Monday, May 10, 2010

0

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 29

கடந்த வாரம் ROUNDING BOTTOM என்பது எவ்வாறு நடை பெரும் என்பதினை பற்றி பார்த்தோம், இந்த ROUNDING BOTTOM என்ற நிகழ்வுகளில் நாம் தேர்வு செய்யும் பங்குகளின் நிலைகளை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவது நன்றாக இருக்கும், அதாவது இந்த ROUNDING BOTTOM BUYING என்பது ஒரு மிகப்பெரிய வீழ்ச்சிக்கு பிறகு ஒரு புதிதாக பிறந்தது மறுபடியும் வளர்ந்து பெரிய ஆளாக வேண்டிய நிலையில் இருக்கும் பங்குகளை வாங்குவது ஆகும்,


அதாவது ஒரு மிகப்பெரிய வீரர் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டு தனது பலத்தை முழுவதும் இழப்பதற்கு சமம் ஆகும், மிக பலமான சிகிச்சைக்கு பின்பு அவர் முன்பு போல தனது பலத்தை அடைவாரா! மேலும் முன்னர் அவர் போர்க்களத்தில் செய்த சாகசங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதிய சாகசங்களை செய்வாரா என்று தெரிந்த பின்பு தான் அவரை மறுபடியும் போற்படையில் சேர்ப்பார்கள் இல்லையா அது போல தான்,

2000 ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்து கொண்டிருந்த ஒரு பங்கு 200 ருபாய் அளவிற்கு CORRECTION வந்த பொழுது இரக்கத்தை சந்தித்தது என்றால்! அந்த பங்கு மறுபடியும் முன்னர் விலைக்கு செல்லுமா? மேலும் அந்த விலைகளையும் கடந்து தொடர்ந்து ஏறுமா என்று தெரிந்தால் தான் அந்த பங்கை குறைந்த விலைக்கு வாங்க நமக்கு மனது வரும்,

அதே நேரம் 2000 ரூபாய்க்கு விற்ற பங்கு 200 ரூபாய்க்கு வந்து விட்டதை சாதாரணமாக எண்ணி பாருங்கள், எவளவு பெரிய நட்டத்தை இந்த பங்கு 2000 ரூபாயில் வாங்கியவர்களுக்கு கொடுத்துள்ளது, இந்த பங்கை நம்பி நம்மால் முதலீடு செய்ய முடியுமா? மனசு வருமா? பயம் வராதா? எண்ணி பாருங்கள் சத்யம் பங்குகளை 300 ரூபாய்க்கும் 400 ரூபாய்க்கும் வாங்கி விற்ற நமக்கு 10 ரூபாய்க்கும் 6 ரூபாய்க்கும் வரும் பொழுது வாங்குவதற்கு மனது வந்ததா, மாறாக பயம் தானே வந்தது,

இது போல தான் நன்றாக இறங்கிய பங்குகளை வாங்குவது நமக்கு எப்பொழுது ஓர்வித பயத்தினை தரும், அதே நேரம் இது போன்று நன்றாக இறங்கிய பங்குகளை வாங்குவதற்கு, அதாவது இறங்கினாலும் இந்த பங்கு முதலீடு செய்வதற்கு ஏற்ற பங்கு தான் என்பதினை நிரூபிப்பதற்கு சில விஷயங்கள் உள்ளது, அதாவது குற்று உயிரும் குலை உயிருமாக கிடக்கும் ஒரு வீரரை சோதித்து அவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர் இவர் வெகு விரைவில் குணமடைவார்! முன்பை விட சாகசங்கள் புரிவார் என்று சொன்னால் நமது பயம் தெளிந்து நன்பிக்கை கொள்வோம் இல்லையா!

அது போல்தான் ஒரு நல்ல நம்பிக்கையான மருத்துவராக நமக்கு ஒருவர் இருக்கிறார் அவர்கள்தான் EPS மற்றும் PE RATIO, ஆகவே இவர்களை கொண்டு நன்றாக இறங்கி தற்பொழுது குற்று உயிருமாக குலை உயிருமாக இருக்கும் ஒரு பங்கை தேறுமா தேறாதா என்பதினை இந்த மருத்துவர்கள் கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம், ஆகவே இவர்களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்,,,

EPS

EPS என்பது EARNING PER SHARE என்று அர்த்தமாகும், அதாவது இந்த EPS என்ற அளவு சில எண்களின் வடிவில் நமக்கு கிடைக்கும், அதாவது 10, 12, 15 என்ற எண்களாக, இது போன்ற எண்களை கொண்டு நாம் சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம், அவற்றை பற்றி தொடர்ந்து பார்ப்போம், அதற்கும் முன் EPS என்பது என்ன விதமான விஷயத்தை நமக்கு அறியத்தருகிறது என்பதினை தெரிந்து கொள்வோம்,

பொதுவாக EPS என்பது ஒரு நிறுவனம் தனது வியாபாரங்களின் மூலம் பெரும் லாபங்கள் எவளவு என்பதினை நமக்கு தெரிவிக்கும் ஒரு குறியீடு ஆகும் , இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு மளிகை கடைகாரர் ஒரு மாத காலத்திற்கு தனது வியாபரத்தின் வருமானம் என்ன, இந்த மாதத்தின் செலவு என்ன என்பதினை கூட்டி கழித்து இறுதியாக அவருக்கு கிடைக்கும் லாபம் எவளவு என்பதினை தெரிந்து கொள்வது போல தான்,

பொதுவாக மளிகை கடைக்கு அவர் ஒருவரே உரிமையாளராக இருப்பார், ஆகவே வரும் லாபம் அல்லது நட்டம் முழவது அவரையே சாரும், அதே நேரம் அந்த மளிகை கடைக்கு ஒரு இரண்டு பேர் பாட்னர் என்ற முறையில் இருந்தால் வரும் லாபம் அல்லது நட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளப்படும்,

இவ்வாறு பங்கிட்டுக்கொள்ளப்படும் லாபம் அல்லது நட்டம் ஒரு நபருக்கு சராசரியாக எவளவு என்று சொல்லபடும் இல்லையா, அதாவது ஒருவருக்கு 10000 லாபம் என்றால் அந்த மளிகை கடை மொத்தமாக இந்த மாதம் சம்பாதித்து கொடுத்தது 30000 ருபாய் ஆகும், ஆனால் ஒருவருக்கு 10000 கிடைத்தது என்று தானே சொல்வோம்,

அதே போல்தான் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் ஒரு பெரிய நிறுவனம் தனது வியாபாரத்தின் மூலம் பெரும் லாபத்தினை தனது நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பிரித்து கொடுக்கும், அப்பொழுது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுப்பார்கள், அதே நேரம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முதலீடு செய்து இருப்பார்கள்,

ஒருவர் 50000 ஆயிரம் முதலீடு செய்து இருப்பார், ஒருவர் வெறும் 5000 ஆயிரம் முதலீடு செய்து இருப்பார், அதே நேரம் இரண்டு பேரும் முதலீடு செய்தவர்கள் தான், இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் அந்த நிறுவனம் உழைக்கின்றது, ஆகவே முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்ததிற்கு சமமாக கிடைக்கும் லாபத்தினை பிரித்து கொடுக்க தனது மொத்த லாபத்தையும் எத்தினை பங்குகள் உள்ளதோ அத்தினை பங்குகளுக்கு சமமாக வகுத்து கொடுப்பார்,

இவ்வாறு கொடுக்கும் போது அவரவர் முதலீடுக்கு தகுந்தார்ப்போல் லாபங்கள் வேறுபடும், ஆனால் ஒரு பங்கிற்கான லாபம் அனைவருக்கும் ஒன்று தான், ஆகவே ஒரு நிறுவனத்தின் உண்மையான வியாபாரத்தின் மூலம் (அதாவது ஒரு பொருளை விற்று அல்லது வாங்கி அதன் மூலம் பெறப்படும் லாபம் ) பெறப்படும் ஒரு பங்கிற்கான லாபம் என்ன என்பதினை நமக்கு சொல்வது தான் EPS ஆகும்,

இந்த EPS ஐ கணக்கிடுவதற்க்கான கணக்கீடுகள் :

பொதுவாக நாம் இதனை கணக்கீடு செய்ய வேண்டும் என்பதில்லை, அநேக வலை தளங்கள் இதனை தந்து கொண்டுள்ளது, இருந்தாலும் அதன் கணக்கீடு முறை என்ன என்பதினை தெரிந்து கொள்வது அவசியமே

EPS = Net Profit / Equity Cap * Face Value

அதாவது ஒரு நிறுவனத்திற்கு 10 ருபாய் FACE VALUE மதிப்புள்ள 10 கோடி பங்குகள் இருப்பதாகவும், அந்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு 10 கோடி வருமானம் செய்வதாகவும் கொண்டால், அதன் EPS கீழ் கண்ட முறையில் வரும்

10cr/10cr * 10 = 10,

SO EPS = 10

அதாவது இந்த நிறுவனம் இந்த மாதம் ஒரு பங்கிற்கு 10 ருபாய் லாபமாக கொடுத்துள்ளதாக அர்த்தம், அதவாது உண்மையாக வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது.

சரி அடுத்து PE RATIO பற்றி பார்ப்போம்

பொதுவாக PE RATIO என்பது சந்தையில் ஒரு பங்கு எவ்வாறு வர்த்தகம் ஆகிறது என்பதினை குறிப்பதாகும், இதை நீங்கள் இப்படி எடுத்துக்கொண்டால் சற்று உங்களுக்கு புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்காது, அதாவது ஒரு பங்கு சந்தையில் என்ன லாபம் செய்கிறது என்பதினை குறிக்கும் ஒரு குறியீடு என்ற அளவில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,



இப்படி வைத்துகொண்டால் உங்களுக்கு EPS யும் PE RATIO வையும் ஒப்பிட்டு பார்த்து அதன் மூலம் ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு உபயோகமாக இருக்கும், ஆகவே இப்படியே மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதே நேரம் PE RATIO என்றால் என்ன என்பதினையும் சொல்லி விடுகிறேன் இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்,



அதாவது ஒரு பங்கு உண்மையாக வியாபாரம் செய்து பெரும் லாபத்தினை விட எத்தினை மடங்கு அதிகமாக பங்கு சந்தையில் வர்தகமாகிறது என்பதினை சொல்லும் ஒரு குறியீடு ஆகும், இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்வது பயனுள்ளதாக இருக்கும், அதாவது பங்கு சந்தை எப்பொழுதுமே உண்மையான மதிப்பில் வர்த்தகம் ஆகாது! ஒரு வருடம், இரண்டு வருடம் அல்லது அதற்கும் மேல் வரும் நாட்களில் இந்த நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்திலே தான் வர்த்தகமாகும், ஆதலால் தான் இதனை ஊக வணிகம் என்றும் சொல்கிறோம்,



மேலும் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இருப்பதும் இதனாலேயே தான், இதற்க்கு உதாரணமாக நாம் முன்னர் பார்த்த BUS STAND உதாரணத்தை நினைத்து பாருங்கள், BUS STAND வரும் என்ற ஒரு புரளியினால் அடித்து பிடித்து அதன் அருகில் உள்ள நிலங்களை வாங்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தாயார இருக்கும் வர்த்தகர்களின் செயல்களினாலேயே அதன் விலை அடி மட்டத்தில் இருந்து எங்கோ பறந்து விடுகிறது இல்லையா அது போல்தான்,



இங்கு எப்பொழுதும் இப்படி ஊகத்தின் அடிப்படையில் தான் வர்த்தகம் நடக்கும், என்ன செய்வது! பாம்பு திங்கும் ஊருக்கு போனால் நடுத்துண்டம் கேட்டால் அதான் நமக்கு மதிப்பு, இங்கு இப்படி தான் கண்டுக்கொள்ளாதீர்கள், அதே நேரம் எவளவு தான் ஊகத்தின் அடிப்படையில் ஏறினாலும்! உண்மை என்ற நிலை சில நேரங்களில் வெளிப்படும், அப்பொழுது ஒரு மிகப்பெரிய ஆட்டங்கள் இருக்கும்! அது போன்ற ஆட்டங்களில் தான் பங்குகள் தடாலடியாக பாதாளத்திற்கு வருகிறது,



இப்படி வரும் போது ஒருவரின் உண்மை என்ன பொய் என்ன என்பது அனைவருக்கு தெரியும், இது போன்ற நேரங்களில் இந்த EPS மற்றும் PE RATIO நமக்கு கடவுள் போல் கைகொடுக்கும், இதனை சிறு உதாரண கதை மூலம் சொன்னால் எளிதாக இருக்கும், அதாவது சண்முக பாண்டியன் என்ற ஒரு நண்பர் சென்னையில் வசிப்பதாகவும், அண்ணா நகரில் அவருக்கு ஒரு GROUND நிலம் இருப்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள், அதன் தற்பொழுதைய மதிப்பு 5 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள்,



குடும்ப செலவுக்கென்று நிலையான வருமானமும் இவருக்கு உண்டு, எந்த வம்பு தும்புக்கும் செல்லாத தான் உண்டு தன் வேலை உண்டு என்று OFFICE அதை விட்டால் குடும்பம் என்று வாழ்ந்து வந்த நல்ல நபர், இவரின் அந்த அண்ணா நகரின் இடத்தின் மேல் பக்கத்து வீட்டு நண்பருக்கு ஒரு கண், மனிதன் 5 கோடி தருவதாகவும் கேட்டு பார்த்தார், என்ன செய்வது சண்முகப்பாண்டியன் ஒரே அடியாக மறுத்து விட்டார்,



6 கோடி தருவதாகவும் சொல்லியாகிவிட்டது, முடியாது என்றே மறுத்து விட்டார், வேண்டுமானால் 8 கோடிக்கு தருகிறேன் என்று சண்முகம் சொல்லி விட்டார், அவளவு விலைக்கு வாங்குவது நல்லது இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர் அமைதி ஆகி விட்டார், இதில் சன்முகப்பண்டியனுக்கு ஒரு வித மகிழ்ச்ச்யும் கூட இருந்தது, சத்தம் இல்லாமல் கலரை தூக்கியும் விட்டுக்கொண்டார்,



என்ன செய்வது விதி வேறு மாதிரி இருந்து விட்டது, ஒரு நல்ல நாளில் அவரின் குடும்பத்திற்குள் ஒரு மிகப்பெரிய பூகம்பம், இவரை தவிர அவரின் குடும்பம் மொத்தமும் ஒரு உறவினர் திருமணத்திற்கு CAR இல் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து, அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்தால் கண்டிப்பாக காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையை மருத்துவர் தந்துவிட்டார்,



அதற்க்கு ஈடாக ஒன்னரை கோடியில் இருந்து இரண்டு கோடி செலவு ஆகும் என்று குண்டையும் தூக்கி கையில் குடுத்து விட்டார், என்ன செய்வார் மனிதர், தான் உண்டு தன் வேலை உண்டு என்று குடும்பத்துடன் மட்டும் இருந்த நல்ல மனிதர், என்னதான் சேமிப்பு இருந்தாலும் இவளவு பெரிய தொகை எப்படி!!!!, யோசித்தார் மனிதன் அடுத்த நிமிடம் பக்கத்து வீட்டுக்காரர் முன் நின்றார்,



தனது நிலை விளக்கி அண்ணா நகர் இடத்தை வாங்கும் படி மன்றாடினார், விடுவாரா பக்கத்து வீட்டுக்காரர், இல்லப்பா நீ முடியாதுன்னு சொன்னவுடனே சைதாபேட்டையில் ஒரு இடம் வந்தது வாங்கி விட்டேன், அந்த பணம் இப்போ இல்லையே!, துடித்தே போனார் மனிதன்! அண்ணே நீங்க ஏதாவது பண்ணி வாங்கிக்கணும் எனக்கும் நீங்க சொன்ன பணம் கூட வேண்டாம்! அதில் பாதி குடுங்க போதும் என்று அலறியே விட்டார்,



விடுவாரா நம்ம அண்ணன்! இல்ல சண்முகா என்னிடம் அவளவு பணம் இல்ல இப்போ, கையில் ஒரு கோடி தான் இருக்கு வேண்டுமானால் இருன்னொரு ஒரு கோடி புரட்டி பார்க்கலாம் அதுக்கு மேல முடியாது, அண்ணே என்னன்னே இப்படி சொல்றீங்க தயவு பண்ணுன்கனே, நான் என்ன பண்றது சண்முகா, சரி உனக்காக வேண்டும் என்றால் நகையை அடகு வைத்து இன்னும் ஒரு 50 லட்சம் சேர்த்து தருகிறேன், அதற்கு மேல் என்னால் முடியாது என்றவுடன் வழி இல்லாமல் தாய் பத்திரத்தை கொடுத்து இரண்டரை கோடியை பெற்று கொண்டு சந்தோசமாக குடும்பத்தை காப்பாத்தி விட்டார்,



சண்முகத்திற்கு அடுத்த வீட்டுக்காரர் தெய்வமாக தான் தெரிந்தார், ஆனால் அடுத்த வீட்டுக்காரருக்கு உள்ளுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு, சரி விடுங்கள் நாம் விசயத்திற்கு வருவோம்,



இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொண்டது என்ன, இதற்க்கும் EPS மற்றும் PE RATIO வுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்து விடுவோம், அதாவது சண்முக பாண்டியனின் குடும்பம் விபத்தில் மாட்டிக்கொள்ளாவிட்டால் அவர் அந்த இடத்தை விற்கும் நினைப்புக்கே வந்து இருக்கு மாட்டார்,



அடுத்து சண்முக பாண்டியனின் நிலை அறிந்து பாதி விளைக்கும் வாங்கி விடலாம் என்று யோசித்து அடுத்த வீட்டுக்காரர் வாங்கி விட்டார், இருந்தாலும் அந்த இடத்தின் உண்மையான மதிப்புக்கும் கீழ் கிடைக்கிறது என்றவுடனே தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து வாங்க தயாராக இருந்தார்,



இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது , அதாவது அந்த இடத்தின் மதிப்பு 5 கோடி ஆனால் சன்முகப்பாண்டியனின் குடும்ப நிலை அதை பாதி விலைக்கு விற்க தயாராக அவரை மாற்றி விட்டது, அதே நேரம் 8 கோடிக்கு வாங்க மறுத்த அடுத்த வீட்டுக்காரர் அதன் உண்மையான விளைக்கும் கீழ் கிடைப்பதினால் தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து வாங்க முற்படுகிறார்,



இவளவு RISK எடுக்க இருவருக்கும் காரணம் உள்ளது இல்லையா, அது தான் இங்கு முக்கியம், சந்தை மிகப்பெரிய CORRECTION ஐ சந்திக்கும் போது தனது உண்மையான மதிப்புக்கு அருகில் வரும் வாய்ப்புகள் உண்டு அந்த நேரத்தில் தான் நாம் வாங்க வேண்டும், அதாவது இதனை வேறு ஒரு கோணத்தில் சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம்



அதாவது சன்முகப்பாண்டியனின் குடும்ப சூழ்நிலையை நமக்கு உணர்த்துவது PE RATIO ஆகும், அதே போல் அவரின் அண்ணா நகர் GROUND இன் உண்மையான மதிப்பை நமக்கு உணர்த்துவது EPS ஆகும், இங்கு தனது குடும்ப சூழ்நிலை சரி இல்லாததால் தான் தனது 5 கோடி மதிப்புள்ள இடத்தினை வெறும் இரண்டரை கோடிக்கு விற்கவும் தயாராகிறார்,



அதாவது சந்தை CORRECTION ஐ சந்தித்ததால் தான் PE RATIO இறங்கி வந்துள்ளது, இது போன்ற இறக்கத்தினால் தான் EPS அளவை விட PE RATIO கீழே வரும் , ஆகவே EPS என்பது உண்மையான மதிப்பு, PE RATIO என்பது மாயையான ஊக மதிப்பு, சந்தை எப்பொழுதும் ஊக மதிப்பில் தான் வர்த்தகம் செய்யும்,



அப்படியானால் உண்மையான மதிப்பிற்கு கீழ் ஊக மதிப்பு CORRECTION என்ற காரணத்தினால் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், அடித்து பிடித்து வாங்க வேண்டாமா, ஏனெனில் மறுபடியும் ஊக மதிக்கு சென்று விடும் இல்லையா, அதாவது உங்களிடம் 5 கோடி மதிப்புள்ள சொத்தை 2 கோடிக்கு யாராவது அவரின் சூழ்நிலையின் காரணமாக விற்க முற்ப்பட்டால் வாங்குவீர்களா மாட்டீர்களா? வாங்குவீர்கள் தானே!,



அதே மாதிரி தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான லாபத்தினை குறிக்கும் குறியீடான EPS ஐ விட பங்கு சந்தையில் வர்த்தகமாகும் விலையினை குறிக்கும் குறியீடு குறைந்தால் வாங்குவோமா வாங்கமாட்டோமா, வாங்கி ஆக வேண்டும் இல்லையா, அப்படி தான் EPS ஐ விட குறைவாக எப்பொழுதெல்லாம் ஒரு பங்கின் PE RATIO வர்தகமாகிறதோ அப்பொழுதெல்லாம் நாம் வாங்க வேண்டும்,



இது போன்ற நிகழ்வுகள் எப்பொழுது அனைத்து பங்குகளிலும் ஏற்படும், சந்தை மிகப்பெரிய இறக்கத்தினை சந்திக்கும் போது தான் ஏற்படும், ஆகவே அப்பொழுதெல்லாம் நாம் வாங்க வேண்டும்,

சரி PE RATIO வை எப்படி கணக்கீடு செய்வது அதனை பற்றியும் பார்த்து விடுவோம்



PE RATIO = CMP/EPS



தற்பொழுது அந்த குறிப்பிட்ட பங்கு வர்த்தகமாகும் விலையுடன் முன்னர் நமக்கு கிடைத்த EPS என்ற அளவுடன் வகுத்தால் நமக்கு கிடைக்கும் அளவு PE RATIO ஆகும், இந்த அளவு EPS ஐ விட குறைவாக இருந்தால், 10 ரூபாய் மதிப்புள்ள பொருள் 5 ரூபாய்க்கு கிடைப்பது போல, அதே நேரம் EPS ஐ விட PE RATIO அதிகமாக இருந்தால் 10 ரூபாய் பொருள் 12 ரூபாய்க்கு கிடைப்பது போல, இது லாபம் இல்லை தானே, ஆகவே EPS ஐ விட PE RATIO குறைவாக இருந்தால் வாங்க வேண்டும், அதிகமாக இருந்தால் வாங்கக்கூடாது



உதாரணம்

சந்தையில் ஒரு பங்கின் விலை = 120

அதன் EPS = 10

SO அதன் PE RATIO = 120/10 = 12

இந்த மதிப்பு EPS ஐ விட அதிகம் இருப்பதால் இந்த பங்கை வாங்கக்கூடாது.



அடுத்த ஒரு உதாரணம்

சந்தையில் ஒரு பங்கின் விலை = 80

அதன் EPS = 10

SO அதன் PE RATIO = 80/10 = 80/10 = 8 ,

இந்த மதிப்பு EPS மதிப்பான 10 ஐ விட குறைவாக இருப்பதால் இது நல்ல நிலையில் உள்ளது, ஆகவே இதனை வாங்க வேண்டும்

மேற்கண்ட இரண்டு விசயங்களில் இருந்து நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், ஒரு பங்கு 120 ருபாய் இருக்கும் போது, நமது கணக்கீட்டால் கணக்கிடும் போது அதன் உண்மையான மதிப்பை விட அதிகமான மதிப்பில் இருப்பதால் அதை வாங்க கூடாது, அதே பங்கு CORRECTION ஏற்பட்ட பிறகு 80 ரூபாய்க்கு வரும் போது அதன் மதிப்பு குறைந்துள்ளதால் இப்பொழுது வாங்க வேண்டும் புரிகிறதா,

சரி இந்த பதிவுடன் TECHNICAL ANALYSIS வகுப்புகள் முடிந்தது, அடுத்த பதிவில் தின வர்த்தகர்கள் வர்த்தகத்திற்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன என்பதினை பற்றி பார்த்து விட்டு இனிதே நிறைவு செய்வோம்

0 comments:

0

அழகி ஒருத்தி அரிசி விக்கிறா!


அருகில் உள்ள புகைப்படத்தில் தோன்றும் பெண்ணைப் பார்த்தால் முதலில் என்ன தோன்றுகிறது உங்களுக்கு?

குறைந்த பட்சம் யாரோ ஒரு ஜப்பானிய இளம்பெண் என்றாவது தோன்றும்! நானும் உங்களைப் போலத்தான் நினைத்தேன்.

என்ன, நான் இரண்டு வருடமாக ஜப்பானில் வசித்து வருவதால் ஒரு படி மேலே போய்,"ம்ம்ம்..... இந்த பொண்ணுகூட, ரயில்வண்டிக்குள்ள ஏறி அழகுசாதனப் பெட்டிகூட குடித்தனம் நடத்த ஆரம்பிக்கிற சராசரி பொண்ணுங்கள்ல ஒருத்தியாகத்தான் இருக்குமென்று நினைத்தேன்

அவ்வளவுதான்! ஆனால் அப்படி நினைத்த நீங்களும்(?) நானும் ஏமாந்து விட்டோம்.

சரியாச் சொல்லனும்னா…..இந்த பொண்ணு பாரதி கண்ட புதுமைப்பெண்ணுங்க! என்ன ஒன்னு, ஜப்பானில் வாழ்கிற பாரதி கண்ட புதுமைப்பெண்.

சரி விஷயத்துக்கு வருவோம், இந்தப் பெண்ணுடைய பெயர் ஷிஹொ ஃபுஜிதா.சொந்த ஊர் டோக்கியோவின் ஷிபுயா எனப்படும் நகரம்.

அடிப்படையில் இந்த பெண் ஒரு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்! இவள் தொழில் பெண்களின் அழகு சாதனப் பொருட்கள் சம்பத்தப்பட்டது.

இவள் இணையதளத்தில் மிகவும் பிரபலம் ஜப்பானில்.இவளுக்கு சமுதாயம் சூட்டிய பெயர் ஷிபுயா காள்(shibuya gal) ஆனால் அதுவல்ல விசேஷம்!

அது என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ள ஆனந்தி சஞ்சிகையின் ஆன்லைன் பதிப்பின் பக்கம் 42 மற்றும் 43 க்கு செல்லுங்கள். இணைப்பு : www.aananthi.com

0 comments:

0

நட்சத்திரப் பயணங்கள் - தொடர் 3

பிரபஞ்சத்தின் தோற்றம்



நமது கண்ணுக்கு தெரியும் பிரதான வான் பொருட்களான சூரியன் மற்றும் கிரகங்கள் என்பனவற்றின் மையம் பூமி அல்ல சூரியனே என்ற முடிவுக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதன் பிண்ணனியில் சென்ற தொடரில் நவீன வானவியல் எவ்வாறு தோற்றம் பெற்றது என வரலாற்றுக் குறிப்புக்களுடன் ஆராய்ந்தோம். இத்தொடரில் பிரபஞ்சம் எவ்வாறு தோற்றம் பெற்றது? என்பதைப் பற்றி அலசுவோம். பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது என்ற கருத்துக்கள் முன்பு நிலவி வந்தன. ஆயினும் 21ம் நூற்றாண்டில் அறிஞர்களால் விவாதிக்கப் பட்டு வரும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கருதுகோள்களில் ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த "பெரு வெடிப்புக் கோட்பாடு" (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.


பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகள் மிக எளிமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார். பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் முக்கியமான கொள்கைகள் இரண்டு.

•அதில் முதலாவது ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை.
•அடுத்தது குவாண்டம் கொள்கை.




இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியினை வளைக்கும் தன்மை கொண்டது என்பதே ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவம். அதே போல் இயற்கையின் அடிப்படைக் கூறுகளான ஒளி,இடம்,காலம் போன்றவை தொடர்ந்து பிரிக்கக் கூடியவை அல்ல என்பதே குவாண்டம் கொள்கை.

இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெருவெடிப்புக் கொள்கை சொல்வது என்னவென்றால் இப்பிரபஞ்சத்தில் உள்ள பொருள் மற்றும் சக்தி இரண்டும் இணைந்து இறுகி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியாத அளவு அடர்த்தியுடன் சில மில்லி மீட்டர்கள் விட்டமே உடைய ஒரு பந்தாக சூரியனை விட பல பில்லியன் மடங்கு வெப்பத்துடன் ஆதியில் இருந்தது என்பதாகும். சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்னமும் கண்டறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் இப்பந்து வெடித்துச் சிதறியதில் முதல் அணுக்களான ஐதரசன்,ஹீலியம் உட்பட இன்றுள்ள காலக்ஸிகள்,கருந்துளைகள், குவாசர்கள்,நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் தோற்றம் பெற்றன.

மேலும் இத்தொகுதிகள் யாவும் அழிந்தும் சிதைந்தும் வேறொன்றாக மாறியும் எல்லையற்ற காலப் பெருவெளியில் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருள்,சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும்பொருளும், 4 வீதம் காலக்ஸிகளுக்கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன்,ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம் நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும்,0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன.

இதில் கரும்பொருள் என்பது அது வெளியிடும் கதிரியக்கத்தின் மூலம் வானியல் உபகரணங்களால் அவதானிக்க முடியாத ஆனால் அண்டவெளியிலுள்ள விண் பொருட்களைத் தள்ளும் ஈர்ப்பு விசையால் இணங்காணப்படும் சடப்பொருளாகும். கரும் சக்தி என்பது பிரபஞ்சத்தின் விரிவை ஒவ்வொரு கணமும் துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்புக் கொள்ள முடியாத சக்தியாகும்.

இவற்றுடன் பிரபஞ்சத்தில் உள்ள காலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் யாவும் பெருவெடிப்பின் பின்னர் படிப்படியாக எப்படித் தோற்றம் பெற்றன என்பதை இப்போது பார்ப்போம்.

பெருவெடிப்பு ஏற்பட்ட முதலாவது செக்கனில் ஏற்பட்ட மூலக்கூற்று நிலையிலான மாற்றங்களை பிரபஞ்சவியலாளர்கள் ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளனர். இதில் முதலாவது ப்ளாங் இப்போ எனப்படுகிறது. இது பெரு வெடிப்பு ஏற்பட்டு 10 இன் -43ம் அடுக்கு செக்கனின் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களைக் குறிப்பது. இதன்போதே விண்வெளியிலுள்ள நான்கு அடிப்படை விசைகளான மின்காந்தவிசை, நுண்ணிய அணு விசை, கடின அணு விசை,ஈர்ப்பு விசை என்பன தோற்றம் பெற்றன.

அடுத்தது கிராண்ட் யுனிfபிக்கேஷன் இப்போவாகும். பெருவெடிப்பு நிகழ்ந்து 10 இன் -43 ம் அடுக்கிற்கும் 10 இன் -36 ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட செக்கனில் நிகழ்ந்த மாற்றத்தை இது குறிக்கிறது. இக்காலப் பகுதியிலிருந்தே விரியத் தொடங்கிய பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது. மேலும் கடின அணு விசையும் நுண்ணிய அணு விசையும் இணைந்து ஹிக்ஸ் போசொன் எனப்படும் நிறையுடைய அடிப்படைத் துணிக்கையை இந்த குறுகிய காலத்திலேயே உருவாக்கியது. கடவுள் துணிக்கை என்று கருதப்படும் அணுக்கருவின் உள்ளே இருக்கும் ஆறு மூலத் துணிக்கைகளில் ஒன்றான ஹிக்ஸ் போசொன் பிக்பாங் கொள்கையை நிரூபிப்பதற்காக தற்போது ஜெனீவாவிலுள்ள சேர்ன் அணுவாராய்ச்சி நிலையத்தில் பரிசோதிக்கபட்டு வருகிறது.

அடுத்த கட்டமான 10 இன் -36ம் அடுக்கிற்கும் 10 இன் -32ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை இன்fப்ளேசனரி இப்போ எனவும் 10 இன் -12ம் அடுக்கு செக்கன் வரையான பகுதியை எலெக்ட்ரோ வீக் இப்போ எனவும் அழைப்பர். இன்fப்ளேசனரி இப்போவின் போதே இன்று விண்வெளியியலாளர்கள் தலையைச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கும் டார்க் எனெர்ஜி எனப்படும் கரும் சக்தி பிரபஞ்ச விரிவாக்கத்தைத் துரிதப்படுத்த தொடங்கியது. மேலும் எலெக்ட்ரோ வீக் இப்போவின் போது வெப்பநிலை 10 இன் 28ம் அடுக்கு கெல்வின் வரை குறைவடைந்ததால் கதிரியக்கம் ஆரம்பமாகி அணுக்களின் அடிப்படைத் துணிக்கைகளான குவார்க்குகள்,எலெக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரினோக்கள் உருவாகத் தொடங்கின.

மேலும் தற்போது பிரபஞ்சம் முழுதும் பரவியிருக்கும் பின்புலக் கதிர்வீச்சு இதன் போதே உருவானது. இக் கதிர் வீச்சே பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குக் காரணமாக பெரு வெடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்கலாம் என இன்று விஞ்ஞானிகள் கருதக் காரணமாகும்.

இறுதியாக கருதப்படும் இரு பகுதிகள் குவார்க் இப்போ மற்றும் ஹட்ரொன் இப்போ என்பவை ஆகும். பெருவெடிப்பின் பின்னர் நாம் பார்த்த பகுதிகளில் இன்னமும் சடப்பொருளான அணுக்கருக்கள் உருவாகவில்லை. 10 இன் -12ம் அடுக்கிற்கும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட குவார்க் இப்போவின் போதே நான்கு அடிப்படை விசைகளும் பிரிக்கப்பட்டு தனியாக்கப்படுகின்றன.

இதனால் குவார்க்குகள் வலுப்பெற்று புரோட்டன் எனும் அணுக்கருவை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. ஆனால் வெப்பநிலை மிக மிக அதிகமாக இருந்ததால் இக்கருத்தாக்கம் சாத்தியமாகவில்லை. அடுத்து வரும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் 1 செக்கனுக்கும் இடைப்பட்ட ஹெட்ரோன் இப்போ காலப்பகுதியிலேயே நிறையுடைய சடப்பொருள் உருவாகிறது.

அதாவது குவார்க்-குளுவோன் பிளாஸ்மா மூலம் வெப்பநிலை வீழ்ச்சியடைந்த பின்னர் ஹட்ரோன்கள் என அழைக்கப்படும் அணுக்கருவை ஆக்கும் நேர்த் துணிக்கையான புரோட்டன்களும், நடுநிலைத் துணிக்கையான நியூட்ரோன்களும் தோற்றம் பெறுகின்றன. இதன்மூலம் பல மில்லியன் நட்சத்திரங்களின் தொகுதியான காலக்ஸிகள் அதாவது அண்டங்கள் முதல் நாம் வாழும் பூமி போன்ற கிரகங்கள் வரை உருவாக வழி ஏற்பட்டது.

இதுவரை பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு காரணம் என பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பிக்பாங் எனும் பெருவெடிப்புக் கொள்கை பற்றியும் அது நிகழ்ந்த முதலாவது செக்கனுக்குள் ஏற்பட்ட மூலக்கூற்று நிலையிலான மாற்றங்களைப் பற்றியும் பார்த்தோம். அடுத்த வாரம் இம்முதலாவது செக்கனில் இருந்து 14 பில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பூமி உட்பட ஏனைய வான் பொருட்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி அலசுவோம்.

- நவன்

0 comments:

0

விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் RSS பீட்ஸ் களை ரீட் செய்யவதற்கு.


விண்டோஸ் 7 இயங்குதளத்தின் பலமே அதன் டெஸ்க்டாப் தான், மைக்ரோசொவ்ட் இன் முன்னைய இயங்குதளங்கள் போல் இல்லாமல் டெஸ்க்டாப் இல் நிறைய வேலைகள் செய்ய முடிகிறது.

RSS பீட்ஸ்கள் மூலம் இணையத்தளங்களை படிப்பவர்கள் தங்கள் டெஸ்க்டாப் இல் இருந்தே அதனைச் செய்வதற்கு உதவுகிறது Taskbar RSS எனும் சிறிய அப்பிளிகேஷன்.

பீட்ஸ்கள் தம்ப்நெயில் வடிவில் தெரிவதும் கூடுதல் வசதியாகும். பீட்டா வடிவிலேயே வெளிவரும் இந்த சிறிய மென்பொருளில் சில Bugs கள் இருக்கலாம். ஆயினும் நீங்கள் விரும்பின் பயன்படுத்தி பாருங்கள்.



குறிப்பு இந்த அப்பிளிக்கேஷன் விண்டோஸ் 7 இல் மட்டுமே இயங்கும்.

டவுண்லோட் செய்ய

4தமிழ் மீடியா பீட்பேனர் பீட்ஸ்

மேலும் தொழில் நுட்ப பதிவுகள் சில
பிளாஸ் டிரைவ்களில் டேட்டாக்களை பாஸ்வேட் தந்து சேமிப்பதற்கு சிறந்த மென்பொருள்

எம்.பி.3 பாடல்களை ஆன்லைனில் கட் செய்வதற்கு உதவும் இணையத்தளம்

கணனியில் மறைந்திருக்கும் தற்காலிக பைல்களை அழிப்பதற்கு

எனக்கு மட்டுமா? அல்லது எல்லோருக்குமா?

படங்களின் பெயர், அளவு, பார்மட் மாற்றிய பின் அப்லோட் செய்ய சிறந்த மென்பொருள்

கணனியை சட்டவுன் செய்யும் போதே Ccleaner மூலம் கிளீன் செய்வதற்கான படிமுறை.

அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள

பி.டி.எவ் டாக்குமெண்டை எம் எஸ் வேர்ட் டாக்குமெண்ட் ஆக ஆன்லைனில் மாற்றுவதற்கு

முக்கிய திரட்டிகளின் ஓட்டளிப்பு பட்டையை எவ்வாறு வலைப்பதிவுகளில் இணைப்பது?

விண்டோஸ் - 7 பயனும் செயல் வடிவமும்

0 comments:

0

இலகுவாக டேட்டாக்களை எடுத்துச் செல்வதற்கு

நீங்கள் சேமித்து வைக்கும் முக்கியமான பைல்களை கணனி, மடிக்கணனி, மற்றும் ஐபோன்களில் Synchronize செய்து கொள்ள உதவுகிறது Drop box எனும் இந்த மென்பொருள்.

ஒன்றுக்கு மேட்பட்ட கணனிகளில் வேலைசெய்பவராகவும், அடிக்கடி பிரயாணம் செய்யும் ஒருவராகவும் நீங்கள் இருந்தால் இச்சேவையை பயன்படுத்தலாம்.

வீட்டு கணனியில் சேமிக்கும் பைல்களை அப்படியே அலுவலக கணனியில் கிடைக்க செய்ய வேண்டுமெனில் பிளாஸ் டிரைவ்களில் டேட்டாக்களை சேமித்தும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பி நேர விரயம் செய்ய தேவையில்லை.

மாறாக Drop box என்ற இந்த மென்பொருள் நிறுவி விட்டால் உங்கள் டெஸ்க்டாப் இல் ஒரு பால்டர் உருவாக்கப்பட்டு விடும், அங்கே சேமிக்கும் அனைத்து பைல்களும் Synchronize செய்யப்பட்டு அலுவலகத்திலும் கிடைக்குமாறு செய்யப்பட்டும்.

டவுண்லோட் செய்ய

மேலும் தொழில் நுட்ப பதிவுகள் சில
விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் RSS பீட்ஸ் களை ரீட் செய்யவதற்கு.

பிளாஸ் டிரைவ்களில் டேட்டாக்களை பாஸ்வேட் தந்து சேமிப்பதற்கு சிறந்த மென்பொருள்

எம்.பி.3 பாடல்களை ஆன்லைனில் கட் செய்வதற்கு உதவும் இணையத்தளம்

கணனியில் மறைந்திருக்கும் தற்காலிக பைல்களை அழிப்பதற்கு

எனக்கு மட்டுமா? அல்லது எல்லோருக்குமா?

படங்களின் பெயர், அளவு, பார்மட் மாற்றிய பின் அப்லோட் செய்ய சிறந்த மென்பொருள்

கணனியை சட்டவுன் செய்யும் போதே Ccleaner மூலம் கிளீன் செய்வதற்கான படிமுறை.

அனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள

பி.டி.எவ் டாக்குமெண்டை எம் எஸ் வேர்ட் டாக்குமெண்ட் ஆக ஆன்லைனில் மாற்றுவதற்கு

முக்கிய திரட்டிகளின் ஓட்டளிப்பு பட்டையை எவ்வாறு வலைப்பதிவுகளில் இணைப்பது?

விண்டோஸ் - 7 பயனும் செயல் வடிவமும்

OCR ஆகவும் செயற்படும் Microsoft இன் OneNote

0 comments:

0

நட்சத்திரப் பயணங்கள்

0 comments:

Sunday, May 9, 2010

0

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்



காரைக்குடியில் இயங்கிவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்
இளநிலை:
பி.ஏ., - வரலாறு, ஆங்கிலம், பொது நிர்வாகம்
பி.எஸ்.சி.,
- உளவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி
பி.லிட்.
- தமிழ்,
பி.பி.ஏ.,
- பேங்கிங்
பி.எல்.ஐ.எஸ்.
, 1 ஆண்டு
பி.சி.ஏ.,, பி.காம்
. போன்ற படிப்புகள் இளநிலை படிப்பில் வழங்கப்படுகிறது.

முதுநிலை:எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, சைல்டு கேர் மற்றும் எஜூகேஷன், மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம், பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்டஸ்டிரியல் ரிலேஷன்ஸ்

எம்.பி.ஏ.,
- எஜுகேஷன் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட், புராஜெக்ட் மேனேஜ்மென்ட், கார்ப்ரேட் செகரட்டெரிஷிப், இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், வங்கி மற்றும் நிதி, டூரிசம், இன்டர்நேஷனல் பிசினஸ்

எம்.எஸ்.சி.,
- கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி

எம்.சி.ஏ., எம்.காம்.,எம்.எல்.ஐ.எஸ்.,


முதுநிலை டிப்ளமோ:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பி.ஜி.டி.சி.ஏ.,), ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், பிசினஸ் மேனேஜ்மென்ட், பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்ட்ஸ்டிரியல் ரிலேஷன்ஸ், ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்மேலும் சுய உதவிக்குழு மேலாண்மை குறித்த 6 மாத சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.

இது குறித்த தகவல்களுக்கு:
அழகப்பா பல்கலைக்கழகம் அழகப்பாநகர், காரைக்குடி
தொலைபேசி : 04565 425200
இ.மெயில் : alagappa@md3.vsnl.net.in
வெப்சைட் : www.alagappauniversity.ac.in

0 comments:

0

மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள்

1. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை (1958).

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயன்ஸ், மெக்காடிரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், பி.ஆர்க்.

2. ராஜா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, வீரபாஞ்சான், மதுரை (1995). மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், சிவில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.

3. எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரி, கிடாரிபட்டி (1998).
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.

4. காமராஜ் பொறியியல் கல்லூரி, எஸ்.பி.ஜி. நகர், கே. வெள்ளக்குளம், திருமங்கலம் (1998).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், பாலிமர் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.

5. பி.டி.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஆஸ்டின்பட்டி, மதுரை (2001). இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.

0 comments:

0

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் Last Updated :

1. டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி, வைத்தியநாதபுரம், தொழுதூர் (1995).

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.

2. கிருஷ்ணசாமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, கடலூர் (2001). கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.

0 comments:

0

சென்னையில் உள்ள கல்லூரிகள் பட்டியல்




பொறியியல்: 1. மியாசி அகாதெமி ஆப் ஆர்க்கிடெக்சர், சென்னை (1999). பி.ஆர்க்.

2. மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, கோடம்பாக்கம் (2001). இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.

கலை மற்றும் அறிவியல்:

1. ஆசான் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளச்சேரி}தாம்பரம் சாலை, ஜாடம்பேட், சென்னை - 02

2. பக்தவச்சலம் மெமேரியல் மகளிர் கல்லூரி, பெரியார் நரக், கொரட்டூர், சென்னை - 80

3. மீனாட்சி மகளிர் கல்லூரி, ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24 4. ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. பெருமாள்பட்டு, சென்னை 5. தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. குரோம்பேட்டை, சென்னை - 44 6. வெல்ஸ் அறிவியல் கல்லூரி, பல்லாவரம், சென்னை - 17 7. எ.எம்.ஜெயின் ஆண்கள் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை - 14 8. பாரதி மகளிர் கல்லூரி, பிரகாசம் சாலை, சென்னை - 08 (தன்னாட்சி) 9. சி கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, அண்ணா நகர், சென்னை 9. செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை. 10. தன்ராஜ் பெயிட் ஜெயின் கல்லூரி, சென்னை.(தன்னாட்சி) 11. தர்மதுரை ராவ் பகதூர் கலவால கலவால குன்னன் செட்டி இந்து கல்லூரி, சென்னை 12. டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, சென்னை 13. துவாரகா தாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவா கல்லூரி, சென்னை 14. எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 15. அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, சென்னை (தன்னாட்சி) 16. குருநானக் கல்லூரி, சென்னை 17. ஜஸ்டிஸ் பசீர் அகமது சயத் மகளிர் கல்லூரி, சென்னை 15. லயோலா கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 16. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை (தன்னாட்சி) 17. புதுக்கல்லூரி, ராயப்பேட்டை, சென்னை. (தன்னாட்சி) 18. பச்சையப்பபன் கல்லூரி, சென்னை. 19. மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், சென்னை. (தன்னாட்சி) 20. காயிதே மில்லத் கல்லூரி, சென்னை. 21 காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 22. ராணிமேரி கல்லூரி, சேப்பாக்கம், சென்னை. (தன்னாட்சி) 23. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா ஆண்கள் கல்லூரி, சென்னை. 24. எஸ்.டி.என். பட் வைஷ்ணவா மகளிர் கல்லூரி, சென்னை 25. எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி, சென்னை. 26. செயிண்ட் லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி, சென்னை. 27. ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 28. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 29. ஏ.ஏ. மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 30. ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 31. அண்ணா ஆதர்ஷ் மகளில் கல்லூரி, சென்னை. 32. அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 33. அன்னை வைலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 34. சி.டி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 35. சென்னை நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 36. செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, சென்னை. 37. டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 38. குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை. 39. ஹந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கேளம்பாக்கம். 40. இந்தியன் ஹார்டுவேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை 41. ஜெ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 42. ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால் அகர்ஸன் கல்லூரி, சென்னை. 43. கே.சி.எஸ். காசி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 44. குமார ராணி மீனா முத்தையா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சென்னை. 45. எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 46. மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 47. மஹாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 48. மார் கிரிஹோரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 49. முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 50. நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 51. நியூ பிரின்சி ஸ்ரீ பவானி மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 52. பத்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 53. பூங்கா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 54. பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 55. பேராசிரியர் தனபாலன் மகளிர் கல்லூரி, சென்னை. 56. எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டு தாலுக்கா. 57. ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் சாசூன் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை. 58. சிந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 59. சர் தியாகராயா கல்லூரி, சென்னை. 60. சோகா இக்கிதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 61. ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 62. ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூரி, சென்னை. 63. செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 64. செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 65. டி.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 66. டி.எஸ். நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 67. தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 68. திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர். 69. திருத்தங்கள் நாடார் கல்லூரி, சென்னை. 70. வி.எம். பனிக்கரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 71. வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை. 72. வேல் ஸ்ரீ ரங்கா சாங்கு கல்லூரி, சென்னை.
மருத்துவம்:

1. ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேதா மருத்தும் மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை.

2. ஸ்ரீ வெங்கட்ரமணா ஆயுர்வேதா கல்லூரி, சென்னை.

3. டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் (தாய் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), சென்னை.

4. எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.

5. சவீதா பல்கலைக்கழகம் (சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.

6. ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.

7. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.

8. மாதா பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.

9. மீனாட்சி பல்கலைக்கழகம் (மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனை, சென்னை.

10. ராகாஷ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை

11. ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ( ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக்கல்லூரி, சென்னை

12. தாகூர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.

13. ஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, சென்னை

14. வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சென்னை.

15. ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை

16. ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை

17. எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.

18. புற்றுநோய் மருத்துவமனை, சென்னை.

19. டாக்டர் ஏ.எல்.எம். பி.ஜி. இன்ஸ்டியூட் ஆப் பேசிக் அறிவியல் மருத்துவம், சென்னை.

20. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை.

21. சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டியூட்

0 comments:

0

சிறிய விஷ​யங்​க​ளில் இருந்​து​தான் ஏரா​ளம் கற்​றுக் கொள்ள முடி​யும்:


"பிரம்​மாண்​டங்​க​ளைப் பார்த்​துப் பார்த்து,​​ சிறிய விஷ​யங்​க​ளைக் கண்​டு​கொள்​வ​தில்லை;​ ஆனால்,​​ அந்​தச் சிறிய விஷ​யங்​க​ளில்​தான் ஏரா​ள​மாக கற்​றுக் கொள்ள முடி​கி​றது' என்​றார் எழுத்​தா​ளர் எஸ்.​ ராம​கி​ருஷ்​ணன்.​​ ​ ​ திருச்சி சம​ய​பு​ரத்​தி​லுள்ள எஸ்​ஆர்வி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்​ளி​யில் சனிக்​கி​ழமை நிறை​வ​டைந்த "கனவு மெய்ப்​பட'- 4 நாள் பயி​ல​ரங்​கில் அவர் மேலும் பேசி​யது:​​ ​ "அமெ​ரிக்க எழுத்​தா​ளர் தோரோ நடப்​பது பற்றி மட்​டும் 100 பக்​கங்​க​ளைக் கொண்ட புத்​த​கம் ஒன்றை எழு​தி​யுள்​ளார்.​ பூமி​யு​டன் நேர​டி​யா​கத் தொடர்​புள்​ளவை கால்​கள் மட்​டுமே.​ பள்​ளிக் காலங்​க​ளில் விளை​யா​டு​வ​தைத் தவிர கால்​க​ளுக்கு இப்​போது வேறெந்த வேலை​யும் நாம் கொடுப்​ப​தில்லை.​ சோம்​பேறி ஆவ​தற்கு முதல் அறி​குறி கால்​க​ளுக்கு எந்த வேலை​யும் கொடுக்​கா​த​து​தான்.​​ ​ சைபீ​ரிய பற​வை​கூட இந்​தி​யா​வுக்கு பறந்தே வரு​கி​றது.​ நாம் இங்​குள்ள தாஜ்​ம​கா​லைக்​கூட பார்க்​கச் செல்​வ​தில்லை.​ பய​ணம் செய்​வ​தி​லுள்ள அனு​ப​வம் வேறெ​தி​லும் கிடைக்​காது.​​ ​ கல்​விக் கூடங்​க​ளில் பயி​லும் கல்வி மனித வாழ்க்​கைக்கு நேர​டி​யாக பயன்​பட்​ட​தில்லை.​ வகுப்​பறை,​​ பாடங்​கள்,​​ தண்​ட​னைக்​குள்​ளேயே நாம் முடங்​கி​வி​டு​கி​றோம்.​​ ​ ரஷிய எழுத்​தா​ளர் ஆன்​டன் ஷெக்​காவோ தனது வீட்​டின் முன் இருந்த காலி​யி​டத்​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​காக ஒரு முகாமை அமைக்​கப்​போ​வ​தா​கக் கூறி​னார்.​ ரஷிய ஆசி​ரி​யர்​கள் கம்​பீ​ரத்​து​டன் இருப்​ப​தில்லை;​ அவர்​க​ளைக் கண்​ட​றிய முடி​ய​வில்லை என அவர் குறிப்​பிட்​டார்.​​ ​ கல்வி என்​பது ஊதி​யம் பெறும் வேலை என்​ப​தோடு ஆசி​ரி​யர்​கள் நின்​று​வி​டு​கி​றார்​கள்.​ பணி​யாற்​றும் ஊரின் வர​லாறு,​​ அந்த மக்​க​ளின் பண்​பாடு போன்​ற​வற்​றைத் தெரிந்து கொள்ள ஆசி​ரி​யர்​கள் முனைப்பு காட்​டு​வ​தில்லை என்​ப​தெல்​லாம் ஷெக்​கா​வோ​வின் வருத்​தங்​கள்.​​ ​ நம் வகுப்​ப​றை​க​ளில்​தான் பேதங்​களே தொடங்​கு​கின்​றன.​ அடிமை முறையை ஒழித்து ஆயி​ரம் ஆண்​டு​க​ளா​கி​யும் தொலைக்​காட்​சி​கள் ஒரே நாளில் அடிமை முறையை நமக்​குக் கற்​றுக் கொடுத்து விடு​கின்​றன.​ வீடு​க​ளில் குழந்​தை​க​ளைப் பேசவே விடு​வ​தில்லை;​ தொலைக்​காட்​சி​கள்​தான் பேசிக் கொண்டே இருக்​கின்​றன.​​ ​ நாம் பிரம்​மாண்​டங்​களை நோக்​கியே பார்க்​கி​றோம்.​ அத​னால்,​​ சிறிய சிறிய விஷ​யங்​களை கண்​டு​கொள்​வ​தில்லை.​ உண்​மை​யில் சிறிய விஷ​யங்​கள்​தான்,​​ நமக்கு நிறைய கற்​றுத் தரு​கின்​றன.​​ ​ தன்​னை​விட 5 மடங்கு அதிக எடை கொண்​ட​வற்றை எறும்பு சுமக்​கி​றது.​ நாம் எறும்​பைக் கண்​ட​வு​டன் நசுக்​கிக் கொள்​கி​றோம்.​ அதில் நாம் சுகம் கொள்​கி​றோம்.​​ ​ ஒரு கல்லை எடுத்​தால்,​​ அதை யார் மீதா​வது வீசிப் பார்க்​கத்​தான் நாம் முனை​கி​றோம்.​ அந்​தக் கல் பெரிய மலை​யின் ஒரு பகுதி என்​றுப் பார்ப்​ப​தில்லை.​ கொஞ்​சம் கொஞ்​ச​மாக இந்த உலகை நர​க​மாக மாற்றி வரு​கி​றோம்.​ மனி​தர்​கள் தங்​க​ளி​ட​முள்ள சில சொற்​களை,​​ சிந்​த​னை​களை,​​ செய்​கை​களை மாற்​றிக் கொள்ள முன்​வர வேண்​டும்' என்​றார் எஸ்.​ ராம​கி​ருஷ்​ணன்.​​ ​ ஞாநி​ ​ ​ பயி​ல​ரங்கை ஒருங்​கி​ணைத்த எழுத்​தா​ளர் ஞாநி பேசி​யது:​​ ​ "ஒவ்​வொ​ரு​வ​ரும் உட​னடி இலக்கு,​​ நீண்​ட​கால இலக்கு மற்​றும் தனிப்​பட்ட இலக்கு,​​ சமூ​கத்​துக்​கான இலக்கு என்​றும் வகைப்​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும்.​ அந்த இலக்​கு​கள் நல்​ல​வை​க​ளா​க​வும்,​​ அன்பு சார்ந்​த​வை​யா​க​வும் இருக்க வேண்​டும்.​​ ​ பெற்​றோ​ருக்​கும்,​​ குழந்​தை​க​ளுக்​கும் இடை​யே​யுள்ள இரு​வேறு இலக்​கு​களை ஒரு புள்​ளி​யில் இணைய வைக்க வேண்​டி​யது முக்​கி​ய​மா​னது.​ மாறு​பட்ட கருத்து இருக்​க​லாம்.​ ஆனால்,​​ அது மோதல் சார்ந்​த​தாக இருக்​கக் கூடாது.​ அர​சி​யல்,​​ சினிமா,​​ கல்வி என எல்​லாத் துறை​க​ளி​லும் பல​வீ​னங்​க​ளை​யும்,​​ கோளா​று​க​ளை​யும் பார்க்​கி​றோம்.​ அடுத்த 50 ஆண்​டு​க​ளில் சமூ​கத்தை மாற்​றி​ய​மைக்​கும் இடத்​தில் நீங்​கள் இருக்​கப் போகி​றீர்​கள்' என்​றார் ஞாநி.​​ ​ தமிழ்ச்​செல்​வன்​​ ​ மற்​றொரு ஒருங்​கி​ணைப்​பா​ளர் எழுத்​தா​ளர் ச.​ தமிழ்ச்​செல்​வன் பேசி​யது:​​ ​ "24 மணி நேர​மும் கற்​றுக் கொள்​ப​வர்​கள் குழந்​தை​கள் மட்​டும்​தான்.​ பள்​ளிப் பரு​வத்​தில் கற்​றுக்​கொள்​ளும் எல்லா வழி​க​ளை​யும் அடைத்​து​வி​டு​கி​றோம்.​ அந்த கத​வு​கள் இப்​போ​து​தான் திறந்து விடப்​பட்​டி​ருக்​கின்​றன.​​ ​ இங்கு எல்​லா​மும் சிறப்​பாக சொல்​லித் தரப்​பட்​டி​ருக்​கின்​றன என்று சொல்ல முடி​யாது.​ ஆனால்,​​ கத​வு​கள் திறக்​கப்​பட வேண்​டும் என்​ப​தைச் சொல்​லி​யி​ருக்​கி​றோம்.​ இனி கற்​றுக் கொள்ள வேண்​டி​ய​து​தான்' என்​றார் தமிழ்ச்​செல்​வன்.​ ​​ ​ 4 நாள்​கள் நடை​பெற்ற இந்​தப் பயி​ல​ரங்கு குறித்து மாணவ,​​ மாண​வி​கள் சார்​பில் சிலர் பேசி​னர்.​ அவர்​கள் கூறி​யவை:​​ ​ "மாண​வர்,​​ மாணவி என்ற பாகு​பா​டின்​றிப் பழக வாய்ப்பு கிடைத்​தது.​ "வெளிக்​காற்று உள்ளே வரட்​டும்' என்ற தலைப்​பில் நடை​பெற்ற இந்​தப் பயி​ல​ரங்​கின் மூலம் சுத்​த​மான ஆக்​ஸி​ஜனை சுவா​சித்​த​தைப் போன்ற உணர்​வைப் பெற்​றோம்.​ நிறைய நண்​பர்​கள் கிடைத்​தார்​கள்.​ எங்​க​ளா​லும் முடி​யும் என்ற தன்​னம்​பிக்​கை​யைப் பெற்​றி​ருக்​கி​றோம்' ​ என்​ற​னர்.

0 comments:

0

கட்டுரைகள்

தேசம் விலைபேசப்படுகிறதா?

உலகம் இன்று இந்தியாவைக் கூர்ந்து கவனிப்பதற்குக் காரணம் இருக்கிறது. உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த ஜனநாயக நாடு இதுதான். அத்துடன் இது விரைவில் மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனத்தையும் மிஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மக்கள்தொகை மிகுந்த நாட்டை வணிக உலகம் சந்தையாகப் பார்க்கிறது. அமெரிக்கா முதலிய ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள், இந்தியாவைத் தங்கள் சொந்த சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது. தேசத்தைப் பற்றியோ, மக்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லாத இந்திய அரசு தங்கள் அரசியல் எதிர்காலத்தை மட்டுமே கணக்கிட்டுச் செயலாற்றுகிறது. "இது எங்குபோய் முடியுமோ?' என்று தேசப்பற்றுடைய அறிவாளிகள் திகைத்துப்போய் நிற்கின்றனர்.இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், விரைவில் 9 புள்ளியை எட்டிவிடும் என்றும் பேசுகிறார்கள். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வந்துவிட்டால் கொடியேற்றி வைத்துவிட்டு, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தவர்கள் எல்லோரும் உலகச் செல்வந்தர்களாக உயர்ந்துவிட்டது போலவும், நாடு வல்லரசாக மாறி வருவதாகவும் ஆட்சியாளர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போகிறார்கள். நமக்கும் கேட்பதற்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மை நிலை "இது பகல்கனவு' என்று உணர்த்தி விடுகிறதே!÷இந்நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் என்பது இதற்கு இன்னொரு கூடுதல் சிறப்பாகும். ஆனால் இந்த மனிதவளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே! இங்கே உயர்கல்வி என்பது அமெரிக்கா முதலிய அன்னிய நாட்டுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டது. இவர்களுக்குத் தாய்நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?இந்நாட்டில் மண்ணும், மக்களும் பிரிக்க முடியாதவர்கள்; கல்வியும் அப்படித்தான். ஒரு தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டை நிர்ணயிக்கக் கூடியது. இந்தியாவில் ஏற்பட்ட ஓர் அவசர காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வித்துறை மத்தியப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.மத்திய அரசு இதைக் கையில் வைத்துக்கொண்டு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இளைய தலைமுறையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது புதிய அச்சுறுத்தல் மசோதா வடிவில் வந்திருக்கிறது."வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாட்டுச் சட்ட மசோதா - 2010' என்ற புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதோடு நாடாளுமன்ற நடப்புக் கூட்டத் தொடரில் இம்மசோதாவைத் தாக்கல் செய்யவும் முடிவெடுத்துள்ளது.நமது நாட்டைப் பொறுத்தவரை கல்வி என்பது முன்பே முற்றிலும் வணிகமயமாகவே மாற்றப்பட்டு விட்டது. இதில் அன்னியக் கல்வி நிறுவனங்களும் போட்டியிடுமானால் கல்விப் பந்தயத்தின் முடிவு எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இப்போதே ஆங்கில மோகத்தில் பண்பாட்டுப் பழக்கவழக்கச் சீரழிவிலே மிதக்கும் இளைய தலைமுறையால் இந்தியாவின் எதிர்காலத்தைப் பாழாக்கலாமா? இந்திய நாட்டின் எந்தச் சட்டத்தையும் அன்னியப் பல்கலைக்கழகங்கள் மதிக்கப் போவதில்லை. அதைப்பற்றி இந்த அரசு கவலைப்படப் போவதுமில்லை.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நோபல் மற்றும் பத்மவிபூஷண் விருது பெற்ற வெங்கடராமன், இந்தியாவில் அன்னிய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதற்கு வணிக நோக்கமே காரணம் என்று கூறியுள்ளார். இவைகளில் கேம்பிரிட்ஜ் போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களை அமைப்பதில்லை என்றும், ஆனால் வேறு சில பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழக வளாகங்களை அமைப்பது வணிக நோக்கத்தில்தான் என்றும் கூறியுள்ளார். இந்தச் சாட்சி போதாதா?இந்தியக் குடிமக்களை அன்னியர்கள் போலவும், அடிமைகளைப் போலவும் நடத்துவதும், அதேசமயம் அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பளித்து இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து விடுவதும்தான் உலகமயக் கொள்கையாக இருக்கிறது. கடல்சார் மேலாண்மைச் சட்டத்தின்மூலம் மீனவ மக்கள் அவர்களது பாரம்பரிய கடற்பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் அன்றாடம் அவர்கள் தொழில் செய்ய முடியாமல் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனரே, இதுபற்றித் தமிழக அரசு பலமுறை கூறியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே, இது ஏன்?வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திமிங்கிலங்களின் பசியைப் போக்க கனிம வளங்களை வாரி இறைத்திட காட்டுப் பகுதியிலிருந்தும், மலைப்பகுதியிலிருந்தும் பழங்குடி மக்களை வெளியேற்றுவதும், "சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்ற பெயரால் இந்தியாவின் உயிர்நாடியான விவசாயப் பெருங்குடி மக்களை அவர்கள் பாரம்பரிய பூமியிலிருந்து பறித்துக் கொள்வதும், "இந்தியா ஏழை இந்திய மக்களுக்கல்ல' என்ற எண்ணத்தை இந்நாட்டுக் குடிமக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது."இந்தியா பாரம்பரிய விவசாய நாடு' என்ற எண்ணத்தைத் தகர்ப்பதற்கான திட்டங்களும், சட்டங்களும் அவசர கதியில் கொண்டு வரப்படுகின்றன. விவசாயத்தில் தனியார்மயத்தைப் புகுத்தவும், இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலும் இந்தியாவும், அமெரிக்காவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தால் நமது வாழ்வாதாரமான விவசாயம் வணிகமாக ஆக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் அபாயம் காத்திருக்கிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மரபணு மாற்றுப் பயிர்களைப் பற்றி யாரும் கேள்விகூட எழுப்ப முடியாது.÷"இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு' ஏற்படுத்தப்பட்டு, அந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட மரபணு மாற்றிய விதைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்தால் ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கும் பிரிவும் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள்கூட இதிலிருந்து கருத்து மாறுபடவோ, எதிர்க்கருத்துக் கூறவே முடியாதென்றால் மக்களாட்சிக்கும், சர்வாதிகாரத்துக்கும் வேறுபாடுதான் என்ன?மரபணு மாற்று தொழில்நுட்பம் மூலம் இந்திய விவசாயத்தை அழிக்க முயற்சி நடப்பதாகக் கனடா நாட்டு மரபணு விஞ்ஞானி சிவ்.எஸ். சோப்ரா கூறியுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் உணவுப் பயிரான கத்தரிக்காயை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. மக்களின் கடுமையான எதிர்ப்பால் அதுவும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்தநேரத்திலும் இது "விஸ்வரூபம்' எடுத்து வரலாம்.÷இதையெல்லாம் மிஞ்சுவது அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம். கடந்த முறை மத்திய அரசைத் தாங்கிப் பிடித்திருந்த இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சியான பாஜகவும் எதிர்த்தபோதும் ஆட்சியே கவிழும் நிலையிலும் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ள பிரதமர் துடித்தது ஏன்? "தேச நலனுக்காகவா இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டது?' என்ற கேள்வி எழுந்தது.÷இதன் தொடர்ச்சியாக அணுசக்தி ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் அமையும் அணுமின் நிலையங்களில் விபத்து நேரிட்டால் அந்த நிலையத்துடன் இணைந்து செயல்படும் அயல்நாட்டு நிறுவனம் அதிகப்படியாக 300 மில்லியன் டாலருக்கு மேல் இழப்பீடு தரவேண்டியது இல்லை என்று நிர்ணயிக்கும் மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 15 அன்று தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தாக்கல் செய்யப்படவில்லை.விபத்து எப்படி ஏற்பட்டாலும், யார் பொறுப்பாக இருந்தாலும் இந்தியர்களுக்குத் தரவேண்டிய இழப்பீடு இதற்குமேல் தரவேண்டாம் என்று அயல்நாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், இந்தியர் நலனுக்குப் பாதகமாகவும் இவ்வளவு பகிரங்கமாகக் கொண்டுவரும் மசோதாவை இந்த வடிவில் அனுமதிக்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.அன்னிய நிறுவனங்கள் இங்கு அணு உலைகளை அமைக்க அனுமதி அளிக்கத்தான் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது என்று கூறுவது தவறானது என்றும், இப்போதைய நிலையில் அணுசக்தித் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையமைச்சர் பிருதிவிராஜ் சவாண் கூறியுள்ளார். அப்படியானால், "இந்த மசோதாவுக்கான தேவை என்ன?' என்ற வினா எழுகிறது.÷இந்த மசோதாவின்படி அணுமின் நிலையங்களில் ஏற்படும் விபத்து எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் வெறும் 300 மில்லியன் டாலர் இழப்பீடு என்று வரையறை செய்திருப்பதை அனைவருமே எதிர்க்கின்றனர். இந்த இழப்பீடு தொகையில் அந்த அயல்நாட்டு நிறுவனம் 18 விழுக்காடு மட்டும் பொறுப்பேற்றுக் கொண்டால் போதுமானது; மீதம் 82 விழுக்காடு இந்திய அரசே பொறுப்பேற்கும் என்பது என்ன நியாயம்? இந்திய அரசின் நிலை இப்படித்தான் தொடர்கிறது.""உலகத்திலுள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்னைகளை நாம் இந்தியக் கண்கொண்டே பார்க்க வேண்டும். வல்லரசு நாடுகளுடன் நாம் கூட்டுச் சேர்வது சில நன்மைகளைப் பயக்கலாம். ஆனால், முடிவில் அதனால் கேடுதான் விளையும். இந்தியாவுக்கும், உலக அமைதிக்கும் அதனால் தீமையே உண்டாகும்...'' - இதுதான் முதல் பிரதமர் நேருவின் எச்சரிக்கை. இதனைக் காங்கிரஸ் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.அன்று காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி செய்தது. இன்று அதே காங்கிரஸ் கூட்டணியாக ஆட்சி செய்கிறது; காலப்போக்கில் அரசியலில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், நாட்டின் இறையாண்மையைப் பலி கொடுக்கலாமா? "உலகமயம்' என்ற பெயரால் தேசம் விலை பேசப்படுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

போலி பாஸ்போர்ட்டுகளால் பாழாகும் இளைஞர்கள்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப இன்றைய இளைஞர்களில் பலர் லட்சங்களைச் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால், நம்நாட்டிலிருந்து சென்ற பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றே கூறலாம். இவர்களில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரும் கடல் கடந்து செல்வதைத்தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் புற்றீசல்போல நகை, சொத்துகளை அடமானம் வைத்துச் செல்வது இன்றும் கிராமங்களில் தொடர்கதையாகவே இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் தமிழர்களாலேயே தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானோர் வெளிநாடுகளில் கொத்தடிமைகளாகவே வாழும் நிலை உள்ளது. இதுஒருபுறமிருக்க, வெளிநாட்டு மோகத்தால் முறைகேடுகளில் ஈடுபட்டு போலீஸôரிடம் சிக்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு பாஸ்போர்ட், விசா எளிதில் கிடைக்காது. என்றாலும், வெளிநாட்டு மோகத்தால் தவறான வழியைப் பின்பற்றும் நிலைக்கு கிராமப்புற இளைஞர்கள் பலர் ஆளாகின்றனர். இவர்களிடம் ஆசை காட்டி சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்வதற்கு மூளைச் சலவை செய்யும் இடைத்தரகர்கள் என்ற டிராவல்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கையும் இப்போது அதிகமாகிவிட்டன. டிராவல்ஸ் ஏஜென்டுகள் சொல்லும் வார்த்தைகளை நம்பி ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஏமாற்றமடைகின்றனர். ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெறும் டிராவல்ஸ் ஏஜென்டுகள் மற்றொருவரின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைக் கிழித்துவிட்டு, அப்பாவி மக்களின் புகைப்படத்தை ஒட்டி, பாஸ்போர்ட்டாக கொடுக்கின்றனர். வேறு ஒருவரின் பெயரில் விண்ணப்பித்து சில தில்லுமுல்லுகளைச் செய்து பணம் வாங்கியவர்கள் பெயரில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்துவிடுகின்றனர். இதை வாங்கிக் கொண்டு விமான நிலையத்துக்குச் செல்லும் நபர்கள் குடியேற்றப் பிரிவு காவலர்களின் சோதனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த 2008-ம் ஆண்டு மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 51 பேர் சிக்கினர். கடந்த ஆண்டில் 70 பேர் கைதாகினர். நிகழாண்டில் ஏப்ரல் வரை 25 பேர் பிடிபட்டுள்ளனர்.இதேபோல, சென்னை, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் கைதாகும் அப்பாவி இளைஞர்கள் ஏராளம். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்குவோருக்குக் குறைந்தது இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் சம்பாதிக்க நினைத்த அளவுக்கு பணத்தை நீதிமன்றத்துக்காகச் செலவிட வேண்டியுள்ளது. டிராவல்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் பெருகிய அளவுக்கு அதை நெறிமுறைப்படுத்துவதற்கான சட்டங்களோ அல்லது விதிமுறைகளோ இல்லை. இந்த மோசடியில் ஒரு கும்பலே இயங்கிக் கொண்டிருக்கிறது. விண்ணப்பம் செய்வதிலிருந்து, இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், காவல் துறையின் சரிபார்த்தல் பணியும் ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்படாததும் இதற்கு ஒரு காரணம். விண்ணப்பதாரர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தகவல் அனுப்பப்படும். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதும், அந்த நபரின் முழு விவரங்களையும் சேகரித்து, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால், பல காவலர்கள் விண்ணப்பதாரரின் வீட்டைத் தேடிச் செல்வதில்லை. காவலர்கள் வீடு தேடி வருவதற்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களே காவல் நிலையத்தை தேடிச் செல்கின்றனர். இவர்களிடம் சில "நூறுகளைப் பெறும்' காவலர்களும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் விசாரணையை முடித்து விடுகின்றனர். விண்ணப்பதாரர்களைப் பற்றிய முழுமையான விசாரணை இல்லாமல், அரைகுறையாக முடிக்கப்பட்டு விடுகிறது. இதனால், விண்ணப்பதாரர்கள் தவறோ அல்லது முறைகேடோ செய்திருந்தால்கூட அது மறைக்கப்பட்டு விடுகிறது. எப்படி இருப்பினும் விதிமுறைக்கு மாறாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு போலீஸôரிடம் சிக்கிக் கொள்கின்றனர். பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தினால் இதுபோன்ற முறைகேடுகளை ஓரளவு தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நெருங்கி வருகிறது தண்ணீர்ப் பஞ்சம்!

நீராபத்து, இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் விபரீத விபத்து என்றே கூறலாம். இப்போது கோடைக்காலம் தொடங்கியதும், மாநிலத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னை, இன்னும் சில ஆண்டுகளில் கோடைக்காலம், மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் இருக்கும்.அந்த அளவுக்கு நம்முடைய சீர்கெட்ட குடிநீர் மேலாண்மையாலும், அதிகரிக்கும் குடிநீர்த் தேவையாலும் நீரை அத்தியாவசியப் பொருளாகப் பார்ப்பது மறைந்து, மருந்துப் பொருளாகப் பார்க்கும் காலம் விரைவிலேயே ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.தமிழகம், குடிநீர் உள்பட அனைத்து நீர் தேவைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் உள்ளது. பருவமழை பெய்வதைப் பொறுத்துத்தான் நீர்நிலைகளும், ஆறுகளிலும் நீர் பெருகுகிறது. மாநிலத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. ஆகும். ஆனால், இந்த மழை அளவைத் தமிழகம் எட்டிப்பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே இந்த மழை அளவை சில ஆண்டுகள் எட்டிப்பிடித்தாலும் அப்போது ஏதாவது ஒரு பகுதியில் அழிவு மழையாகப் பெய்து, இருக்கின்ற எல்லாவற்றையும் கடலுக்கு அடித்துச் சென்று விடுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே அளவில் பெய்யாமல், ஏதோ ஒரு பகுதியில் அழிவு மழையாகவும் இதர பகுதிகளில் லேசாகவும் பெய்து வருகிறது.இதனால் அண்மைக்காலமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.நாட்டில் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறி வரும் அரசு, நீர் மேலாண்மையில் இப்போதைய நிலைமை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குச் சென்றுவிடும். தமிழகத்துக்கு ஆண்டுக்கு 54,395 மில்லியன் கன மீட்டர் நீர் தேவையானதாக இருக்கிறது. இதே அளவில் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், 2050-ம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவை 57,725 மில்லியன் கன மீட்டராக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள தண்ணீர்த் தேவைக்கே, பக்கத்து மாநிலங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் தேவைப்படும்பட்சத்தில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.ஆறு, அணை, குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளைக் கொண்டு, இப்போது தண்ணீர் தாகத்தைத் தமிழகம் தணித்து வருகிறது. மாநிலத்தில் சுமார் 39,202 குளங்கள் உள்ளன. இதில் மழையையும், ஆறுகளின் பாசனத்தையும் சார்ந்து மட்டும் தோராயமாக 20,104 குளங்கள் உள்ளன. குறிப்பாக மழையை எதிர்பார்த்து 80 சதவிகித குளங்கள் உள்ளன. இக் குளங்கள் அனைத்தும் மன்னர் காலங்களில் வெட்டப்பட்டவை. போதிய பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் இவற்றின் நீர்ப்பிடிப்புத் தன்மை பெருமளவு குறைந்துள்ளது. இப்போது குளங்களில் நீர்ப்பிடிப்புத் தன்மை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், இந்தக் குளங்கள் மூலம் பாசனம் பெறும் பரப்பளவும் 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள குடிநீர் விநியோகமும், விவசாயமும் சூதாட்டத்தைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. மாநிலத்தில் முக்கியமாக 34 நதிகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து சுமார் 86 துணை நதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே உற்பத்தியாகி, தமிழகக் கடல்பகுதியில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணிதான். இந்த நதியைத் தவிர பெரும்பாலான முக்கிய நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்துக்குள் வரும் நதிகளாகவே இருக்கின்றன. இப்போதுள்ள அரசியல்வாதிகளாலும், அரசுகளாலும் இந் நதிகளின் நீர்வளத்தை முழுமையாக நம்ப முடியாத சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளம் குறைந்து வருவதால், நீர்வளமும் குறைந்து வருகிறது. ÷மேலும், மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் மேடாகி வருவதால் அதிக அளவிலான நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான அணைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8 அணைகளில் 30 சதவிகிதமும், 2 அணைகளில் 50 சதவிகிதமும், 4 அணைகளில் ஒரு சதவிகிதமும் நீரைத் தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்மைக்காலமாக அரசால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மணல் திருடர்களால், ஆற்று மணல் திருடுவது அதிகரித்துள்ளதால் மண்வளம் மட்டுமன்றி, நீர் வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் போக்கையே மாற்றிவிடும் அளவுக்குப் பகிரங்கமாக நடைபெறும் இந்தத் திருட்டால், ஆறுகளில் நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் வேகமாகக் குறைந்து வரும் நீர்வளத்தைப் பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அது கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் உள்ளது. நீர்வளத்தைப் பெருக்காவிட்டாலும், இருக்கின்ற வளத்தையாவது காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மலைப் பகுதியில் வியாபார ரீதியான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆறுகள் மூலம் நடைபெறும் நீர் வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். நீர்நிலைகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மீது தனி அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளப்படுவதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்மேலாண்மையில் அரசு காலதாமதமோ, அலட்சியமோ செய்யும்பட்சத்தில், வரும்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

பாயும் ரூபாய்; தேயும் வருவாய்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக்காலமாக எட்டுக்கால் பாய்ச்சலில் உள்ளது. சென்ற 18 மாதங்களில், ஏப்ரல் 16 வரை, இதுவே அதிகபட்ச உயர்வு. டாலருக்கு ரூ. 44.32 என்ற நிலை உள்ளது. இன்னும் சொல்வதென்றால், கடந்த 13 மாதங்களில், ரூபாய் மதிப்பு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த அளவு டாலரின் மதிப்பு சரிந்துள்ளது.இது ஏற்றுமதியாளர்களை நேரடியாகப் பாதிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் லாபம் குறைகிறது. எப்படி? நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலர் மதிப்பு சரிந்தால், நமக்குக் குறைந்த அளவில்தானே ரூபாய் கிடைக்கும்?இரண்டு ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. அதனால் ஏற்றுமதி குறைந்தது. இப்போது பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் வருகின்றன. ஆனால், டாலர் மதிப்பு சரிவால் ஏற்றுமதி செய்பவர்களுக்கு லாபம் குறைந்துவிட்டது.இதில் வேடிக்கை என்னவெனில், இப்போதுகூட, இந்தியாவின் ஏற்றுமதியைவிட, இறக்குமதிதான் அதிகம். காரணம், நமது இறக்குமதியில் பெரும் பகுதி பெட்ரோலியப் பொருள்கள்தான். அப்படியானால், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பது எப்படி?இந்தியப் பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகள் பெரிய அளவில் குவிகின்றன. இதுதான் டாலர் மதிப்பு குறைவதற்கும், ரூபாய் மதிப்பு உயர்வதற்கும் காரணம். 2009-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர்வரை 23.6 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் நூறு கோடி) இந்திய பங்குச் சந்தையில் வந்து குவிந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கடந்த ஓராண்டில் வெளியேறிய தொகை 11.3 பில்லியன் டாலர்கள் மட்டுமே.பொதுவாக, இதுபோன்ற தருணங்களில் பாரத ரிசர்வ் வங்கி தலையிட்டு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஓர் அளவுக்குமேல் உயராமல் பார்த்துக் கொள்வது வழக்கம். அதாவது, பணச்சந்தையிலிருந்து ரிசர்வ் வங்கி கணிசமான அளவு டாலரை கொள்முதல் செய்து, வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பைத் தாங்கிப்பிடிப்பது ஒரு வழக்கமான செயல்பாடு. ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்வித செயல்பாட்டில் இதுவரை ஈடுபடவில்லை.பணவீக்கம், விலைவாசி அதிகரிப்பதால் மக்கள் அவதிப்படும் இந்த வேளையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ரிசர்வ் வங்கி முழுமையாக ஈடுபட்டுள்ளது.2010-ம் ஆண்டு தொடக்கம் முதல் பாரத ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கவனித்தால் இது தெரியும். ஜனவரி மாத கடைசியில், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்புத் தொகை 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது சி.ஆர்.ஆர். (அதாவது கேஷ் ரிசர்வ் ரேஷியோ) எனப்படுகிறது. இதன்மூலம் ரூ. 36,000 கோடி ரூபாய் வங்கிகளிடமிருந்து பாரத ரிசர்வ் வங்கிக்குக் கைமாறியது. வங்கிகளிடம் உள்ள உபரிப் பணத்தை உறிஞ்சும் நடவடிக்கை இது.மார்ச் மாதம், ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்குகின்ற குறுகிய கால கடனுக்கானவட்டி விகிதம் (இதனை "ரெப்போ ரேட்' என்கிறார்கள்) 4.75 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.அதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்கும் குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் (இது "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' என அழைக்கப்படுகிறது) 3.25 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.மீண்டும் ஏப்ரல் 20-ல் பாரத ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர நிதிக் கொள்கையை அறிவித்துள்ளது. இதில் மேலே குறிப்பிட்ட சி.ஆர்.ஆர்., "ரெப்போ ரேட்' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' ஆகிய மூன்று விகிதங்களும் மேலும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இவை அனைத்தும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, பணவீக்க விகிதம் மற்றும் விலைவாசியைக் குறைக்க வழிவகுக்கும். ஆகவே இவை வரவேற்கப்பட வேண்டிய செயல்பாடுகள்.ஆனால், ரூபாய் நாணய மதிப்பு உயர்வதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அல்லது ஏற்றுமதியாளர்கள் துயர்துடைப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இது ஏற்றுமதியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள், டாலர் சரிவு மற்றும் ரூபாய் மதிப்பு உயர்வால், இரண்டு வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.ஒன்று, சீனாவில் நாணய மதிப்பு உயராமல், ஒரே நிலையில் பல்லாண்டுகளாக வைத்திருக்கிறார்கள். அந்த நாட்டில் இதை ஒரு வியாபார உத்தியாகக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தியாவைவிட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதாகக் கூறி இந்தியாவுக்குக் கிடைக்கக்கூடிய ஆர்டர்களைத் தட்டிச் செல்கிறார்கள்.இரண்டாவதாக, ஏற்றுமதி செய்த பொருள்களின் விலை டாலர்களாக வரும்போது, குறைந்த அளவிலான ரூபாய்தான் ஏற்றுமதியாளர்கள் கைக்குக் கிடைக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை, கடந்த 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான "யுயான்' மதிப்பு ஒரே நிலையில் ஸ்திரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.1990-களின் தொடக்கம் வரை சீனாவின் இந்தச் செயலை எந்த நாடும் ஆட்சேபிக்கவில்லை. காரணம், அந்த காலகட்டத்தில், ஓராண்டில் சீனாவின் ஏற்றுமதி அதிகமாக இருந்தால், அடுத்த ஆண்டில் சீனாவின் இறக்குமதி அதிகமாக இருக்கும். சீனாவின் ஏற்றுமதி இவ்வாறு மாறி, மாறி அதிகமாகவும், குறைவாகவும் இருந்து வந்ததால், இதனால் பிற நாடுகள் பாதிப்படையவில்லை. ஆனால், 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, சீனாவின் ஏற்றுமதி கிடு, கிடுவென உயர்ந்துவிட்டது.இந்நிலையில், நாணய மதிப்பீடு விஷயத்தில் சீனா மேற்கொண்டுள்ள உத்தியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்த்து வருகின்றன. ஒரே ஒரு வித்தியாசம்:சீனா தனது நாணயத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வெளிப்படையாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் சீனாவிடம் ரகசியமாகவும், சற்று நீக்குப்போக்குடனும் வேண்டுகோள் விடுக்கின்றன. ஆனால், இந்தியாவோ, சீனாவிடம் இதுதொடர்பாக இன்னும் தனது எதிர்ப்பைப் பதிவு கூட செய்யவில்லை. இந்தியாவும் இதர நாடுகளைப்போல் இவ்விஷயத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நாடு என்பது என்னவோ உண்மை.இது ஒருபுறம் இருக்க, இந்தியாவிலிருந்து ஜவுளி, தோல் பொருள்கள், ஆபரணக் கற்கள், தங்க ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், கலைப் பொருள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களையும் மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதி செய்பவர்களையும் இழப்பிலிருந்து காப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும் கூட.எனவே, பாரத ரிசர்வ் வங்கி பணவீக்க கட்டுப்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேநேரம், ரூபாய் மதிப்பு தொடர்பாகவும் உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.ரூபாயின் மதிப்பு ஏற்றம், டாலரின் மதிப்பு சரிவு, இந்தியாவில் ஏற்றுமதியை மட்டும் அல்லாமல், தொழில் வளர்ச்சியையும், முக்கியமாக வேலைவாய்ப்புகளையும் மோசமாகப் பாதிக்கும் என்பதை மனத்தில் கொள்வது அவசியம்.

புதிய சிக்கலில் மாணவர் கல்வி?
நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், அந்தப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற வருகின்றன. இதில் கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் மக்கள்தொகையைக் கணக்கெடுக்க வேண்டும். இந்தப் பணி அடுத்த ஆண்டு வரை நீடிக்கிறது. இதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பணி நேரத்தில் ஒரு மணி நேரம் கணக்கெடுக்கச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இதைப் பயன்படுத்தினால்தான் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால், காலை அல்லது பிற்பகல் நேரங்களில் முழுமையாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். ஏற்கெனவே அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக ஆசிரியர்களுக்குப் பள்ளி நாள்களில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த நாள்களில் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியாத நிலை உள்ளது. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலும் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும். இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் 1-ம் தேதி முதலே கணக்கெடுப்புப் பணியைத் தொடங்க வேண்டி உள்ளதால் மாணவர் சேர்க்கை, புதிய பாடங்கள் தொடக்கம் ஆகிய கல்விப் பணிகள் முடங்கும் நிலை உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. கல்வி முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேளையில் ஆசிரியர்கள் பிறபணிகளுக்குச் சென்று விட்டால் ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறையில் தான் மாணவர்கள் காத்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலைக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.இவர்களில் பலருக்கு அரசு கருணைத் தொகையும் வழங்கி வருகிறது. இவர்களைக் கொண்டு மக்கள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டால் அவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் கல்வி பணிகளும் பாதிக்காது.அதிகாரிகள் ஏனோ இது பற்றி சிந்திக்காமல் உள்ளனர். ஏழை மாணவர்களின் கல்வியில் அலட்சியம் காட்டாமல் இந்தப் பிரச்னையில் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு எவ்வழியோ, மக்கள் அவ்வழியே

அதிகரித்து வரும் பொறுப்பற்ற நுகர்வுக் கலாசாரத்தின் அடையாளமாகத் தமிழகம் முழுவதும், ஏழை பணக்காரர், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல், பெரியவர்கள் முதல் பள்ளிச் சிறுவர் வரை எல்லோரும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்றவற்றை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுகிறோம்.ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பிளாஸ்டிக்குகளின் பல வகையான பாதிப்புகளைச் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் பல நீரோடைகளை இன்றைக்கு குட்டைகளாக மாற்றியதில் இவ்வகை பிளாஸ்டிக்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. மலேரியா, யானைக்கால், டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்களின் அசுர வளர்ச்சிக்கும் நீர்நிலைகள் மற்றும் சாக்கடைகளை பிளாஸ்டிக் அடைத்துக் கொள்வதற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை யாரும் கண்டு கொண்டதற்கான அறிகுறிகளே இல்லை.பிளாஸ்டிக் பொருள்கள் சாக்கடைகளை அடைத்துக் கொண்டு, கழிவுநீர் தெருவில் வழிந்தோடும் போது, அடைப்பை இயந்திரம் கொண்டு சரி செய்ய இயலாமல் போகிறது. இதனால், சக மனிதர்கள் மீண்டும் மீண்டும் பாதாளச்சாக்கடைகளுக்குள் இறங்க வேண்டிய நிலையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.÷கோயில் அர்ச்சனைப் பொருள்கள், பிரசாதம் முதல், உணவு விடுதிகளில் பார்சல் வரை, கையேந்தி பவன், டாஸ்மாக் பார்கள் முதல் அசைவக்கடைகள் வரை, ஆபத்தான மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பேக்கேஜுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அத்தனையும் பின்னர் சாலைகளையும், குப்பை மேடுகளையும் வந்தடைகின்றன.நகரங்களில் துரத்தி விடப்பட்ட மாடுகளாய் இருந்தாலும் சரி, கிராமங்களில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்படும் கால்நடைகளாய் இருந்தாலும் சரி, எல்லா உயிர்களும் மீந்த உணவுகளுடன் சேர்ந்து தூக்கி எறியப்பட்ட ஆபத்தான பிளாஸ்டிக்குகளை விழுங்கி விட்டு இறக்க நேரிடுகிறது. கன்றுக்குட்டிகள் கூட பிளாஸ்டிக்கை விழுங்கியதால் இறப்பது தமிழக கிராமங்களில் தொடர்கதையாகி வருகிறது.கடந்த ஆண்டு சென்னை கால்நடை மருத்துவமனையில் இறந்து போன ஒரு மாட்டின் வயிற்றிலிருந்து, 45 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் வெளியே எடுக்கப்பட்டபோது, மருத்துவர்களே திகைத்துப் போனார்கள்.பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் விழுங்குவதால், பசு மற்றும் எருமைப் பாலில் எவ்வகையான நச்சுப் பொருள்கள் கலக்கின்றன எனும் ஆராய்ச்சியை சமீபத்தில் துவக்கியுள்ளது கால்நடைப் பல்கலைக்கழகம்.÷கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் போன்றவையும் மிதக்கும் பிளாஸ்டிக் துகள்களை விழுங்கிவிடுகின்றன. இப்படி, மீன் உணவாய் இருந்தாலும், பசும்பால், மாமிசம் போன்றவையாய் இருந்தாலும் உணவுச் சங்கிலியிலேயே பிளாஸ்டிக்கின் நச்சு, வேகமாகக் கலந்து வருகிறது.÷இன்று பெரும்பாலான வீடுகளில், பல விதமான சாயங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் குடங்களில்தான் குடிநீர் சேகரித்து வைக்கப்படுகிறது. இதுவும் மிகவும் ஆபத்து நிறைந்தது.÷கோடைக்காலங்களில் குடம் சிறிது சூடாகும் போது கூட கசிவு மூலம், ஆபத்தான உலோகம் கொண்ட வேதிப் பொருள்கள் குடிநீரில் கலக்க வாய்ப்புகள் உண்டு.÷இவை எல்லாவற்றையும் விட பரிதாபகரமானது, மறுசுழற்சி செய்யப்படும் சிறிய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைதான். படிக்காத, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் இவ்வகை ஆலைகளில் வேலை செய்கின்றனர்.÷சில நேரம், ஆலையின் நிறுவனரே மறுசுழற்சி வேலையிலும் ஈடுபட்டிருப்பார். இவர்கள் எல்லோரும் மறுசுழற்சியின் போது வெளிப்படும் நச்சுக்காற்றை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டு இருப்பவர்கள். நரம்புத்தளர்ச்சி, மலட்டுத்தன்மை, ஒவ்வாமை, சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு, காசநோய், புற்றுநோய் போன்ற பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்படும் ஆபத்தான சூழ்நிலையில் தினமும் தவறாது வேலை செய்து வருகிறார்கள்.அதேபோல, பெரும்பாலான மக்களின் பொறுப்பற்ற நுகர்வுக் கலாசாரம் வெளிப்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தெருக்களிலும், குப்பை மேடுகளிலும் சேகரித்து எடுத்து மறுசுழற்சிக்குக் கொடுப்பதற்காக என்று ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்துள்ளோம். ÷இருபத்தோராம் நூற்றாண்டில் பெரும்பாலான தலித்துகளுக்கு ஒரு புதிய தொழிலைக் கொடுத்து, ஓர் உள்ஜாதியை உருவாக்கி வைத்துள்ளோம். நவீனமயமாக்கலில் தோன்றிய விபரீத வருணாசிரமத்தின் இன்றைய புதிய வெளிப்பாடுதான் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள்.÷நலிவுற்ற தாய்மார்கள் முதல் கஞ்சா நுகரும் சிறுவர்கள் வரை, சமூகம் வீசி எறிவதைச் சேகரித்து எடுத்து, வயிறு வளர்க்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டவர்கள் இவர்கள். குப்பை வளாகங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த வளாகங்களுக்கு அருகில் வசிப்போருக்கு, மற்றவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையான சுகாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.பெருங்குடி குப்பை வளாகத்துக்கு அருகில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் கூட "டையாக்சின்' போன்ற நச்சு அதிகமாக இருந்ததை ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டுவந்தன.2002-ம் ஆண்டு மே மாதம் இவ்வகை பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று அன்றைய ஆளும் கட்சியால், தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக்குக்கு எதிராக பொதுக்கருத்தும் உருவானது.÷மசோதாவுக்கு ஆதரவாக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரு மணி நேரம் சட்டசபையில் பேசினார். ஆனால், பிளாஸ்டிக் நிறுவனங்கள் கொடுத்த அழுத்தத்தினால், அன்று மதியம் நிறைவேற வேண்டிய மசோதா திடீரென்று அரசால் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 2003-ம் ஆண்டு, 60 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை, இதனைப் பற்றிய நீண்ட மவுனமே, அரசின் பதிலாக உள்ளது.கடந்த ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பாக, இந்த மசோதாவைச் சட்டமாக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் சங்கங்களின் மனுவையும் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கடந்த ஆண்டு தில்லி அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அங்குள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் முதலில் தில்லி உயர் நீதிமன்றத்திலும், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்குகளைத் தள்ளுபடி செய்த உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள், பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தின.தில்லி மட்டுமல்லாது, சண்டீகர், இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், காஷ்மீர், மும்பை போன்ற பல மாநிலங்களிலும், நகரங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரிலேயே மேற்சொன்ன மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு சட்டமாக்க வேண்டும்.÷இவ்வகைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு நஷ்ட ஈடோ, மானியமோ, வட்டியில்லாத கடன் வசதியோ அளித்து மாற்றுத் தொழில்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இவ்விதமாக வேலை இழப்புகளைச் சரி செய்ய முடியும்.ஆக, தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை ஏற்படுத்தி தீவிரமாகச் செயல்படுத்தினால் தமிழக கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழு பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியும்.அதேசமயத்தில் பிளாஸ்டிக் தடையினால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களையும் வேலையிழப்பிலிருந்தும், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்தும் பாதுகாக்க முடியும்.இத்தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தமிழ் மண்ணைப் பாதுகாப்பாக வைத்து விட்டுப் போக முடியும்.

கண்ணைவிற்றுச் சித்திரம் வாங்கும் கபில் சிபல்!


மத்திய அரசின் புதிய உயர்கல்விக் கொள்கையின் ஒரு முக்கியமான அம்சமாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வந்து தங்கள் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்கலாம் என்ற வகையில் ஒரு சட்டம் உருவாகிறது. இதன் விளைவுகளைச் சிறிய அளவிலேனும் அரசு கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதா என்ற சந்தேகம் நாட்டு நலனில் அக்கறை உள்ள பலருக்கும் ஏற்பட்டுள்ளது.இந்தப் புதிய சட்டத்தின்படி ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் இந்தியாவில் தனது கிளையைத் தொடங்க, 1. குறைந்தபட்சம் ரூ. 50 கோடி முதலீட்டுத் தொகையை உறுதி செய்ய வேண்டும் 2. மத்திய அரசின் யுஜிசியின் ஒப்புதலுடன் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். 3. இந்தக் கல்வி நிலையங்களில் கிடைக்கும் லாபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல முடியாது. கடைசியாக, இந்தக் கல்வி நிலையங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கோ, பழங்குடியினருக்கோ மட்டுமன்றி எந்தவொரு பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது.மேலே கூறிய இந்த நான்கு விதிகளையும் கூர்ந்து நோக்கினால், நமது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் நம் நாட்டின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களாக உலகெங்கிலும் பாராட்டப்படும் ஐஐஎம், ஐஐடி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ், ஏஐஐஎம் ஆகிய பல தரமான பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களைச் சத்தமில்லாமல் இழுத்து மூடும் நிலைமைக்குத் தள்ள, கங்கணம் கட்டிக் கொண்டுள்ளாரோ என்கிற சந்தேகம் நமக்கு உருவாகிறது. எப்படி?முதலாவதாக கல்விக்கட்டணத்தை யுஜிசியின் ஒப்புதலுடன்தான் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றிருக்கிறதே ஒழிய, கல்விக் கட்டணங்கள் ஓரளவுக்கு மேல் இருக்க முடியாது என்ற உச்ச வரம்பு இல்லாத நிலையில், இதுபோன்ற வெளிநாட்டுக் கல்வி நிலையங்கள் நம் நாட்டில் கல்லூரிகளைத் தொடங்கி, மிக அதிகமான கல்விக் கட்டணங்களை உருவாக்கி கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள்.வெளிநாட்டினர்தான் மிகவும் தரமான கல்வியைப் போதிக்க முடியும் என நம்மில் பலர் எண்ணுகிறோம். வெள்ளைத்தோல் ஆசாமிகள், நுனிநாக்கில் நவீன ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பது அறிவின் உச்சகட்டம் என நாம் எண்ணுவது, பல ஆண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சியிலும், இன்றுவரை நமது டி.வி.க்களில் நம்மவர்கள் காணும் ஆங்கில சினிமாக்களினாலும் நமது தேசிய உளவியலைப் பாதித்துள்ளது என்பது நடைமுறை.எனவே, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் உயர்கல்வி நிலையங்களில் நமது நாட்டுப் பணக்கார மாணவர்களும், ஏகப்பட்ட வங்கிக் கடனைப் பெற்று, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களும் சேர்ந்துவிடுவார்கள். இதுபோன்ற அதிகக் கட்டண வசூல் கிடைக்கும் உபரிப் பணத்தைக் கொண்டு மிக அதிகமான சம்பளத்தைப் பேராசிரியர்களுக்கும் மற்றைய கல்லூரி அலுவலர்களுக்கும் அளித்து, இன்றைய தரமான உயர்கல்வி நிலையங்களான ஐஐஎம், ஐஐடி போன்றவற்றின் விரிவுரையாளர்களையும், பேராசிரியர்களையும் இந்தப் புதிய வெளிநாட்டு உயர்கல்வி நிலையங்கள் தங்களது நிறுவனங்களுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள். விளைவு, நமது உயர்கல்வி நிலையங்கள் ஸ்தம்பிக்கும் ஒரு சூழ்நிலை உருவாகும்.ஏற்கெனவே ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் அரசு விதிக்கும் கட்டணக் கட்டுப்பாடு காரணமாகத் தங்கள் நிதித் தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் திணறுவது நம் எல்லோருக்கும் தெரியும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வேலை செய்யும் இந்தியப் பேராசிரியர் ஒருவர், நம் தாய்நாட்டுக்குக் குடிபெயர்ந்து வரவேண்டும் எனவும், தங்கள் நாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி போதிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடும் நமது நாட்டின் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிலையங்களில் வேலைக்குச் சேர்ந்தபின், இங்கே பதினைந்து ஆண்டுகள் வேலை செய்த ஒரு பேராசிரியர் வாங்கும் சம்பளம், அமெரிக்காவில் 30 வயது இளம் ஆசிரியர், பணியில் சேர்ந்த முதலாவது ஆண்டு பெறும் சம்பளத்தில் பாதிதான் என்பதை ஒரு பத்திரிகைக்குப் பேட்டியாக சென்ற ஆண்டு அளித்தது நமது நினைவில் பசுமையாக உள்ளது.அடுத்து, வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்துபவர்கள், அந்தக் கல்வி நிலையங்களில் ஈட்டும் லாபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு போக முடியாது எனும் விதி. இதன் காரணமாக, ஹார்வர்ட், ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இங்கே வராது. காரணம், அவர்கள் எல்லோருமே சுயநிதி கல்வி நிலையங்கள் என்பதால் தங்கள் பல்கலைக்கழகங்களுக்குப் பணம் சம்பாதிக்கும் வழிமுறையில்தான் புதிய கல்விநிலையங்களைத் தொடங்குவார்கள்.ஆனால், மேலை நாடுகளின் இரண்டாம்தர பல்கலைக்கழகங்கள் பல, எல்லா விதிகளையும் மீறி இங்கேயிருந்து தாங்கள் சம்பாதிக்கும் அதிக லாபத்தை ஹவாலா போன்ற வழிமுறையில் தங்கள் நாட்டுக்குக் கொண்டு போக முடியும் என்றவகையில் செயல்படத் துணிவார்கள். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நம் ஊரில் வியாபார நோக்கில் நடத்தப்படும் சாதாரணமான கல்லூரிகள் போன்றவை நிறைய உண்டு. நிறையப் பணத்தைக் கல்விக்கட்டணமாகச் செலுத்தி எளிதாக அவற்றில் பட்டம் பெற்று அந்த நாடுகளில் சாதாரண வேலையில் சேரும் மாணவர்கள் உண்டு. அதுபோன்ற சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே இங்கே வந்து கடை விரிக்கும்.இதுபோன்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து நமது நாட்டின் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அவர்களின் வாரிசுகள் புதிய கல்வி நிலையங்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் முத்திரையுடன் தொடங்குவார்கள். காரணம், அடிப்படைத் தேவையான ரூ. 50 கோடி முதலீட்டுப் பணமும், இதுமாதிரியான கல்வி நிலையங்கள் தொடங்கத் தேவையான நிலங்களை மாநில அரசுகள் குறைந்த விலையில் இக் கல்வி நிலையங்களுக்கு வழங்க மாநில அரசுகளின் தயவும், ஓர் ஏக்கருக்கு இவ்வளவு என்ற லஞ்சப்பணமும் உறுதி செய்யும்.தனியார் கல்வி நிலையங்கள் சிறந்த கட்டடங்களையும், லெட்டர் பேடுகளையும் வைத்துக்கொண்டு, ஏனைய எந்த அடிப்படை வசதிகளையும் செய்யாமல் சுயநிதிக் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் பல ஆண்டுகள் நடத்தியதைக் கண்டுபிடித்து அவற்றின் அனுமதிகள் ரத்து செய்யப்படும் நேரம் இது. இந்தக் காலகட்டத்தில், புதிதாக வெளிநாட்டுச் சரக்கு என்ற போர்வையில் இதுபோன்ற கல்வி நிலையங்கள் உருவாக்கப்படுவது சரிதானா எனும் கேள்வி எழுகிறது.நல்லமுறையில் இயங்கும் இந்திய அரசுசார்ந்த அமைப்புகளில் வெளிநாட்டு, உள்நாட்டுத் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டபின் குட்டிச்சுவரானது அனுபவம் நமக்குத் தந்த பாடம். உதாரணமாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிஎஸ்என்எல் எனப்படும் மத்திய அரசின் தொலைபேசி அமைப்பு உலகெங்கிலும் பாராட்டப்படும் வகையில் நம் நாட்டின் தொலைத்தொடர்புப் பணிகளைச் செய்து வந்தது. தனியார் தொலைபேசிகளை அனுமதித்தபின் இன்று மிகவும் மோசமான நிலைமைக்கு பிஎஸ்என்எல் தள்ளப்பட்டுவிட்டது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் கையூட்டு வழங்கி காரியமாற்றிக் கொள்ளும் வகையில் அரசின் நிறுவனம் ஒன்று செயல்பட முடியாததுதான் இதற்குக் காரணம்.அதுபோலவே பத்து ஆண்டுகளுக்குமுன் ஓஎன்ஜிசி எனப்படும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனம் மிகவும் தரமாக பெட்ரோல், டீசல் உற்பத்தியில் இருந்தது. பின் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸôர் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாமல் இப்போது திணறுகிறது. ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்ஸýம் நஷ்டப்பட்டுச் செயலிழக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது, தனியார் விமான சர்வீஸ்கள் நம் நாட்டில் அனுமதிக்கப்பட்ட பின்னரே.இந்தியாவில் உயர் கல்வியில் ஈடுபட்டிருக்கும் 18,000 கல்லூரிகள், 500 பல்கலைக்கழகங்களை முன்னேற்றும் வகையில் அவற்றுக்கு அதிகப் பணத்தை ஒதுக்கி ஆசிரியர்களின் சம்பளத்தைக் கூட்டி சிறந்த ஆசிரியர்களை ஈர்த்து, விதிமுறைகளைக் கடுமையாக்கி, கல்வியின் தரத்தை உயர்த்துவதே சரியான நடைமுறை. அதைவிடுத்து அவர்கள் இப்போது இயங்கி வரும் தரத்தையும் பாதிக்கும் வகையில் தரமில்லாத வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து கல்வி நிலையங்களைத் தொடங்க வழிசெய்வது சரியாகாது.1990-ம் ஆண்டில் நமது தேசிய வருமானமான ஜிடிபியில் 4 சதவிகிதமும், இக்காலத்தில் ஜிடிபியில் 3.5 சதவிகிதமும் உயர்கல்விக்குச் செலவிடப்படுகின்றன. ஆனால், இதே காலகட்டத்தில் கல்வி நிலையங்கள் பல்கிப் பெருகியுள்ளன. அப்படியென்றால் தனியார் கல்வி நிலையங்கள் பெருகி உயர்கல்வி ஒரு சரியான வியாபாரமாக இந்தியாவில் உருவெடுத்துள்ளது நிரூபணமாகிறது.÷நமது நாட்டின் உயர்கல்வி நிலையங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து, அவற்றின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னேற்ற நடவடிக்கைகளைத் தொடங்குவது அரசின் கடமையாகும்.நமது மத்திய அரசு அவசரக் கோலத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நம் நாட்டில் அனுமதிக்கும் முடிவை எடுக்காமல் இருக்க வேண்டும் என்பது உயர்கல்வியின் முன்னேற்றத்தில் சிரத்தையுள்ள பலரின் அவா! கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிய கதையாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து சிறப்பாகச் செயல்படும் நமது உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் கபில் சிபல், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். கட்சிக்காரருக்கு ஏற்ற வாதத்தை முன்வைத்து வழக்கில் வெற்றிபெறுவது வழக்கறிஞர்களின் தொழில்தர்மம். அமைச்சரின் தொழில்தர்மம், தேசநலனைத் தொலைநோக்குப் பார்வையுடன் காப்பதுதானே தவிர வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வக்காலத்து வாங்குவதும், வசதி செய்து கொடுப்பதும் அல்ல என்று யாராவது அவருக்கு உணர்த்தினால் தேவலாம்.

இருட்டுக் குகைக்குள் குருட்டுப் பூனை...

வாணிபம் செய்வதற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், இங்கிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களையும் சிற்றரசுகளையும் தந்திரமாக வசப்படுத்தி, ஆதிக்கமாக ஆட்சி நடத்தியதை அகற்றி சாதனை புரிந்திருப்பதாகப் பெருமைப்படுகிறோம்.ஆனால், தற்போது அமெரிக்க ஆதிக்கத்துக்கு அவர்கள் விரிக்கும் வலையில் நமக்கு நாமே பெருமையுடன் சிக்கிக் கொள்கிற நிலை உண்டாகிக் கொண்டிருக்கிறது. "உலகமயமாக்கல்' என்ற ஒரு டாம்பீகக் கொள்கையை "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற அடிப்படையில் ஓரளவு ஏற்பதில் தவறில்லை. இன்றைய விரைவான விஞ்ஞான வளர்ச்சிச்சூழலில் தேவையும்கூட.ஆயினும், "கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதுபோல' முழுமையாக அதற்கு உள்படுவது முன்னிலும் கீழான அடிமை நிலையை நாமே ஏற்றுக் கொள்வதாகிவிடும். இருட்டுக் குகைக்குள் உழலும் குருட்டுப்பூனைகளாக ஆகிவிட வேண்டியிருக்கும்.ஏற்கெனவே, நமது பொருளாதாரக் கொள்கையை அமெரிக்கா நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டது.நமது பாரம்பரிய விவசாயப் பொருள்களின் சத்துகளுக்கு அமெரிக்கா பெயர் சூட்டி, அந்தப் பொருள்களின் ""உலகளாவிய காப்புரிமை'' எனும் பெயரில் தனதாக்கிக் கொள்ள முயற்சித்துவிட்டது.÷பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பயிரிடப்பட்டு இன்றளவும் உள்ள கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளுக்கு மரபணு மாற்றம் என்ற பெயரில் தீங்குமிக்கதாகப் பயிரிடச் செய்வதுடன், இந்திய விவசாய பூமியையே பாழ்படுத்தும் திட்டத்துக்கு இணங்கும் நிர்பந்த நிலைமை நேரிட்டுக் கொண்டிருக்கிறது.அணுசக்திக் கொள்கையில் அமெரிக்காவுக்கு இந்தியா நிபந்தனைகள் விதிப்பதற்கு மாறாக, அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கும் நிலை உருவாகி வருகிறது.இந்தியாவில் அயல்நாட்டு மின்நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அதற்கான நஷ்டஈடுக்கு உச்சவரம்பாக ரூ. 2,142.85 கோடி நிர்ணயித்து, அதில் ரூ. 1,642 கோடியை இந்திய அரசே செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுவதைச் சம்மதிக்கும் நிலை வந்துள்ளது.இவையெல்லாம் வெளியே தெரியவந்துள்ள கட்டிகள், புண்களே! ஆனால், உள்ளுக்குள் அழுகி, புரையோடிப் போயுள்ளவை எவ்வளவோ!இந்நிலையில் இந்தியாவுக்குள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை. இந்தத் திட்டம் மசோதாவாகி அமலாகுமானால், வெளிநாட்டினர் நேரிடையாகக் கல்வி நிறுவனங்களை எட்டு மாதத்துக்குள் தொடங்கிவிடலாம்.ஏற்கெனவே, இந்தியப் பண்பாடு, பாரம்பரியம், சீலம் மற்றும் கலைகள் போன்ற உலகளாவிய கண்ணோட்டம் எனும் அடிப்படையில் சீர்குலைந்து விட்டதுடன், இந்தியப் பாதுகாப்பு என்பதே ஐயத்துக்கு உரியதாகவும் அச்சத்துக்கு ஆள்பட்டதாகவும் உள்ளது.÷ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது வரலாறு. அதுபோல், இந்தியாவில் தற்போது தொலைக்காட்சி நாடகங்களிலும் நடனங்களிலும் மக்கள் தமது சிந்தனையை மறந்து திரிவதே நிகழ்கிறது. போர் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது முற்காலத்தில் இருந்த ஆதிக்க மனோபாவம். பின்னர், வணிகம் மற்றும் தானம் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது என்று உருவானது.தற்போது நலம் விளைவிக்கும் நட்புநாடு போல் ஊடுருவியும், மொழி கலைகளை நாசப்படுத்தியும், ஆட்சியாளர்களை வசப்படுத்தி நிர்பந்தம் ஏற்படுத்தியும் அடிமைப்படுத்தும் புதிய போர்க்கலையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இருபது பல்கலைக்கழகங்களும், நானூற்று இருபது கல்லூரிகளுமாக இருந்த நிலையில், அறுபது ஆண்டுகளில் தற்போது முன்னூறு பல்கலைக்கழகங்களும் ஆறாயிரம் கல்லூரிகளுமாக வளர்ந்துவிட்டது.÷இந்தியப் பல்கலைக்கழகங்களில் படித்த பல லட்சம்பேர் உலகின் பல நாடுகளிலும் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்த பொறுப்பு வகிக்கின்றனர்.÷இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் ஒன்றரை லட்சம் இருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்து படிக்கும் மாணவர்களும் மிக அதிகமே.சென்ற ஆண்டில் நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியில் விபத்தில் அமெரிக்கா முதலிய நாடுகள் கடும் பாதிப்பு அடைந்திருந்தாலும், இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. காரணம் - இந்தியாவில் குடும்பக் கட்டமைப்பு, சீரான வியாபார அடித்தளம், வணிக நாணயம், தொழில்நேர்மை போன்ற பாரம்பரியங்கள் பெருமளவு கெட்டுப்போகாமல் இருந்ததுதான்.நமது அரசியல் சுதந்திரம் என்ற தேரைச் செலுத்தும் லகானை அமெரிக்கர்களிடம் அளிக்கத்தான் வேண்டுமா?""வெள்ளையனை வெளியேற்றப் பீரங்கிகள் தேவையில்லை; கைராட்டினமே போதும்'' என்று திடமாக ஒலித்த காந்திஜியின் உருவத்தைக் கரன்சியில் பொறித்துவிட்டு, அமெரிக்க ஆதிக்கத்துக்கு அடிபணியத்தான் வேண்டுமா?கார்கில் போர் நடந்த வேளையில், தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமனிடம் பாகிஸ்தானின் அடாத செய்கை பற்றிப் பலரும் வருத்தம் தெரிவித்தபோது, அவர், ""ஆண்டவனே! பாகிஸ்தானுக்கு நல்ல புத்தி புகட்டுவாயாக... என்று அனைவரும் வேண்டிக் கொள்வோமாக'' என்று கேட்டுக்கொண்டார்.""இந்தியத்துவத்தை உலகுக்கே உணர்த்தி வழிகாட்ட வேண்டும்'' என்ற விவேகானந்தரின் வீர கர்ஜனையை மறந்தும் அயலக மோகத்தில் அந்நியரின் எடுபிடியாகி, அடிமையாகிற நிலையில் இருந்தும், அரசாங்கமும் தேசமும் காக்கப்பட வேண்டும் என்று மக்கள் மனப்பூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டியதுதான்.

0 comments:

0

நேற்றைய புரட்சி -​ இன்றைய எதிர்ப்புரட்சி!

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த நாடுகளில் வண்ணப் புரட்சிகள் மிகப் பிரபலம்.​ ஜார்ஜியாவின் ரோஸ் புரட்சியும்,​​ உக்ரைனின் ஆரஞ்சுப் புரட்சியும் அந்தந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தின.​ ஆசியாவுக்கு வெளியே செக்கோஸ்லாவியாவில் நடந்த வெல்வெட் புரட்சியும் இந்த வரிசையில் சேரும்.​ பொதுவாக அமைதியாகத் தொடங்கும் இந்தப் புரட்சிகள் சில நேரங்களில் வன்முறையாகவும் உருமாறியிருக்கின்றன.​ ஆயினும் பொதுமக்களின் பேராதரவு இந்தப் புரட்சிகளுக்கு எப்போதுமே இருந்திருக்கிறது.​ கிர்கிஸ்தானிலும் இப்படியொரு புரட்சி கடந்த 2005-ம் ஆண்டில் நடந்தது.​ அப்போதைய அதிபர் அஸ்கார் அகயேவ் மீதான ஊழல் மற்றும் மோசடிப் புகார்கள்தான் புரட்சிக்கு அடிப்படைக் காரணம்.​ அது தேர்தல் ஆண்டு என்பதால்,​​ எப்படியும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது.​ ஆனால்,​​ தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன.​ பெரும்பாலான தேர்தல் கணிப்புகளுக்கு மாறாக மீண்டும் அகயேவே வெற்றி பெற்றார்.​ தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்தார் என எதிர்க்கட்சிகளும் பெரும்பாலான ஊடகங்களும் குற்றம்சாட்டின.​ இப்படிப்பட்ட அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஏற்பட்டதுதான் ட்யூலிப் புரட்சி.​ அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களான ரோஸô ஒடுன்பேவா,​​ குர்மன்பேக் பாகியேவ் ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தப் புரட்சியைத் தாக்குப்பிடிக்க முடியாத அகயேவும் அவரது குடும்பத்தினரும் அண்டை நாடான கஜகஸ்தானுக்குப் பறந்தனர்.​ அதே ஆண்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.​ புரட்சியை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவரான பாகியேவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ "மக்களாட்சி மீட்டெடுக்கப்பட்டுவிட்டது;​ ​ இனியெல்லாம் சுபமே' என்று அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல,​​ உலகமே நம்பியது.​ ஆனால் அந்த நம்பிக்கையை நீண்டகாலம் நீடிக்கவிடும் நல்ல அரசியல்வாதிகள் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என்ன?​ ஒரே ஆண்டுதான் அந்த ஆட்சிக்குத் தேனிலவு.​ அதன் பிறகு,​​ யார் புரட்சியாளராளராகவும் ஜனநாயகப் பாதுகாவலராகவும் கருதப்பட்டாரோ,​​ அதே தலைவரின் ஆட்சி மக்களுக்குக் கசக்கத் தொடங்கியது.​ எதிர்க்கட்சித் தலைவர்களையும்,​​ அரசியல் கைதிகளையும் படுகொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.​ மகனுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியதும்,​​ பினாமிகளின் பெயரில் சொத்துகளைக் குவித்ததும் அவருக்கு இருந்த நல்ல பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தின.​ முன்பிருந்ததைவிட நிர்வாகம் சீர்கெட்டது.​ வேலையில்லாத் திண்டாட்டமும்,​​ உணவுப் பற்றாக்குறையும் அதிகரித்தன.​ இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஆட்சியைக் குறைகூறிய ஊடகங்கள் தடை செய்யப்பட்டன.2009-ல் அடுத்த அதிபர் தேர்தல் வந்தது.​ அதிருப்தியடைந்திருந்த மக்கள்,​​ ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.​ ஆனால்,​​ வழக்கம்போலவே அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.​ 78 சதவீத வாக்குகளைப் பெற்று பாகியேவ் மீண்டும் வெற்றிபெற்றார்.​ வெற்றி பெற்ற கையுடன்,​​ பெட்ரோல்,​​ டீசல் விலையையும் மின் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார்.​ அதுவரை உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த மக்களை இந்த விலையேற்றம் போராடத் தூண்டியது.​ இந்த ஆண்டின் தொடக்கம் முதலே,​​ அரசுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின.​ படிப்படியாகச் சில ஆயுதக் குழுக்களும் களத்தில் இறங்கின.​ மார்ச் இறுதியில் இந்தப் புரட்சி இறுதிக் கட்டத்தை எட்டிய ஒரு சில நாள்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.​ இந்த முறை புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் ரோஸô ஓடுன்பேவா.​ 5 ​ ஆண்டுகளுக்கு முன் பாகியேவுடன் சேர்ந்து புரட்சி செய்தாரே அதே தலைவர்தான்.​ இப்போது பாகியேவுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.​ அரசுக் கட்டடங்கள் அனைத்தும் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும்.​ வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட பாகியேவ்,​​ வழக்கம்போல கஜகஸ்தானுக்குப் பறந்தார்.​ இப்போது ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது.​ நாட்டின் தலைமைப் பொறுப்பை ரோஸô ஏற்றிருக்கிறார்.​ இப்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம்,​​ ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் மக்களுக்குக் கிடைத்திருக்கும் நிரந்தரமான வெற்றி என உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு முந்தைய கால அரசியல் மாற்றங்கள் அமைந்திருக்கின்றன.​ அந்நாட்டு மக்கள் ​ கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய,​​ புதிய ஆட்சியாளர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்துவிட்டார்கள் என்று கருத முடியாது.இதுபோன்ற அரசியல் சூழலை மத்திய ஆசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடலாம்.​ ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள்தான் இந்த நாடுகளின் அடையாளம்.​ குடும்ப உறுப்பினர்களை அரசின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதுடன்,​​ முக்கியத் தொழில்களையும் கைப்பற்றுவது தங்களது பிறப்புரிமை என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.​ ஒருங்கிணைக்கப்பட்ட வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் ஆட்சியாளர்களைத் தட்டிக்கேட்கவும் ஆளில்லாமல் போகிறது.இவற்றால் விரக்தியடையும் மக்கள்,​​ தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்.​ இதெல்லாம் மத்திய ஆசியா முழுமைக்கும் பொருந்தும் என்பதால்,​​ கிர்கிஸ்தானின் இப்போதைய அரசியல் புரட்சிகூட துர்க்மெனிஸ்தான்,​​ கஜகஸ்தான்,​​ உஸ்பெகிஸ்தான்,​​ தாஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பரவக்கூடும் என அரசியல் நிபுணர்கள் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.​ கிர்கிஸ்தானின் ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் பரபரப்பாகியிருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு.​ ஆப்கானிஸ்தான் போருக்கான அமெரிக்க விமானப்படைத்தளம் கிர்கிஸ்தானில் இருப்பதுதான் அந்த முக்கியக் காரணம்.​ ஆப்கன்போர் முடிந்துவிட்ட பிறகும்,​​ ரஷியா,​​ சீனாவின் எதிர்ப்பையும் மீறி இந்தத் தளம் தொடர்ந்து இயங்கி வருவதும்,​​ ​ ஆட்சிகள் பல மாறினாலும் இந்த படைத்தளத்துக்கான வாடகை ஒப்பந்தத்தை மட்டும் தடைபடாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதும்தான் உலக அரசியலில் சாமான்யர்களுக்குப் புரியாத ரகசியங்கள்.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    13 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    13 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive