பயில்வோம் பங்கு சந்தை பாகம் 29
அதாவது ஒரு மிகப்பெரிய வீரர் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டு தனது பலத்தை முழுவதும் இழப்பதற்கு சமம் ஆகும், மிக பலமான சிகிச்சைக்கு பின்பு அவர் முன்பு போல தனது பலத்தை அடைவாரா! மேலும் முன்னர் அவர் போர்க்களத்தில் செய்த சாகசங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதிய சாகசங்களை செய்வாரா என்று தெரிந்த பின்பு தான் அவரை மறுபடியும் போற்படையில் சேர்ப்பார்கள் இல்லையா அது போல தான்,
2000 ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்து கொண்டிருந்த ஒரு பங்கு 200 ருபாய் அளவிற்கு CORRECTION வந்த பொழுது இரக்கத்தை சந்தித்தது என்றால்! அந்த பங்கு மறுபடியும் முன்னர் விலைக்கு செல்லுமா? மேலும் அந்த விலைகளையும் கடந்து தொடர்ந்து ஏறுமா என்று தெரிந்தால் தான் அந்த பங்கை குறைந்த விலைக்கு வாங்க நமக்கு மனது வரும்,
அதே நேரம் 2000 ரூபாய்க்கு விற்ற பங்கு 200 ரூபாய்க்கு வந்து விட்டதை சாதாரணமாக எண்ணி பாருங்கள், எவளவு பெரிய நட்டத்தை இந்த பங்கு 2000 ரூபாயில் வாங்கியவர்களுக்கு கொடுத்துள்ளது, இந்த பங்கை நம்பி நம்மால் முதலீடு செய்ய முடியுமா? மனசு வருமா? பயம் வராதா? எண்ணி பாருங்கள் சத்யம் பங்குகளை 300 ரூபாய்க்கும் 400 ரூபாய்க்கும் வாங்கி விற்ற நமக்கு 10 ரூபாய்க்கும் 6 ரூபாய்க்கும் வரும் பொழுது வாங்குவதற்கு மனது வந்ததா, மாறாக பயம் தானே வந்தது,
இது போல தான் நன்றாக இறங்கிய பங்குகளை வாங்குவது நமக்கு எப்பொழுது ஓர்வித பயத்தினை தரும், அதே நேரம் இது போன்று நன்றாக இறங்கிய பங்குகளை வாங்குவதற்கு, அதாவது இறங்கினாலும் இந்த பங்கு முதலீடு செய்வதற்கு ஏற்ற பங்கு தான் என்பதினை நிரூபிப்பதற்கு சில விஷயங்கள் உள்ளது, அதாவது குற்று உயிரும் குலை உயிருமாக கிடக்கும் ஒரு வீரரை சோதித்து அவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர் இவர் வெகு விரைவில் குணமடைவார்! முன்பை விட சாகசங்கள் புரிவார் என்று சொன்னால் நமது பயம் தெளிந்து நன்பிக்கை கொள்வோம் இல்லையா!
அது போல்தான் ஒரு நல்ல நம்பிக்கையான மருத்துவராக நமக்கு ஒருவர் இருக்கிறார் அவர்கள்தான் EPS மற்றும் PE RATIO, ஆகவே இவர்களை கொண்டு நன்றாக இறங்கி தற்பொழுது குற்று உயிருமாக குலை உயிருமாக இருக்கும் ஒரு பங்கை தேறுமா தேறாதா என்பதினை இந்த மருத்துவர்கள் கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம், ஆகவே இவர்களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்,,,
EPS
EPS என்பது EARNING PER SHARE என்று அர்த்தமாகும், அதாவது இந்த EPS என்ற அளவு சில எண்களின் வடிவில் நமக்கு கிடைக்கும், அதாவது 10, 12, 15 என்ற எண்களாக, இது போன்ற எண்களை கொண்டு நாம் சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம், அவற்றை பற்றி தொடர்ந்து பார்ப்போம், அதற்கும் முன் EPS என்பது என்ன விதமான விஷயத்தை நமக்கு அறியத்தருகிறது என்பதினை தெரிந்து கொள்வோம்,
பொதுவாக EPS என்பது ஒரு நிறுவனம் தனது வியாபாரங்களின் மூலம் பெரும் லாபங்கள் எவளவு என்பதினை நமக்கு தெரிவிக்கும் ஒரு குறியீடு ஆகும் , இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு மளிகை கடைகாரர் ஒரு மாத காலத்திற்கு தனது வியாபரத்தின் வருமானம் என்ன, இந்த மாதத்தின் செலவு என்ன என்பதினை கூட்டி கழித்து இறுதியாக அவருக்கு கிடைக்கும் லாபம் எவளவு என்பதினை தெரிந்து கொள்வது போல தான்,
பொதுவாக மளிகை கடைக்கு அவர் ஒருவரே உரிமையாளராக இருப்பார், ஆகவே வரும் லாபம் அல்லது நட்டம் முழவது அவரையே சாரும், அதே நேரம் அந்த மளிகை கடைக்கு ஒரு இரண்டு பேர் பாட்னர் என்ற முறையில் இருந்தால் வரும் லாபம் அல்லது நட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளப்படும்,
இவ்வாறு பங்கிட்டுக்கொள்ளப்படும் லாபம் அல்லது நட்டம் ஒரு நபருக்கு சராசரியாக எவளவு என்று சொல்லபடும் இல்லையா, அதாவது ஒருவருக்கு 10000 லாபம் என்றால் அந்த மளிகை கடை மொத்தமாக இந்த மாதம் சம்பாதித்து கொடுத்தது 30000 ருபாய் ஆகும், ஆனால் ஒருவருக்கு 10000 கிடைத்தது என்று தானே சொல்வோம்,
அதே போல்தான் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் ஒரு பெரிய நிறுவனம் தனது வியாபாரத்தின் மூலம் பெரும் லாபத்தினை தனது நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பிரித்து கொடுக்கும், அப்பொழுது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கும் அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுப்பார்கள், அதே நேரம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முதலீடு செய்து இருப்பார்கள்,
ஒருவர் 50000 ஆயிரம் முதலீடு செய்து இருப்பார், ஒருவர் வெறும் 5000 ஆயிரம் முதலீடு செய்து இருப்பார், அதே நேரம் இரண்டு பேரும் முதலீடு செய்தவர்கள் தான், இவர்கள் அனைவருக்கும் சேர்த்து தான் அந்த நிறுவனம் உழைக்கின்றது, ஆகவே முதலீட்டாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்ததிற்கு சமமாக கிடைக்கும் லாபத்தினை பிரித்து கொடுக்க தனது மொத்த லாபத்தையும் எத்தினை பங்குகள் உள்ளதோ அத்தினை பங்குகளுக்கு சமமாக வகுத்து கொடுப்பார்,
இவ்வாறு கொடுக்கும் போது அவரவர் முதலீடுக்கு தகுந்தார்ப்போல் லாபங்கள் வேறுபடும், ஆனால் ஒரு பங்கிற்கான லாபம் அனைவருக்கும் ஒன்று தான், ஆகவே ஒரு நிறுவனத்தின் உண்மையான வியாபாரத்தின் மூலம் (அதாவது ஒரு பொருளை விற்று அல்லது வாங்கி அதன் மூலம் பெறப்படும் லாபம் ) பெறப்படும் ஒரு பங்கிற்கான லாபம் என்ன என்பதினை நமக்கு சொல்வது தான் EPS ஆகும்,
இந்த EPS ஐ கணக்கிடுவதற்க்கான கணக்கீடுகள் :
பொதுவாக நாம் இதனை கணக்கீடு செய்ய வேண்டும் என்பதில்லை, அநேக வலை தளங்கள் இதனை தந்து கொண்டுள்ளது, இருந்தாலும் அதன் கணக்கீடு முறை என்ன என்பதினை தெரிந்து கொள்வது அவசியமே
EPS = Net Profit / Equity Cap * Face Value
அதாவது ஒரு நிறுவனத்திற்கு 10 ருபாய் FACE VALUE மதிப்புள்ள 10 கோடி பங்குகள் இருப்பதாகவும், அந்த நிறுவனம் ஒரு மாதத்திற்கு 10 கோடி வருமானம் செய்வதாகவும் கொண்டால், அதன் EPS கீழ் கண்ட முறையில் வரும்
10cr/10cr * 10 = 10,
SO EPS = 10
அதாவது இந்த நிறுவனம் இந்த மாதம் ஒரு பங்கிற்கு 10 ருபாய் லாபமாக கொடுத்துள்ளதாக அர்த்தம், அதவாது உண்மையாக வியாபாரம் செய்து லாபம் பார்ப்பது.
சரி அடுத்து PE RATIO பற்றி பார்ப்போம்
பொதுவாக PE RATIO என்பது சந்தையில் ஒரு பங்கு எவ்வாறு வர்த்தகம் ஆகிறது என்பதினை குறிப்பதாகும், இதை நீங்கள் இப்படி எடுத்துக்கொண்டால் சற்று உங்களுக்கு புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருக்காது, அதாவது ஒரு பங்கு சந்தையில் என்ன லாபம் செய்கிறது என்பதினை குறிக்கும் ஒரு குறியீடு என்ற அளவில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்,
இப்படி வைத்துகொண்டால் உங்களுக்கு EPS யும் PE RATIO வையும் ஒப்பிட்டு பார்த்து அதன் மூலம் ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு உபயோகமாக இருக்கும், ஆகவே இப்படியே மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதே நேரம் PE RATIO என்றால் என்ன என்பதினையும் சொல்லி விடுகிறேன் இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்,
அதாவது ஒரு பங்கு உண்மையாக வியாபாரம் செய்து பெரும் லாபத்தினை விட எத்தினை மடங்கு அதிகமாக பங்கு சந்தையில் வர்தகமாகிறது என்பதினை சொல்லும் ஒரு குறியீடு ஆகும், இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்வது பயனுள்ளதாக இருக்கும், அதாவது பங்கு சந்தை எப்பொழுதுமே உண்மையான மதிப்பில் வர்த்தகம் ஆகாது! ஒரு வருடம், இரண்டு வருடம் அல்லது அதற்கும் மேல் வரும் நாட்களில் இந்த நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்திலே தான் வர்த்தகமாகும், ஆதலால் தான் இதனை ஊக வணிகம் என்றும் சொல்கிறோம்,
மேலும் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இருப்பதும் இதனாலேயே தான், இதற்க்கு உதாரணமாக நாம் முன்னர் பார்த்த BUS STAND உதாரணத்தை நினைத்து பாருங்கள், BUS STAND வரும் என்ற ஒரு புரளியினால் அடித்து பிடித்து அதன் அருகில் உள்ள நிலங்களை வாங்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தாயார இருக்கும் வர்த்தகர்களின் செயல்களினாலேயே அதன் விலை அடி மட்டத்தில் இருந்து எங்கோ பறந்து விடுகிறது இல்லையா அது போல்தான்,
இங்கு எப்பொழுதும் இப்படி ஊகத்தின் அடிப்படையில் தான் வர்த்தகம் நடக்கும், என்ன செய்வது! பாம்பு திங்கும் ஊருக்கு போனால் நடுத்துண்டம் கேட்டால் அதான் நமக்கு மதிப்பு, இங்கு இப்படி தான் கண்டுக்கொள்ளாதீர்கள், அதே நேரம் எவளவு தான் ஊகத்தின் அடிப்படையில் ஏறினாலும்! உண்மை என்ற நிலை சில நேரங்களில் வெளிப்படும், அப்பொழுது ஒரு மிகப்பெரிய ஆட்டங்கள் இருக்கும்! அது போன்ற ஆட்டங்களில் தான் பங்குகள் தடாலடியாக பாதாளத்திற்கு வருகிறது,
இப்படி வரும் போது ஒருவரின் உண்மை என்ன பொய் என்ன என்பது அனைவருக்கு தெரியும், இது போன்ற நேரங்களில் இந்த EPS மற்றும் PE RATIO நமக்கு கடவுள் போல் கைகொடுக்கும், இதனை சிறு உதாரண கதை மூலம் சொன்னால் எளிதாக இருக்கும், அதாவது சண்முக பாண்டியன் என்ற ஒரு நண்பர் சென்னையில் வசிப்பதாகவும், அண்ணா நகரில் அவருக்கு ஒரு GROUND நிலம் இருப்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள், அதன் தற்பொழுதைய மதிப்பு 5 கோடி என்றும் வைத்துக்கொள்ளுங்கள்,
குடும்ப செலவுக்கென்று நிலையான வருமானமும் இவருக்கு உண்டு, எந்த வம்பு தும்புக்கும் செல்லாத தான் உண்டு தன் வேலை உண்டு என்று OFFICE அதை விட்டால் குடும்பம் என்று வாழ்ந்து வந்த நல்ல நபர், இவரின் அந்த அண்ணா நகரின் இடத்தின் மேல் பக்கத்து வீட்டு நண்பருக்கு ஒரு கண், மனிதன் 5 கோடி தருவதாகவும் கேட்டு பார்த்தார், என்ன செய்வது சண்முகப்பாண்டியன் ஒரே அடியாக மறுத்து விட்டார்,
6 கோடி தருவதாகவும் சொல்லியாகிவிட்டது, முடியாது என்றே மறுத்து விட்டார், வேண்டுமானால் 8 கோடிக்கு தருகிறேன் என்று சண்முகம் சொல்லி விட்டார், அவளவு விலைக்கு வாங்குவது நல்லது இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர் அமைதி ஆகி விட்டார், இதில் சன்முகப்பண்டியனுக்கு ஒரு வித மகிழ்ச்ச்யும் கூட இருந்தது, சத்தம் இல்லாமல் கலரை தூக்கியும் விட்டுக்கொண்டார்,
என்ன செய்வது விதி வேறு மாதிரி இருந்து விட்டது, ஒரு நல்ல நாளில் அவரின் குடும்பத்திற்குள் ஒரு மிகப்பெரிய பூகம்பம், இவரை தவிர அவரின் குடும்பம் மொத்தமும் ஒரு உறவினர் திருமணத்திற்கு CAR இல் சென்று கொண்டிருக்கும் போது மிகப்பெரிய விபத்து, அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்தால் கண்டிப்பாக காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையை மருத்துவர் தந்துவிட்டார்,
அதற்க்கு ஈடாக ஒன்னரை கோடியில் இருந்து இரண்டு கோடி செலவு ஆகும் என்று குண்டையும் தூக்கி கையில் குடுத்து விட்டார், என்ன செய்வார் மனிதர், தான் உண்டு தன் வேலை உண்டு என்று குடும்பத்துடன் மட்டும் இருந்த நல்ல மனிதர், என்னதான் சேமிப்பு இருந்தாலும் இவளவு பெரிய தொகை எப்படி!!!!, யோசித்தார் மனிதன் அடுத்த நிமிடம் பக்கத்து வீட்டுக்காரர் முன் நின்றார்,
தனது நிலை விளக்கி அண்ணா நகர் இடத்தை வாங்கும் படி மன்றாடினார், விடுவாரா பக்கத்து வீட்டுக்காரர், இல்லப்பா நீ முடியாதுன்னு சொன்னவுடனே சைதாபேட்டையில் ஒரு இடம் வந்தது வாங்கி விட்டேன், அந்த பணம் இப்போ இல்லையே!, துடித்தே போனார் மனிதன்! அண்ணே நீங்க ஏதாவது பண்ணி வாங்கிக்கணும் எனக்கும் நீங்க சொன்ன பணம் கூட வேண்டாம்! அதில் பாதி குடுங்க போதும் என்று அலறியே விட்டார்,
விடுவாரா நம்ம அண்ணன்! இல்ல சண்முகா என்னிடம் அவளவு பணம் இல்ல இப்போ, கையில் ஒரு கோடி தான் இருக்கு வேண்டுமானால் இருன்னொரு ஒரு கோடி புரட்டி பார்க்கலாம் அதுக்கு மேல முடியாது, அண்ணே என்னன்னே இப்படி சொல்றீங்க தயவு பண்ணுன்கனே, நான் என்ன பண்றது சண்முகா, சரி உனக்காக வேண்டும் என்றால் நகையை அடகு வைத்து இன்னும் ஒரு 50 லட்சம் சேர்த்து தருகிறேன், அதற்கு மேல் என்னால் முடியாது என்றவுடன் வழி இல்லாமல் தாய் பத்திரத்தை கொடுத்து இரண்டரை கோடியை பெற்று கொண்டு சந்தோசமாக குடும்பத்தை காப்பாத்தி விட்டார்,
சண்முகத்திற்கு அடுத்த வீட்டுக்காரர் தெய்வமாக தான் தெரிந்தார், ஆனால் அடுத்த வீட்டுக்காரருக்கு உள்ளுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு, சரி விடுங்கள் நாம் விசயத்திற்கு வருவோம்,
இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொண்டது என்ன, இதற்க்கும் EPS மற்றும் PE RATIO வுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்து விடுவோம், அதாவது சண்முக பாண்டியனின் குடும்பம் விபத்தில் மாட்டிக்கொள்ளாவிட்டால் அவர் அந்த இடத்தை விற்கும் நினைப்புக்கே வந்து இருக்கு மாட்டார்,
அடுத்து சண்முக பாண்டியனின் நிலை அறிந்து பாதி விளைக்கும் வாங்கி விடலாம் என்று யோசித்து அடுத்த வீட்டுக்காரர் வாங்கி விட்டார், இருந்தாலும் அந்த இடத்தின் உண்மையான மதிப்புக்கும் கீழ் கிடைக்கிறது என்றவுடனே தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து வாங்க தயாராக இருந்தார்,
இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளது , அதாவது அந்த இடத்தின் மதிப்பு 5 கோடி ஆனால் சன்முகப்பாண்டியனின் குடும்ப நிலை அதை பாதி விலைக்கு விற்க தயாராக அவரை மாற்றி விட்டது, அதே நேரம் 8 கோடிக்கு வாங்க மறுத்த அடுத்த வீட்டுக்காரர் அதன் உண்மையான விளைக்கும் கீழ் கிடைப்பதினால் தனது மனைவியின் நகையை கூட அடகு வைத்து வாங்க முற்படுகிறார்,
இவளவு RISK எடுக்க இருவருக்கும் காரணம் உள்ளது இல்லையா, அது தான் இங்கு முக்கியம், சந்தை மிகப்பெரிய CORRECTION ஐ சந்திக்கும் போது தனது உண்மையான மதிப்புக்கு அருகில் வரும் வாய்ப்புகள் உண்டு அந்த நேரத்தில் தான் நாம் வாங்க வேண்டும், அதாவது இதனை வேறு ஒரு கோணத்தில் சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம்
அதாவது சன்முகப்பாண்டியனின் குடும்ப சூழ்நிலையை நமக்கு உணர்த்துவது PE RATIO ஆகும், அதே போல் அவரின் அண்ணா நகர் GROUND இன் உண்மையான மதிப்பை நமக்கு உணர்த்துவது EPS ஆகும், இங்கு தனது குடும்ப சூழ்நிலை சரி இல்லாததால் தான் தனது 5 கோடி மதிப்புள்ள இடத்தினை வெறும் இரண்டரை கோடிக்கு விற்கவும் தயாராகிறார்,
அதாவது சந்தை CORRECTION ஐ சந்தித்ததால் தான் PE RATIO இறங்கி வந்துள்ளது, இது போன்ற இறக்கத்தினால் தான் EPS அளவை விட PE RATIO கீழே வரும் , ஆகவே EPS என்பது உண்மையான மதிப்பு, PE RATIO என்பது மாயையான ஊக மதிப்பு, சந்தை எப்பொழுதும் ஊக மதிப்பில் தான் வர்த்தகம் செய்யும்,
அப்படியானால் உண்மையான மதிப்பிற்கு கீழ் ஊக மதிப்பு CORRECTION என்ற காரணத்தினால் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும், அடித்து பிடித்து வாங்க வேண்டாமா, ஏனெனில் மறுபடியும் ஊக மதிக்கு சென்று விடும் இல்லையா, அதாவது உங்களிடம் 5 கோடி மதிப்புள்ள சொத்தை 2 கோடிக்கு யாராவது அவரின் சூழ்நிலையின் காரணமாக விற்க முற்ப்பட்டால் வாங்குவீர்களா மாட்டீர்களா? வாங்குவீர்கள் தானே!,
அதே மாதிரி தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான லாபத்தினை குறிக்கும் குறியீடான EPS ஐ விட பங்கு சந்தையில் வர்த்தகமாகும் விலையினை குறிக்கும் குறியீடு குறைந்தால் வாங்குவோமா வாங்கமாட்டோமா, வாங்கி ஆக வேண்டும் இல்லையா, அப்படி தான் EPS ஐ விட குறைவாக எப்பொழுதெல்லாம் ஒரு பங்கின் PE RATIO வர்தகமாகிறதோ அப்பொழுதெல்லாம் நாம் வாங்க வேண்டும்,
இது போன்ற நிகழ்வுகள் எப்பொழுது அனைத்து பங்குகளிலும் ஏற்படும், சந்தை மிகப்பெரிய இறக்கத்தினை சந்திக்கும் போது தான் ஏற்படும், ஆகவே அப்பொழுதெல்லாம் நாம் வாங்க வேண்டும்,
சரி PE RATIO வை எப்படி கணக்கீடு செய்வது அதனை பற்றியும் பார்த்து விடுவோம்
PE RATIO = CMP/EPS
தற்பொழுது அந்த குறிப்பிட்ட பங்கு வர்த்தகமாகும் விலையுடன் முன்னர் நமக்கு கிடைத்த EPS என்ற அளவுடன் வகுத்தால் நமக்கு கிடைக்கும் அளவு PE RATIO ஆகும், இந்த அளவு EPS ஐ விட குறைவாக இருந்தால், 10 ரூபாய் மதிப்புள்ள பொருள் 5 ரூபாய்க்கு கிடைப்பது போல, அதே நேரம் EPS ஐ விட PE RATIO அதிகமாக இருந்தால் 10 ரூபாய் பொருள் 12 ரூபாய்க்கு கிடைப்பது போல, இது லாபம் இல்லை தானே, ஆகவே EPS ஐ விட PE RATIO குறைவாக இருந்தால் வாங்க வேண்டும், அதிகமாக இருந்தால் வாங்கக்கூடாது
உதாரணம்
சந்தையில் ஒரு பங்கின் விலை = 120
அதன் EPS = 10
SO அதன் PE RATIO = 120/10 = 12
இந்த மதிப்பு EPS ஐ விட அதிகம் இருப்பதால் இந்த பங்கை வாங்கக்கூடாது.
அடுத்த ஒரு உதாரணம்
சந்தையில் ஒரு பங்கின் விலை = 80
அதன் EPS = 10
SO அதன் PE RATIO = 80/10 = 80/10 = 8 ,
இந்த மதிப்பு EPS மதிப்பான 10 ஐ விட குறைவாக இருப்பதால் இது நல்ல நிலையில் உள்ளது, ஆகவே இதனை வாங்க வேண்டும்
மேற்கண்ட இரண்டு விசயங்களில் இருந்து நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், ஒரு பங்கு 120 ருபாய் இருக்கும் போது, நமது கணக்கீட்டால் கணக்கிடும் போது அதன் உண்மையான மதிப்பை விட அதிகமான மதிப்பில் இருப்பதால் அதை வாங்க கூடாது, அதே பங்கு CORRECTION ஏற்பட்ட பிறகு 80 ரூபாய்க்கு வரும் போது அதன் மதிப்பு குறைந்துள்ளதால் இப்பொழுது வாங்க வேண்டும் புரிகிறதா,
சரி இந்த பதிவுடன் TECHNICAL ANALYSIS வகுப்புகள் முடிந்தது, அடுத்த பதிவில் தின வர்த்தகர்கள் வர்த்தகத்திற்கு செல்லும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன என்பதினை பற்றி பார்த்து விட்டு இனிதே நிறைவு செய்வோம்
0 comments: