அலெப்போ நகர் சுற்றிவளைப்பு
Posted in historyசிரியாவின் அரச படைகள், நாட்டின் மிகப்பெரிய நகரான அலெப்போவை அனைத்து திசைகளிலிருந்தும் சுற்றி வளைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலெப்போ நகரின் பெரும் பகுதிகள் இன்னமும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளின் வசம் இருப்பதாக அறியப்படும் நிலையில், அவர்களுடன் அரசு ஒரு சண்டைக்கு தயாராகி வருகிறது.
அந்த நகருக்கு வெளியே இருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர், சிரிய இராணுவத்தின் பெருமளவிலான யுத்த டாங்கிகள் அலெப்போ நகரை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறுகிறார்.
அதே வேளை, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கு பகுதியில் ஆக்ரோஷமான மோதல்களும், கடும் குண்டுத் தாக்குதலும் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
0 comments: