எச்.சி.எல்., டெக்னாலஜியில் 5 ஆயிரம் பேருக்குப் பணி வாய்ப்பு
கம்ப்யூட்டருடன் தொடர்புடையதாகவே எப்போதும் அறியப்படும் எச்.சி.எல்., நிறுவனம் சென்ற நிதியாண்டிற்கான கடைசிக் காலாண்டின் நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. இந்த கால கட்டத்தில் மட்டும் இந்த நிறுவனம் 73 சதவிகித அளவு லாப வளர்ச்சி கண்டுள்ளது. இதன் எதிரொலியாக வரும் ஆண்டில் இந்த நிறுவனம் புதிதாகப் படிப்பை முடித்து வெளி வரும் 5 ஆயிரம் பேருக்குப் பணி வாய்ப்புகளை வழங்க முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொருளாதார மந்த நிலையின் போது ஐ.டி., நிறுவனங்கள் பணி வெட்டு, ஊதிய வெட்டு போன்ற சிக்கன நடவடிக்கைகளில் இறங்கின. தற்போது பொருளாதாரம் வளர்வதாலும், லாப நிலை முன்னேற்றம் காண்பதாலும் இனி இந்த நிறுவனங்கள் முன் இருந்தபடி அதிகப் பணி வாய்ப்புகளை வழங்குதல், மிக நல்ல ஊதிய விகிதங்கள் தருதல் போன்ற முயற்சிகளில் இறங்கும். எச்.சி.எல்., நிறுவனமும் இதில் நல்ல போட்டியைத் தரும் என்று நம்பப்படுகிறது. ஏற்கெனவே இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 14 சதவிகித ஊதிய உயர்வைத் தந்த நிலையில், எச்.சி.எல்., நிறுவனம் வரும் ஜூலை மாத வாக்கில் தனது ஊழியர்களுக்கு அதிக ஊதியம் தரும் அறிவிப்பை வெளியிடும் என்று நம்பப்படுகிறது.

0 comments: