Saturday, May 8, 2010

0

0-20 உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்து வெளியேற்றம்

செய்ன்ட் கிட்ஸ், மே 8: பெண்களுக்கான 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வெளியேறியது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியினர் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தனர். 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மற்றொரு ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்தத் தோல்வியையடுத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    13 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    13 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive