Saturday, July 28, 2012

0

எச் ஐ வியை முழுமையாக குணமாக்கும் சாத்தியம்

Posted in

எச் ஐ வி வைரஸானது மனித உடலுக்குள் புகுந்ததும் உடனடியாக தாக்குவதில்லை. மனித உடலில் சில செல்களுக்குள் புகுந்துகொண்டு செயற்படாமல் மறைந்து ஒளிந்துகொள்கிறது. இப்படியான நிலையில் இந்த எச் ஐ வி வைரஸானது பல ஆண்டுகள் மறைவாக இருக்க முடியும்.

இப்படி செல்களுக்குள் புகுந்துகொண்ட நிலையில் இருக்கும் எச் ஐ வி வைரஸை கண்டுபிடிக்கவே முடியாது. குறிப்பாக மனித உடலின் நோய் எதிர்ப்பு செல்களாலோ, எச் ஐ வி தொற்றுக்கு எதிரான ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகளாலோ இப்படியான வைரஸை கண்டுபிடித்து தாக்கமுடியாது. இதனால்தான் இன்றுவரை எச் ஐ வி தொற்றை முழுமையாக அழிக்கக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க முடியாத நிலை நிலவுகிறது.

இப்படி மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ்கள் திடீரென்று ஒருநாள் தான் ஒளிந்துகொண்டிருக்கும் செல்லிலிருந்து வெளியே வந்து மனிதனை தாக்கத்துவங்கும் நிலை இருப்பதால் தான் இன்றுவரை எச் ஐ வி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலைமையை மாற்ற முடியும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.


மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸை பலவந்தமாக வெளியே கொண்டுவந்து, அதை தாக்கி அழிக்கமுடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் நேச்சர் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் தெரிவித்திருக்கிறார்கள்.

புற்றுநோய் மருந்து உதவும்

புற்றுநோய்க்கான மருந்தாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று ஒரினோஸ்டாட். இந்த மருந்தை எச் ஐ வி தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கொடுப்பதன்மூலம், செல்களுக்குள் மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ் பலவந்தமாக அந்த செல்களில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இப்படி வெளியே வந்த செல்களை ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகள் தாக்கி அழித்துவிடுகின்றன.

இதற்கான முதற்கட்ட பரிசோதனைகள் எச் ஐ வி தொற்றுக்குள்ளான எட்டு பேரிடம் நடத்தப்பட்டன. இவர்களுக்கு ஒரே ஒருமுறை புற்றுநோய்க்கு எதிரான மருந்தான ஒரினோஸ்டாட் மருந்து அளிக்கப்பட்டதும், அவர்களின் உடலின் செல்களில் ஒளிந்திருந்த எச் ஐ வி வைரஸ்கள் எல்லாமே பலவந்தமாக வெளியே வந்தன. இந்த எதிர்வினை தங்களின் கண்டிபிடிப்பை உறுதி செய்திருப்பதாக கூறுகிறார் இந்த சோதனைகளை நடத்திய விஞ்ஞானிகள் குழுமத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட் மார்கோலிஸ்.

'ஆனால் நீண்ட காலம் பிடிக்கும்'

''மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸை குறிவைத்து தாக்கவும், காலப்போக்கில் அழிக்கவும் கூடிய வழிகளை நாம் கண்டறியத் துவங்கியிருக்கிறோம். இப்படி ஒரு மனிதனின் உடலில் மறைந்திருக்கும் எச் ஐ வி வைரஸ்கள் அனைத்தையும் நாம் அழித்துவிட்டோமானால், நாம் அந்த நபரை எச் ஐ வி வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணப்படுத்திவிட்டோம் என்று கூறமுடியும்'' என்கிறார் டேவிட் மார்கோலிஸ்.

உலகம் முழுவதும் எச் ஐ வி வைரஸால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையளிக்கும் செய்தி. எச் ஐ வி தொற்றுக்குள்ளானவர்களுக்கு தற்போது அளிக்கப்படும் ஆண்டி ரெட்ரோவைரல் மருந்துகள் அவர்களின் தொற்றை கட்டுபடுத்தி அவர்களின் ஆயுளை நீட்டிக்க உதவுகின்றன. இதன் விளைவாக, எச் ஐ வி தொற்று ஏற்பட்டாலே உடனடி மரணம் என்கிற ஆரம்பகால ஆபத்து இப்போது இல்லை. இந்த பின்னணியில் இதை முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை இந்த குறிப்பிட்ட ஆய்வின் முடிவுகள் முதல்முறையாக உண்டாக்குவதாகவும், இது ஒரு திருப்புமுனையாக இருக்கலாம் என்றும் கூறுகிறார் மருத்துவர் டேவிட் மார்கோலிஸ்.

ஆனால் இவரது இந்த எதிர்பார்ப்புகள் உண்மையாக நடைமுறைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கலாம். எச் ஐ வி வைரஸை முழுமையாக அழித்து ஒழிக்கவல்ல நிலையை எட்டுவதற்கு மேலதிக ஆய்வுகள் தேவை. அதை மேற்கொள்வதற்கான ஊக்கத்தை இந்த ஆரம்பகட்ட முடிவுகள் அளித்திருக்கின்றன

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.