கற்பழிப்பை ஆயுதமாக பிரயோகிக்கிறார் கடாபி-ஹில்லாரி பாய்ச்சல் Connect with ஐபோன்4-தமிழில் படிக்க உதவும் டெளன்லோட்
வாஷிங்டன்: பெண்கள் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை ஆயுதமாக பாவிக்கிறார்கள் லிபிய அதிபர் கடாபியின் ராணுவத்தினர் என்று குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,லிபியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குறிப்பாக பாலியல் வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளது. இது கவலை தருகிறது. தங்களுக்கு எதிராக பெண்கள் திரும்பி விடக் கூடாது என்பதற்காக கற்பழிப்பையும், பாலியல் வன்முறைகளையும் ஒரு போர் ஆயுதமாக கடாபியின் ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர்.
மேலும் தங்களுக்கு எதிராக போராடும் பெண்கள் மீதும் பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
கன்னித்தன்மை சோதனை என்ற பெயரில் பெண்களை அவர்கள் சித்திரவதை செய்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துகிறார்கள். பல்வேறு வகையான பாலியல் சித்திரவதைகளை அவர்கள் பெண்கள் மீது ஏவி விடுகிறார்கள்.
தங்களுக்கு எதிராக போராடும் ஆண்களை வழிக்குக் கொண்டு வர அவர்களது வீட்டுப் பெண்களை பிடித்து வைத்து அவர்களை பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கி வருகிறது ராணுவம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார் ஹில்லாரி.

0 comments: