அழகி ஒருத்தி அரிசி விக்கிறா!
அருகில் உள்ள புகைப்படத்தில் தோன்றும் பெண்ணைப் பார்த்தால் முதலில் என்ன தோன்றுகிறது உங்களுக்கு?
குறைந்த பட்சம் யாரோ ஒரு ஜப்பானிய இளம்பெண் என்றாவது தோன்றும்! நானும் உங்களைப் போலத்தான் நினைத்தேன்.
என்ன, நான் இரண்டு வருடமாக ஜப்பானில் வசித்து வருவதால் ஒரு படி மேலே போய்,"ம்ம்ம்..... இந்த பொண்ணுகூட, ரயில்வண்டிக்குள்ள ஏறி அழகுசாதனப் பெட்டிகூட குடித்தனம் நடத்த ஆரம்பிக்கிற சராசரி பொண்ணுங்கள்ல ஒருத்தியாகத்தான் இருக்குமென்று நினைத்தேன்
அவ்வளவுதான்! ஆனால் அப்படி நினைத்த நீங்களும்(?) நானும் ஏமாந்து விட்டோம்.
சரியாச் சொல்லனும்னா…..இந்த பொண்ணு பாரதி கண்ட புதுமைப்பெண்ணுங்க! என்ன ஒன்னு, ஜப்பானில் வாழ்கிற பாரதி கண்ட புதுமைப்பெண்.
சரி விஷயத்துக்கு வருவோம், இந்தப் பெண்ணுடைய பெயர் ஷிஹொ ஃபுஜிதா.சொந்த ஊர் டோக்கியோவின் ஷிபுயா எனப்படும் நகரம்.
அடிப்படையில் இந்த பெண் ஒரு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்! இவள் தொழில் பெண்களின் அழகு சாதனப் பொருட்கள் சம்பத்தப்பட்டது.
இவள் இணையதளத்தில் மிகவும் பிரபலம் ஜப்பானில்.இவளுக்கு சமுதாயம் சூட்டிய பெயர் ஷிபுயா காள்(shibuya gal) ஆனால் அதுவல்ல விசேஷம்!
அது என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ள ஆனந்தி சஞ்சிகையின் ஆன்லைன் பதிப்பின் பக்கம் 42 மற்றும் 43 க்கு செல்லுங்கள். இணைப்பு : www.aananthi.com
0 comments: