Saturday, May 8, 2010

0

"நடப்பு சாம்பியன்' பாக்., "அவுட்'? * ஒரு ரன்னில் நியூசி., "திரில்' வெற்றி




பார்படாஸ்: "டுவென்டி-20' உலக கோப்பை பரபரப்பான "சூப்பர்-8' போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்திடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து, தொடரில் இருந்து வெளியேறியது.
மூன்றாவது "டுவென்டி-20' உ<லக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதன் "இ' பிரிவு "சூப்பர்-8' போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கின. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, பீல்டிங் தேர்வு செய்தார்.
ரெய்டர் ஏமாற்றம்:
நியூசிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே ரன் சேர்க்க திணறியது. ரெய்டர் (7) நிலைக்கவில்லை. அடுத்து வந்த கப்டில்(2), ரெஹ்மானின் சுழலில் சிக்கினார்.
வெட்டோரி அபாரம்:
சற்று தாக்குப்பிடித்த பிரண்டன் மெக்கலம் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். டெய்லர் (3), ஹாப்கின்ஸ் (2) ஏமாற்றினர். சிறிது நேரம் அதிரடி காட்டிய ஸ்டைரிஸ் 21 ரன்களில் அப்ரிதியிடம் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் கேப்டன் வெட்டோரி 38 ரன்கள் எடுத்து அணிக்கு கைகொடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது.
அப்ரிதி அதிர்ச்சி:
எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். துவக்க வீரர் கம்ரான் அக்மலை (5), மில்ஸ் போல்டாக்கினார். பாண்ட் பந்தில் முகமது ஹபீஸ் (8) வீழ்ந்தார். <உமர் அக்மல், "டக்' அவுட்டானார். முன்னதாக களமிறக்கப்பட்ட மிஸ்பா (3) ஏமாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிதி (11), இயான் பட்லர் பந்தில், நாதன் மெக்கலத்தின் சர்ச்சைக்குரிய "கேட்ச்சில்' வெளியேறினார்.
ரசாக் ஆறுதல்:
பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளுக்கு 58 ரன்கள் எடுத்து தள்ளாடியது. இதற்கு பின் சல்மான் பட், அப்துல் ரசாக் இணைந்து போராடினர். வெட்டோரி, பாண்ட் பந்துகளை சிக்சருக்கு விரட்டிய ரசாக் பரபரப்பு ஏற்படுத்தினார். இவர் நாதன் மெக்கலம் சுழலில் 29 ரன்களுக்கு அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. சல்மான் பட், அரைசதம் கடந்தார்.
பாக்., தோல்வி:
கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இயான் பட்லர் வீசிய முதல் 3 பந்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்டது, கடைசி 3 பந்தில், வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் பட், மறுபடியும் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, கடைசி பந்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு, 2 ரன் தேவைப்பட்டது. இந்த பந்தை தூக்கி அடித்தார் ரெஹ்மான். இதை கப்டில் "கேட்ச்' செய்ய, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்தது. 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
மூன்று போட்டிகள் கொண்ட "சூப்பர்-8' சுற்றில் குறைந்தது 2 போட்டிகளில் வென்றால் தான் அரையிறுதி வாய்ப்பை பெற முடியும். பாகிஸ்தான் அணி இங்கிலாந்து, நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததால், வாய்ப்பை இழந்தது.
ஆட்டநாயகன் விருதை இயான் பட்லர் தட்டிச் சென்றார்.
அதிசயம் நடக்குமா?
பாகிஸ்தான் அணி, ஏதாவது அதிசயம் நடந்தால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம். நாளை நடக்க உள்ள, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதே போல, நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் படுமோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால், ரன்-ரேட் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
பிரண்டன் (கே)சமி (ப)ரெஹ்மான் 33(29)
ரைடர் (கே)ரெஹ்மான் (ப)சமி 7(8)
கப்டில் (கே)உமர் (ப)ரெஹ்மான் 2(10)
டெய்லர் (கே)கம்ரான் (ப)சமி 3(7)
வெட்டோரி ரன்-அவுட்(சமி/அஜ்மல்) 38(34)
ஸ்டைரிஸ் (ப)அப்ரிதி 21(17)
ஹோப்கின்ஸ் (கே)ரெஹ்மான் (ப)அப்ரிதி 2(7)
நாதன் -அவுட் இல்லை- 12(9)
பட்லர் -அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 15
மொத்தம் (20 ஓவரில், 7 விக்.,) 133
விக்கெட் வீழ்ச்சி: 1-34(ரைடர்), 2-41(கப்டில்), 3-55(பிரண்டன்), 4-58(டெய்லர்), 5-98(ஸ்டைரிஸ்), 6-104(ஹோப்கின்ஸ்), 7-127(வெட்டோரி).
பந்துவீச்சு: ஆமர் 3-0-20-0, சமி 3-0-25-2, ரெஹ்மான் 3-0-19-2, ஹபீஸ் 3-0-11-0, அப்ரிதி 4-0-29-2, அஜ்மல் 4-0-27-0.
பாகிஸ்தான்
கம்ரான் (ப)மில்ஸ் 5(8)
சல்மான் -அவுட் இல்லை- 67(54)
ஹபீஸ் (கே)ஹோப்கின்ஸ் (ப)பாண்டு 8(4)
உமர் (கே)ஹோப்கின்ஸ் (ப)மில்ஸ் 0(1)
மிஸ்பா எல்.பி.டபிள்யு.,(ப)பட்லர் 3(13)
அப்ரிதி (கே)நாதன் (ப)பட்லர் 11(9)
ரசாக் (கே)டெய்லர் (ப)நாதன் 29(29)
ரெஹ்மான் (கே)கப்டில் (ப)பட்லர் 2(3)
உதிரிகள் 7
மொத்தம் (20 ஓவரில், 7 விக்.,) 132
விக்கெட் வீழ்ச்சி: 1-15(கம்ரான்), 2-24(ஹபீஸ்), 3-25(உமர்), 4-42(மிஸ்பா), 5-58(அப்ரிதி), 6-111(ரசாக்), 7-132(ரெஹ்மான்).
பந்துவீச்சு: பாண்டு 4-0-28-1, மில்ஸ் 4-0-33-2, பட்லர் 4-1-19-3, வெட்டோரி 4-0-31-0, நாதன் 4-0-19-1.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive