு அகச்சிவப்பு கதிர்களையும் உமிழ்கின்றன, எனவே ஒரு குளிர்விப்பு விளைவை ஏற்படுத்துகின்றன. நிகர விளைவு வெப்பமூட்டுவதா அல்லது குளிர்விப்பதா என்பது, முகிலின் வகை, அதந் உயரம் போன்றவற்றில் தங்கியுள்ளது. இதன் விளைவு தட்பவெப்பநிலை மாதிரிகளில் குறிப்பதற்கு கடினமானதாக உள்ளது.[42]
உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதம்
அடிவளிமண்டலத்தில் உயரம் கூடும் போது வளிமண்டலத்தின் வெப்பநிலை குறைகிறது. அகச்சிவப்பு கதிர்வீச்சு உமிழ்வானது வெப்பநிலையின் நான்காவது அடுக்கு தொடர்புடன் மாறுவதாய் இருப்பதால், மேல் மட்ட வளிமண்டல அடுக்குகளில் இருந்து விண்வெளி நோக்கி உமிழப்படும் நெட்டலை கதிர்வீச்சு கீழ்மட்ட வளிமண்டலத்திலிருந்து மேற்பரப்பு நோக்கி உமிழப்படுவதை விடவும் குறைவானதாய் இருக்கும். இவ்வாறாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமை வளிமண்டலத்தில் உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதத்தில் தங்கியுள்ளது. நிலவுலகு சூடாதல் உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிததைச் குறைப்பதாக தட்பவெப்பநிலை மாதிரிகளும் கோட்பாடுகளும் எடுத்துக்காட்டுகின்றன. நிலவுலகு சூடாதலின் போது உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதம் குறையும், இதன் போது வெப்பம் சிக்குறும் வலிமை குறையும். இது ஒரு மறை பீன்னூட்டச் சுற்றாகும். வெப்பநிலை அளவிடும் போதுள்ள சிறிய அளவிலான பிழைகள் உயரத்திற்கேற்ப வெப்பநிலை மாறுபாடுவிகிதத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யும். இதனால் மாதிரிகள் அளவீடுகளுடம் ஒத்திப்போகிறதா என்பதை அறிய முடியாதுள்ளது.[43]
பனி-வெண் எகிர்சிதறல் பின்னூட்டச் சுற்று
கடல் பனியின் ஒரு பகுதியைக் காட்டும் மேலிருந்தான புகைப்படம்.வெளிர் நீல பகுதிகள் உருகிய குளங்களைக் காட்டுகின்றன, அடர்ந்த பகுதிகள் திறந்த நீர்ப்பரப்பு பகுதியாகும், இரண்டுமே வெள்ளை கடல் பனியைக் காட்டிலும் குறைவான அல்பீடோ அளவைக் கொண்டிருக்கின்றன.உருகும் பனியானது பனி-அல்பீடோ எதிரொலிக்கு பங்களிக்கிறது.
மற்றுமொரு முக்கிய எதிரொலி நிகழ்முறை பனி-அல்பீடோ எதிரொலியாகும்.[44] உலக வெப்பநிலைகள் அதிகரிக்கும்போது, துருவப்பகுதிகளில் இருக்கும் பனி அதிகமான வேகத்தில் உருகுகிறது.பனி உருகும்போது, நிலமோ அல்லது திறந்த நீர்ப்பரப்போ அதனிடத்திற்கு வருகிறது.நிலமோ அல்லது திறந்த நீர்ப்பரப்போ சராசரியாக பனியை விட குறைவான பிரதிபலிப்பு திறனுடனே இருக்கின்றன, எனவே கூடுதலான சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுகின்றன.இது கூடுதலான வெப்பமூட்டலுக்கு காரணமாகி, அதன் விளைவாக பனி உருகுவதும் கூடுதலாக நிகழ்கிறது, இந்த சுழற்சி தொடர்கிறது.ஆர்க்டிக் சுருக்கம் ஏற்கனவே துரிதமாகி விட்டது, 2007 இல் தான் கடல் பனி பகுதி மிகவும் குறைவாக பதிவாகியிருக்கிறது.
ஆர்டிக் மீத்தேன் வெளியேற்றம்
நிலப்பரப்பு மற்றும் ஆழக் கடல் படுகைகள் ஆகிய இரண்டு ஆதாரங்களில் இருந்தும் மீத்தேன் வெளியிடப்படுவதற்கு வெப்பமடைதல் ஒரு முடுக்கும் மாறிலியாகவும் இருக்கிறது, இந்த இரண்டு சாத்தியமுள்ள எதிரொலி விளைவுகளையும் உருவாக்கும் வகையில். சைபீரியா வில் உள்ள உறைந்த நிலக்கரி சதுப்பு போன்று, நெகிழ்வுறும் நிரந்தரப் பனி யானது CO/2 மற்றும் CH4[45] வெளியிடலின் காரணமாக ஒரு நேர்மறை எதிரொலியை உருவாக்குகிறது.நிரந்தரப் பனியில் இருந்தான மீத்தேன் வெளியீடு இப்போது தீவிர ஆராய்ச்சியின் கீழ் இருக்கிறது.இதேபோல, கிளாத்ரேட் துப்பாக்கி கருதுகோள் படி ஆழக் கடல் பகுதிகளின் வெப்பநிலைகள் அதிகமாகும் சூழ்நிலைகளிலும் பரந்த ஆழமான கடல் பகுதிகளில் இருக்கும் மீத்தேன் கிளாத்ரேட்/மீத்தேன் ஹைட்ரேட் படிவுகளின் 'உறைந்த நிலையில்' இருந்து கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் வெளியிடப்படலாம்.
கரியமில வளிமத்தை உறிஞ்சும் அளவு குறைதல்
கார்பனை பிரித்துவைப்பதற்கான கடல் சூழலமைப்புகளின் திறன் அது வெப்பமடையும் போது குறையலாம் எனக் கருதப்படுகிறது.இதன் காரணம் மீசோப்லஜிக் மண்டலத்தின் ஊட்டச்சத்து அளவு குறைந்து (சுமார் 200 முதல் 1000 மீ ஆழத்திற்கு) அது கடலடி டையடம் நுண்பாசிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதற்குப் பதிலாக கார்பனின் உயிரியல் பம்புகளாக செயல்படுவதில் திறன் குறைந்த அளவில் சிறிய பைட்டோபிளாங்க்டனின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன.[46]

காலநிலை மாதிரிகள்

Calculations of global warming prepared in or before 2001 from a range of climate models under the SRES A2 emissions scenario, which assumes no action is taken to reduce emissions.
The geographic distribution of surface warming during the 21st century calculated by the HadCM3 climate model if a business as usual scenario is assumed for economic growth and greenhouse gas emissions. In this figure, the globally averaged warming corresponds to 3.0 °C (5.4 °F).

விஞ்ஞானிகள் காலநிலை குறித்த கணினி மாதிரிகள் கொண்டு புவி வெப்பமடைதலை ஆய்ந்திருக்கிறார்கள்.இந்த மாதிரிகள் நீர்ம இயங்கியல், கதிர்வீச்சு வழி இடமாற்றம், மற்றும் பிற நிகழ்முறைகளின் இயற்பியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை, கணினியின் திறனில் உள்ள வரம்புகள் மற்றும் காலநிலை அமைப்பின் சிக்கலான வடிவம் இவற்றின் காரணமாக எளிமைப்படுத்தல்கள் அவசியமாயிருக்கிறது.அனைத்து நவீன காலநிலை மாதிரிகளும் ஒரு கடல் மாதிரி மற்றும் நீர் மற்றும் கடல் மீதான பனி உறைகளுக்கான மாதிரிகள் இவற்றுடன் பிணைந்த ஒரு வளிமண்டல மாதிரியை உள்ளடக்கி இருக்கின்றன.சில மாதிரிகள் வேதியியல் மற்றும் உயிரியல் நிகழ்முறைகளின் முறைகளையும் உள்ளடக்கி இருக்கின்றன.[47] இந்த மாதிரிகள் எல்லாம் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதிகரித்துள்ள நிலைகளின் காரணமாய் காலநிலை வெப்பமுற்றுள்ளதைக் காட்டுகின்றன.[48] இருந்தாலும், வருங்கால கிரீன்ஹவுஸ் வாயு அளவுகளுக்கான அதே அனுமானங்களை பயன்படுத்தினாலும் கூட, அங்கு தொடர்ந்து காலநிலை உணர்திறனின் ஒரு குறிப்பிடத்தக்க வரம்பு இன்னும் தொடர்ந்து இருக்கிறது.

வருங்கால கிரீன்ஹவுஸ் வாயு செறிவுகள் மற்றும் காலநிலை மாதிரிகளின் நிச்சயமற்ற தன்மைகள் உள்ளடங்கிய நிலையில், 1980-1999 வரையான ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 21 ஆம் நூற்றாண்டின் நிறைவுக்குள் அளவு 1.1 °C to 6.4 °C(2.0 °F to 11.5 °F) வெப்பமடைதலை IPCC மதிப்பிடுகிறது.[1]சமீபத்திய காலநிலை மாற்றத்திற்கான காரணங்களை, கவனிக்கப்படுகிற மாற்றங்களை பல்வேறு இயற்கையான மற்றும் மனிதரால்-உருவாகும் காரணங்களினால் உருவாகக் கூடிய மாற்றங்களாக மாதிரிகளால் கணிக்கப்படுகிறவற்றுடன் ஒப்பிட்டு பார்த்து, ஆய்வு செய்வதற்கும் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நடப்பு காலநிலை மாதிரிகள் சென்ற ஆண்டின் உலகளாவிய வெப்பநிலை மாற்றங்கள் விஷயத்தில் நன்கு பொருந்தக் கூடியவையாக இருக்கின்றன, ஆனால் காலநிலையின் அனைத்து அம்சங்களையும் கணிக்கக் கூடியனவாய் இல்லை.[49] இந்த மாதிரிகள் எல்லாம் சுமார் 1910 முதல் 1945 வரையான காலத்தில் நிகழ்ந்த வெப்பமடைதலுக்கு இயற்கை மாறுபாட்டையோ அல்லது மனித விளைவுகளையோ குழப்பமின்றி காரணமாய் காட்டவில்லை; என்றாலும் 1975 ஆம் ஆண்டில் இருந்தான வெப்பமடைதலுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு வெளியீடுகளின் காரணம் தான் மேலோங்கியதாக இருக்கிறது என்று அவை கருத்து தெரிவிக்கின்றன.

வருங்கால காலநிலை மீதான புவி காலநிலை மாதிரி கணிப்புகள் எல்லாம் தவிர்க்கவியலாத கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு சூழ்நிலைகளால்,

பெரும்பாலும் IPCC உமிழ்வுகள் சூழ்நிலைகள் மீதான சிறப்பு அறிக்கையில் (SRES) இருந்தானவற்றால், நிர்ப்பந்திக்கப்படுகின்றன.சில சந்தர்ப்பங்களில், மாதிரிகள் கார்பன் சுழற்சியின் ஒரு செயற்கைத் தூண்டலையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்; பொதுவாக இந்த மறுமொழி நிச்சமயமற்றது என்றாலும் இது பொதுவாக ஒரு நேர்மறை எதிரொலியை காட்டுகிறது. சில பரிசோதனை ஆய்வுகளும் கூட

நேர்மறை எதிரொலியைக் காட்டுகின்றன.[50][51][52]"வடக்கு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் வெப்பமண்டலப் பகுதிகளின் இயற்கை காலநிலை மாறுபாடுகள் கணக்கிடப்பட்ட ஆந்த்ரோபோஜெனிக் வெப்பமடைதலை தற்காலிகமாக தணிக்கும் என்பதால் புவிப் பரப்பு வெப்பநிலை அடுத்த தசாப்த காலத்தில் அதிகரிக்காது எனக் கருதலாம்" என்று பெருங்கடல் வெப்பநிலை பரிசோதனைகளை உள்ளடக்கியதன் அடிப்படையில், ஒரு சமீபத்திய ஆய்வறிக்கை கருத்து தெரிவிக்கிறது.[53]

மேகங்களின் பிரதிநிதித்துவம் என்பது நடப்பு-தலைமுறை மாதிரிகளில் நிச்சயமற்ற தன்மைக்கு முக்கிய மூலாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது, இந்த பிரச்சினையில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என்றாலும் கூட.[54]

காலநிலை மாதிரி உருவாக்கங்களில் ஒரு சிறு பிரச்சினை என்னவென்றால் உண்மையான சூழ்நிலைகளுக்கும் மாதிரிகளால் கணக்கிடப்படுவனவற்றுக்கும் இடையில் உணரப்படும் பொருத்தமின்மை.2007 இல் டேவிட் டக்டஸ் மற்றும் அவரது சகாக்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, 22 முன்னணி புவி காலநிலை மாதிரிகளின் கூட்டு முடிவுகளை உண்மையான காலநிலை தரவுகளுடன் ஒப்பிட்டு, இந்த மாதிரிகள் வெப்பமண்டல பகுதியின் அடிவளிமண்டலத்தில் உள்ள வெப்பநிலை தன்மைகளில் காணப்பட்ட மாற்றங்களை துல்லியமாக கணக்கிட்டிருக்கவில்லை என்று கண்டறிந்தது.அவர்களது முடிவுகள் அடிப்படையில் அதே தரவுகளின் அடிப்படையில் வந்த சமீபத்திய வெளியீடுகளின் முடிவுகளில் இருந்து தீவிரமாக முரண்படுவதாக இதன் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.[55]லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் பென் சான்டர் (Ben Santer) தலைமையிலான 17-உறுப்பினர் குழு ஒன்றினால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று டக்ளஸ் ஆய்வில் தீவிரமான கணிதப் பிழைகளும், பிழையான அனுமானங்களும் இருப்பதாகக் குறிப்பிட்டது, டக்ளஸ் ஆய்வு கூறியதற்கு மாறாக மாதிரிகளுக்கும் அளவிடப்பட்டவற்றிற்கும் இடையிலான விலக்கங்கள் புள்ளிவிவரரீதியாக பெரியதாக ஒன்றும் இருக்கவில்லை என்று அது கண்டது.[56]

காரணம் கூறப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள்

சுற்றுச்சூழல் ரீதியான

1800களின் ஆரம்பத்தில் இருந்து பனியாறுகள் பின்வாங்கத் துவங்கியிருப்பதாக பரவலான இடங்களில் இருக்கும் பதிவேடுகள் சுட்டிக் காட்டுகின்றன.1950களில் பனியாறுகளின் நிறை சமநிலையை கண்காணிக்க அனுமதிக்கக் கூடிய அளவீடுகள் துவக்கப்பட்டன, அவை WGMS மற்றும் NSIDC க்கு தெரிவிக்கப்பட்டன.

குறிப்பிட்ட காலநிலை நிகழ்வுகளை புவி வெப்பமடைவதுடன் தொடர்புபடுத்துவது கடினம் என்றாலும் கூட, புவி வெப்பநிலைகளின் அதிகரிப்பானது பனியாறு பின்வாங்கல், ஆர்க்டிக் சுருக்கம், மற்றும் உலகளாவிய அளவில் கடல் மட்ட அதிகரிப்பு ஆகியவை உள்ளிட்ட பெரும் மாற்றங்களுக்கு காரணமாக முடியும்.வீழ்படிவு நிகழ்வின் அளவு மற்றும் தன்மையிலான மாற்றங்கள் வெள்ளம் மற்றும் வறட்சிக்கு காரணமாகலாம்.அதீத காலநிலை நிகழ்வுகள் நிகழும் எண்ணிக்கை மற்றும் தீவிரத்திலும் கூட மாற்றங்கள் இருக்கலாம்.விவசாய விளைச்சல்களில் மாற்றங்கள், புதிய வர்த்தக பாதைகளின் சேர்ப்பு,[57] குறைந்து போகக் கூடிய கோடை ஓடைப்பாய்வுகள், உயிரினங்களின் அழிவுகள், மற்றும் நோய் வெக்டார்களின் வரம்பிலான அதிகரிப்புகள் ஆகியவை பிற விளைவுகளில் அடக்கம்.

இயற்கை சூழல் மற்றும் மனித வாழ்க்கை இரண்டின் மீதான சில விளைவுகளில், குறைந்தது ஒரு பகுதிக்கேனும், ஏற்கனவே புவி வெப்பமடைதல் தான் காரணமாகக் கூறப்படுகிறது.பனியாறு பின்வாங்கல், லார்சன் பனித் தட்டு போன்ற பனித் தட்டு இடையூறு, கடல் மட்ட அதிகரிப்பு, மழைப்பொழிவு தன்மைகளிலான மாற்றங்கள், மற்றும் அதீத காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எல்லாம் புவி வெப்பமடைதலும் ஒரு பகுதி காரணம் என்று IPCC இன் 2001 ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.[58] சில பிராந்தியங்களில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் மற்ற பிராந்தியங்களில் வீழ்படிவு நிலை அதிகரிப்பு, மலை பனிமூடிய பகுதிகளிலான மாற்றங்கள், மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால் விளையும் சுகாதார பாதிப்புகள் ஆகியவையும் பிற எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் அடங்கும்.[59]

புவி வெப்பமடைதலின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி அதிகரிப்பால் தீவிரமடையக் கூடும்.குளிர் தாக்குதல் இல்லாததால் இறப்பு விகிதம் குறைவது போன்ற சில அனுகூலங்களை வெப்ப பிராந்தியங்கள் அனுபவிக்கும் என்று கணக்கிடப்படுகிறது.[60] சாத்தியமுள்ள விளைவுகள் மற்றும் சமீபத்திய புரிதல் குறித்த ஒரு சுருக்கத்தை IPCC மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கைக்காக செயல் குழு II தயாரித்த அறிக்கையில் காண முடியும்.[58] புதிய IPCC நான்காவது மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்கம் கூறுவது என்னவென்றால், கடல் பரப்பு வெப்பநிலை அதிகரித்ததுடன் தொடர்புபட்டு (அட்லாண்டிக் பலதசாப்த ஊசலாட்டம் என்பதைக் காணவும்) சுமார் 1970 முதல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிர வெப்பமண்டல சூறாவளி செயல்பாடு அதிகரித்திருப்பதற்கு பதிவாகியிருக்கும் சான்று இருக்கிறது, ஆனால் நீண்ட கால போக்குகளின் கண்டறிவு வழக்கமான செயற்கைக்கோள் பதிவு அளவீடுகளுக்கு முந்தைய பதிவேடுகளின் தரத்தினால் சிக்கற்பட்டதாக இருக்கிறது.உலகளாவிய வெப்பமண்டல சூறாவளிகளின் வருடாந்திர எண்ணிக்கையில் தெளிவான போக்கு எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த சுருக்கம் தெரிவிக்கிறது.[1]

கூடுதலாக எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் 1980-1999 உடன் ஒப்பிடும்போது 2090-2100 இல் 0.18 to 0.59 meters (0.59 to 1.9 ft) கடல் மட்ட அதிகரிப்பு,[1]

விவசாயத்தின் மீதான தாக்கங்கள், தெர்மோஹலைன் சுழற்சியின் மந்த சாத்தியம், ஓசோன் அடுக்கில் தேய்வு, தீவிரம் அதிகமான (ஆனால் எண்ணிக்கை குறைவதாக) [61]சூறாவளிப் புயல்கள் மற்றும் அதீத காலநிலை நிகழ்வுகள், பெருங்கடல் pH அளவு குறைவது, பெருங்கடல்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவது,[62] மற்றும் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய நோய்களும்,[63][64] இதேபோல் லைம் நோய், ஹண்டாவைரஸ் தொற்றுகள், டெங்கு காய்ச்சல், புபோனிக் பிளேக் , மற்றும் காலரா ஆகியவை பரவுவது ஆகியவையும் அடக்கம்.[65] 1,103 விலங்குகள் மற்றும் தாவர உயிரின வகைகளின் மாதிரி ஒன்றில் இருந்து 2050 ஆம் ஆண்டுக்குள் 18% முதல் 35% வரை அழிந்து போயிருக்கும் என்று வருங்கால காலநிலை கணக்கீடுகளைக் கொண்டு ஒரு ஆய்வு மதிப்பிட்டிருக்கிறது.[66] இருப்பினும், சில இயக்கவியல் ஆய்வுகள் சமீபத்திய காலநிலை மாற்றத்தால் [67] விளைந்த இனஅழிவுகளை ஆவணப்படுத்தியிருக்கின்றன, இனமழிவது குறித்து மதிப்பிடப்பட்டிருக்கும் விகிதங்கள் நிச்சயமற்றவை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.[68]

பொருளாதார

உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தினால் விளைந்த சேதாரங்களின் மொத்த பொருளாதார செலவுகளை மதிப்பிட சில பொருளாதார நிபுணர்கள் முயன்றிருக்கிறார்கள்.இத்தகைய மதிப்பீடுகள் இதுவரை எந்த ஒரு தீர்மானமான கண்டறிவுகளையும் வழங்கியிருக்கவில்லை; 100 மதிப்பீடுகளில் ஒரு கருத்தாய்வு செய்ததில், மதிப்புகள் கார்பன் ஒரு டன்னுக்கு (tC) US$-10, கார்பன்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$-3 இல் தொடங்கி ஒரு tCக்கு US$ 350 (கார்பன்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$95) வரை இருந்தது, சராசரி மதிப்பு கார்பன் ஒரு டன்னுக்கு US$43 (கார்பன்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$12) ஆக இருந்தது.[60]

சாத்தியமுள்ள பொருளாதார தாக்கத்தின் மீது மிகவும் பரவலாக பிரபலமான அறிக்கைகளில் ஒன்று இந்த திட்டவட்ட மறுஆய்வு .அதீத காலநிலையானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு சதவீதம் குறைக்கக் கூடும் என்றும், மோசமான நிலைமைகளின் கீழ் உலகளாவிய தனிநபர்நுகர்வு 20 சதவீதம் குறையக் கூடும் என்று இது கருத்து தெரிவிக்கிறது.[69] இந்த அறிக்கையின் வழிமுறைகள், ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் பல பொருளாதார வல்லுநர்களால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது, முக்கியமாக மறுஆய்வின் தள்ளுபடி செய்தல் மீதான அனுமானங்களையும் மற்றும் அதன் சூழல்கள் தேர்வையும் பற்றிய விஷயத்தில்.[70] மற்றவர்கள் பொருளாதார அபாயத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொல்ல முடியாவிட்டாலும் பொதுவாக அளவீடு செய்யும் முயற்சிக்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.[71][72] புவி வெப்பமடைதலை குறைப்பதற்கான செலவுகளும் ஆதாயங்களும் அளவில் அகன்ற அளவில் ஒப்பிடத்தக்கதாகத் தான் இருக்கிறது என ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[73]

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் கூற்றின் படி (UNEP), காலநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களை சந்திக்க இருக்கும் பொருளாதார துறைகளில் வங்கிகள், விவசாயம், போக்குவரத்து மற்றும் மற்றவை அடக்கம்.[74] விவசாயத்தை சார்ந்திருக்கும் வளரும் நாடுகள் புவி வெப்பமடைதலால் குறிப்பாக பாதிக்கப்படும்.[75]

தகவமைதலும் தணிதலும்

உலகளாவிய வெப்பநிலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதில் காலநிலை விஞ்ஞானிகள் இடையே ஒரு அகன்ற உடன்பாடு நிலவுவது சில நாடுகள், அரசாங்கங்கள் , பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை மறுமொழிகளை அமல்படுத்த இட்டுச் சென்றுள்ளது.புவி வெப்பமடைதலுக்கான இந்த மறுமொழிகள் புவி வெப்பமடைதலின் விளைவுகளுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்வது மற்றும் புவி வெப்பமடைதல் நிகழ்வையே குறைப்பது அல்லது திரும்பச் செய்வது என இருவகைகளுக்கு இடையே அகன்று பிரிவதாக இருக்கிறது.இரண்டாவது தான் தணித்தல் எனக் குறிப்பிடப்படுகிறது, இது உமிழ்வைக் குறைப்பது மற்றும் யூக அடிப்படையில், புவிப் பொறியியல் இரண்டையும் அடக்கியதாகும்.

தணித்தல்

பல சுற்றுச்சூழல் குழுக்கள் புவி வெப்பமடைதலுக்கு எதிராக பெரும்பாலும் நுகர்வோரின் தனிப்பட்ட நடவடிக்கையை ஊக்கப்படுத்துகின்றன, அத்துடன் சமூகம் மற்றும் பிராந்திய அமைப்புகளின் மூலமான நடவடிக்கைகளையும்.மற்றவர்கள் புதைபடிவ எரிபொருள் உற்பத்திக்கும் CO2 வெளியீடுகளுக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை காரணம் காட்டி உலகளாவிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் ஒரு ஒதுக்கீட்டு வரம்பிற்கு ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.[76][77]

எரிசக்தி செயல்திறன் அதிகரிப்பு மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாட்டில் வரம்புக்குள்ளான நகர்வுகள் ஆகியவற்றுக்கான முயற்சிகள் உள்பட, காலநிலை மாற்றம் தொடர்பான வர்த்தக நடவடிக்கையும் இருக்கிறது.ஜனவரி 2005 இல் ஐரோப்பிய ஒன்றியம் தனது ஐரோப்பிய ஒன்றிய வாயு உமிழ்வு வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியது, நிறுவனங்களுடன் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களது வாயு வெளியீடுகளை வரம்புபடுத்துவதற்கு அல்லது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக வெளியிடும் நிறுவனங்களிடம் கடனாக அளவைக் கொள்முதல் செய்ய உதவும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு வர்த்தக திட்டமாகும் இது.ஆஸ்திரேலியா தனது கார்பன் மாசுபாடு குறைப்பு திட்டத்தை 2008 இல் அறிவித்தது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தான் ஒரு பொருளாதார ரீதியான வரம்பு மற்றும் வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.[78]

புவி வெப்பமடைதலுடன் போரிடுவதில் உலகின் முதன்மையான சர்வதேச உடன்பாடு தான் கியோடோ நெறிமுறை, இது 1997 இல் உடன்படிக்கையான UNFCCC இல் திருத்தம் செய்யப்பட்டதாகும்.இந்த நெறிமுறை இப்போது உலகளாவிய அளவில் 160 நாடுகளுக்கும் அதிகமாகவும் உலக கிரீன்ஹவுஸ் வாயு வெளியீடுகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமாகவும் எல்லை கொண்டிருக்கிறது.[79]அமெரிக்காவும் கஜகஸ்தானும் மட்டும் தான் இந்த உடன்படிக்கைக்கு உறுதியளிக்காதவையாக இருக்கின்றன, அமெரிக்கா வரலாற்றுரீதியாக உலகின் இரண்டாவது பெரிய கிரீன்ஹவுஸ் வாயு வெளியீட்டாளராக இருக்கின்ற சூழ்நிலையில்.இந்த உடன்படிக்கை 2012 ஆம் ஆண்டில் காலாவதியாகிறது, தற்போதையதை தொடர்ந்த அடுத்த உடன்படிக்கைக்கான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் மே 2007 ஆம் ஆண்டில் துவங்கின.[80]

காலநிலை மாற்றத்துடன் போரிடுவதற்கான வழியாக மேம்பட்ட எரிசக்தி தொழில்நுட்பத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஊக்குவித்தார்,[81] அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு மாகாண மற்றும் நகர அரசாங்கங்கள் கியோடோ நெறிமுறைக்கு தங்களது இணக்கத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பிராந்திய கிரீன்ஹவுஸ் வாயு முன்முயற்சி போன்ற உள்ளூர் அடிப்படையிலான முன்முயற்சிகளைத் துவக்கியிருக்கின்றன.[82]

புவி வெப்பமடைவதைத் தணிப்பது மற்றும் பல்வேறு அணுகுமுறைகளின் செலவுகள் மற்றும் அனுகூலங்களை ஆராய்வது ஆகியவற்றை கையாளும் அறிக்கைகளை தயாரிப்பதற்கான பொறுப்பு IPCC இன் செயல் குழு III இன் வசம் உள்ளது.2007 ஆம் ஆண்டின் IPCC நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில், எந்த ஒரு தொழில்நுட்பம் அல்லது துறையும் வருங்கால வெப்பமடைதலைத் தணிப்பதற்கான முழுப் பொறுப்பாளியாக முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி வழங்கல், போக்குவரத்து, தொழில்துறை, மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளிலும் முக்கிய நடைமுறைகளும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன, உலகளாவிய வாயு உமிழ்வுகளைக் குறைக்க இவை அமலாக்கப்பட வேண்டும் என்று இவை கண்டிருக்கின்றன.2030 ஆம் ஆண்டுக்குள்ளாக கார்பன் டையாக்ஸைடு நிகரளவு 445 முதல் 710 ppm க்குள்ளாக ஸ்திரப்படும் பட்சத்தில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீத அதிகரிப்பு முதல் மூன்று சதவீத சரிவு வரை காணலாம் என்று அவை மதிப்பிடுகின்றன.[83] செயல்பாட்டுக் குழு III இன் கருத்துப்படி, வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியசுக்குள் வரம்புபடுத்த வேண்டுமென்றால், வளர்ந்த நாடுகள் ஒரு குழுவாக செயல்பட்டு தங்களது வாயு உமிழ்வு அளவுகளை 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக 1990 அளவுகளுக்கு குறைவாக (கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் நாடுகளில் அநேகமானவற்றில் 1990 அளவுகளுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்த அளவான மட்டத்திற்கு) கொண்டுவரவும், 2050 வாக்கில் அதனை விடவும் குறைந்த அளவுகளுக்கு கொண்டு வரவும் (1990 அளவுகளை விட 40 சதவீதம் (Sic. 80 சதவீதம், பெட்டி 13.7, பக். 776) முதல் 95 சதவீதம் வரை குறைந்த அளவிற்கு) வேண்டும், வளரும் நாடுகளும் கூட குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்றாலும் கூட.[84]

கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளைக் குறைப்பதில் நடவடிக்கை மிக மந்தமாக இருப்பது கென் கல்டிரா மற்றும் நோபல் பரிசு பெற்ற பால் கிரட்சன் [85] ஆகிய விஞ்ஞானிகளை புவிப் பொறியியல் தொழில்நுட்பங்களை ஆலோசிக்க இட்டுச் சென்றுள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் விவாதம்

புவி வெப்பமடைதல் குறித்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அதிக விளம்பரம் கிடைப்பது dhdjnbjஅரசியல் மற்றும் பொருளாதார விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.[86] ஏழை பிராந்தியங்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா புவி வெப்பமடைதலினால் மதிப்பிடப்படும் விளைவுகளால் மிகப்பெரும் அபாயத்திற்குட்பட்டிருப்பதாய் தோன்றுகிறது, அவர்களின் வாயு உமிழ்வானது வளர்ந்த உலகுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருக்கின்ற நிலையில்.[87] அதே சமயத்தில் கியோடோ நெறிமுறை ஷரத்துகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதானது ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளதுடன், அமெரிக்கா தனது கையெழுத்திடாமைக்கு கற்பிக்கும் நியாயங்களில் இதுவும் ஒரு பாகமாக பயன்படுகிறது.[88] மேற்கத்திய உலகில், காலநிலை மீதான மனித தலையீடு குறித்த சிந்தனை அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பரந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது.[89][90]

காலநிலை மாற்ற பிரச்சினையானது, தொழிற்துறையினரின் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளை வரம்புபடுத்துவதன் அனுகூலங்களையும் இத்தகைய மாற்றங்கள் கொணரக் கூடிய செலவுகளையும் அலசுவதற்கான விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.கார்பன் வெளியீடுகளைக் குறைக்கும் பொருட்டு மாற்று எரிபொருள் ஆதாரங்களை கைக்கொள்வதின் செலவுகள் மற்றும் அனுகூலங்கள் குறித்து பல்வேறு நாடுகளில் விவாதம் நடைபெற்று வருகிறது.[91]போட்டித்திறன் ஸ்தாபன நிறுவனம் மற்றும் எக்ஸான்மொபில் போன்ற அமைப்புகளும் நிறுவனங்களும் கடுமையான கட்டுப்பாடுகள் கொணரக்கூடிய சாத்தியமான பொருளாதார செலவுகளை வலியுறுத்துகிற அதே நேரத்தில் கூடுதல் மரபார்ந்த காலநிலை மாற்ற சூழல்களை வலியுறுத்தியிருக்கின்றன.[92][93][94][95] இதேபோல, பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களும், ஏராளமான பிரபலங்களும் காலநிலை மாற்றத்தின் சாத்தியமான அபாயங்களை வலியுறுத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளின் அமலாக்கத்தை ஊக்குவிப்பதற்குமான பிரச்சாரங்களை துவக்கியிருக்கின்றனர்.சில புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் சமீபத்திய வருடங்களில் தங்களது முயற்சிகளை மறுசீரமைப்பு செய்திருக்கின்றன,[96] அல்லது புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.[97]

விவாதத்திற்கு உரிய மற்றொரு விஷயமாக இருப்பது, இந்தியா மற்றும் சீனா ஆகிய வளரும் பொருளாதாரங்கள் எந்த அளவிற்கு வாயு உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது.சமீபத்திய அறிக்கைகளின் படி, சீனாவின் மொத்த தேசிய அளவிலான CO2 உமிழ்வுகள் இப்போது அமெரிக்காவினுடையதை விட அதிகமாய் இருக்கலாம்.[98][99][100][101] தனது தனிநபருக்கான கார்பன் வெளியீடு அமெரிக்காவின் அளவில் ஐந்தில் ஒரு பங்கு தான் என்பதால் வாயு வெளியீடுகளைக் குறைப்பதற்கான கடமைப்பாடு தனக்கு குறைவாகவே இருப்பதாக சீனா வாதிட்டு வந்திருக்கிறது.[102] கியோடோ கட்டுப்பாடுகளில் இருந்து விதிவிலக்கு பெற்று தொழில்துறை வாயு வெளியீடுகளின் பெரும் இன்னொரு ஆதாரமாகத் திகழும் இந்தியாவும் இதே மாதிரியான திட்டவட்டங்களையே செய்திருக்கிறது.[103] தான் வாயு உமிழ்வுகளின் செலவை ஏற்க வேண்டும் என்றால், சீனாவும் அதனை செய்ய வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா வாதிடுகிறது.[104]

தொடர்புள்ள காலநிலை நிகழ்வுகள்

புவி வெப்பமடைதல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பல சமயங்களில் எழுப்பப்படுகின்றன.அதில் ஒன்று பெருங்கடல் அமிலமயமாக்கம்.வளிமண்டலத்தின் CO2 அதிகரிப்பானது பெருங்கடல்களில் கரைந்திருக்கும் CO2 அளவை அதிகப்படுத்துகிறது.[105] கடலில் கரைந்திருக்கும் CO2 நீருடன் வினைபுரிந்து கார்பானிக் அமிலமாக மாறி அமிலமயமாக்கத்தில் விளைகிறது.கடல் மேற்பரப்பு pH ஆனது தொழில்துறை சகாப்தம் துவங்கிய காலத்தில் 8.25 ஆக இருந்ததில் இருந்து 2004 ஆம் ஆண்டுவாக்கில் 8.14 வரை குறைந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது,[106] கடலில் கூடுதலான CO2 கரைவதால் 2100 க்குள்ளாக இது இன்னும் 0.14 முதல் 0.5 அலகுகள் வரை குறையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.[1][107] உயிரினங்களும் சூழல்அமைப்புகளும் pH இன் குறுகிய வரம்புக்குள்ளாகத் தான் தகவமைத்துக் கொள்ள முடியும் என்பதால், இது உயிரின அழிவு கவலைகளை எழுப்புகிறது, அதிகரிக்கும் வளிமண்டல CO2 ஆனது உணவு வலைகளை இடையூறு செய்து, நீர்ப்புற சூழல்அமைப்பு சேவைகளை சார்ந்திருக்கும் மனித சமூகங்களின் மீது பாதிப்பு ஏற்படுத்துகிறது.[108]

புவி ஒளிமங்கல் என்பது பூமியின் மேற்பரப்பில் படுகிற பூகோள நேரடி ஒளிவீச்சின் அளவு கொஞ்சம் கொஞ்சமாய் குறைவதாகும், இது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புவி வெப்பமடைதலை ஒரு பகுதி தணித்திருக்கலாம்.1960 முதல் 1990 வரை மனிதரால் ஏற்பட்ட ஏரோசால்கள் இந்த விளைவு வீழ்படிவாகக் காரணமாகி இருக்கலாம்.மனிதரால் ஏற்பட்ட ஏரோசால்கள், எரிமலை செயல்பாட்டுடன் சேர்ந்து, புவி வெப்பமடைதலின் கொஞ்சத்தை இல்லாது செய்திருக்கலாம் என்பதை 66-90% உறுதியுடன் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள், இந்த மங்கலாக்கும் முகவர்கள் இல்லையென்றால் நிகழ்ந்ததை விட அதிகமான வெப்பமடைதல் கிட்டியிருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.[1]

புவியின் மீவளிமண்டலத்தில் இருக்கும் ஓசோனின் மொத்த அளவில் தொடர்ந்த சரிவு நிகழ்வதான ஓசோன் ஓட்டை நிகழ்வானது பல சமயங்களில் புவி வெப்பமடைதலுடன் தொடர்புபடுத்திக் காட்டப்படுகிறது.இணைப்புக்கான பகுதிகள் இருக்கின்றன என்றாலும், இரண்டுக்கும் இடையிலான உறவு வலிமையானதல்ல.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    13 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    13 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.