Saturday, May 8, 2010

0

மழைநீர் கிராமங்களுக்குள் புகுந்து பாதிப்பு: ஆபத்தை ஏற்படுத்தும் மரணக்கிணறு

ஆண்டிபட்டி: மொட்டனூத்து ஊராட்சி ரோசனப் பட்டி மற்றும் கரிசல்பட்டியில் மழைநீர் கிராமத்திற்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ஆண்டிபட்டி பகுதியில் கோடை மழை தொடர்கிறது. மொட்டனூத்து ஊராட்சி நல்லமுடிபட்டி அருகே விவசாயத்துறை சார்பில் கட்டப்பட்ட 'செக்டேம்' உடைந்ததால் கூடுதலாக வந்த மழை நீர் ரோசனப்பட்டி ஊருக்குள் புகுந்து விட்டது. குடியிருப்பு பகுதியில் ரோட்டை ஒட்டி உள்ள பயன்பாடற்ற கிணற்றை நிரப்பி கிணறு இருந்த இடம் தெரியாமல் மழைநீர் தேங்கி உள்ளது. 60 அடி ஆழம் இருந்த கிணற்றில் குப்பை கூழங்கள் சகதி இருந்ததால் கிணறு இருந்த இடம் தற்போது பெரிய புதைகுழிபோல் உள்ளது.

ரோட்டை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் இருப்பது ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஊராட்சி தலைவர் அய்யாத்துரை கூறுகையில்,'ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை மூடுவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ளவும், உடைப்பு ஏற்பட்டுள்ள 'செக்டேம்' பகுதியை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். அதேபோல் கரிசல்பட்டி அருகே சில்ஓடை ஆக்கிரமிப்பால் மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ஆசாரிபட்டி பகுதியில் இருந்து எஸ்.எஸ்.புரம் ஊராட்சி கரிசல்பட்டி வழியாக சில்ஓடை வருகிறது. 1.5 கி.மீ.,தூரம் உள்ள இந்த பகுதியின் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளது. ஓடையில் கூடுதலாக வரும் நீர் திசை மாறி சென்று பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகிகள் கூறுகையில்,'சில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. கரிசல்பட்டி அருகே நாகலாறு ஓடையில் அடைப்பு அதிகம் உள்ளது. இந்த அடைப்பால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அடைப்புகளை நீக்கவும், தேவையான இடங்களில் தடுப்பு சுவர் கட்டி வெள்ள நீர் ஊருக்குள் புகுவதை தடுக்கவும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive