மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச வழக்கு-கைதாகிறார்?
மதுரை: மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிமிரத்து கொள்ள உதவியதாக மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவருக்குத் துணை போனதாக மாநகராட்சி கமிஷனர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக இலக்கிய அணிச் செயலாளரான சுந்தரராஜன் மதுரை மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இந்த இடத்தை பதிவு செய்வதற்காக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மேயரின் தலையீட்டால் சர்வேயர் குருசாமி லஞ்சம் வாங்கிக் கொண்டு இடத்தை சுந்தரராஜனுக்கு கிரையம் செய்ததாக மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயராமன் என்பவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட் கடந்த 14ம் பிறப்பித்த உத்தரவில், இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதால் இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன், காண்ட்ராக்டர் மாணிக்கம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
லஞ்சம் வாங்குதல், கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தேன்மொழி உட்பட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

0 comments: