அமிதாப் ஜோடியாகிறார் குஷ்பு
நாடு எக்கேடு கெட்டா எனக்கென், வீட்டுல பாலும் தேனும் மிதமிஞ்சி புழக்கடையில போனாலும் கவலையில்ல என்று வாழ்கிற கடைந்தெடுத்த சுயநல விஐபிக்கள் லிஸ்ட் அதிகரித்துகொண்டே போகிறது தமிழ்நாட்டில். லண்டனில் இருந்து திரும்பிய கையோடு இப்போதைக்கு எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை என்று பல்டியடித்தார் குஷ்பு.
அதுக்கு மீடியா வெளிச்சம் போதாது என்று நினைத்தார்களோ என்னவோ அடுத்த அலப்பறையான தீனி கிடைத்து வீட்டது குஷ்பு விவகாரத்தில். அம்மையார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஜோதிகா நாயகியாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘ஜூன் ஆர்’. இந்த தமிழ் படத்தை இயக்கியவர் மலையாளப் பெண் இயக்குனர் ரேவதி வர்மா. தற்போது இந்தப் படத்தை ‘ஆப் கே லியே ஹம்’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். மாதவன், ரவீனா டன்டன், ஆயிஷா தாகியா, ஜெயாபச்சன், போன்ற பிரபல நட்சத்திரப் பட்டாளத்தை இந்தப்பட்த்துக்காக கட்டி மேய்த்து வருகிறார் ரேவதி வர்மா.
அடுத்து ‘மேட் டேட்’ என்ற படத்தை இந்தியில் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். இது பற்றி ரேவதி வர்மா தனது மீடியா நண்பர்களிடம் கூறும்போது, ‘அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்க உள்ளேன். அப்பா வேடத்துக்கு அமிதாப் பச்சன்தான் பொருத்தமாக இருப்பார். அதனால் அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளேன். கதையைக் கேட்ட அவர் கண்டிப்பாக நடிகிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார். அவரது மனைவியாக குஷ்பு நடிக்கிறார்.” என்று சொல்லியிருக்கிறார்.
குஷ்பூவுக்கு கிடைச்ச இந்த வாய்ப்புக்கு சுந்தர்.சி எப்படி ஃபீல் பன்றார்ன்னு குஷ்பூ வட்டாரத்துல விசாரிச்சா... “அடபோங்கப்பா...அவர் ஒரு முரட்டுக் காளை... இளம் ஹீரோயின்களோட டூயட் பாடவே நேரம் சரியா இருக்கு. இதுல குஷ்பூவ எங்க வாடம பார்த்துகிறது” என ஜோக்கடிக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்கள்
0 comments: