Saturday, May 8, 2010

0

மே இராசிபலன்

மே மாதத்திற்குரிய பன்னிரு ராசிகளுக்குமான சுருக்கமான இராசிபலன்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இப்பலன்களைக் கணித்தவர். பேராசிரியர் சிறிதரன் அவர்கள். இனி தனித்தனியாக இராசிகளின் பலனைக் கீழே காணலாம்.

மேஷம்

மேஷராசி அன்பர்களே!
செவ்வாயின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், விரைவான சஞ்சாரம் மற்றும் குருபார்வை காரணமாக உற்சாகம் ஏற்படும். தொழிலில், உத்யோகத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறி, மந்நமான மனநிலை மாறும். உத்வேகம் ஏற்படும். திறமை வெளிப்படும். சுற்றத்தார், நண்பர்கள் இடையே மரியாதை,கவுரவம் உயரும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களே!
சுக்ரனின் சுபபலம் வசதிகளை அனுபவிக்க வழி செய்யும் மாதமாக இருக்கும்.புதிய வாகனம், ஆடை மற்றும் பொருள் சேர்க்கை உண்டு. உல்லாச பயணங்கள் உண்டு. தொழில், உத்யோகத்தில் மேம்பாடு காண்பீர்கள். உங்கள் செயல்பாடுகள் மற்றவரை கவரும். செயல்களில் முழுத்திறமையும் வெளிப்படும்.

மிதுனம்

மிதுனராசி அன்பர்களே!
ராசிநாதன் புதன் வக்ரம் ஆகியும், பின்பு வக்ரம் நீஙகிய நிலையிலும் காணப்படுகிறார். குருவின் ராசி அதிசார மாற்றமானது, ஒரு போராட்டமான நிலையை தோற்றுவிக்கும். தொழில், உத்யோகம், வியாபாரத்தில் கூடுதலாக சில பொறுப்புக்களை ஏற்க வேண்டிய சூழல் உருவாகலாம். மாதம் முழுவதும் பரபரப்பான செயல்களை கொண்டதாக இருக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே!
ராசியில் உள்ள செவ்வாய் விரைவாக சஞ்சாரம் செய்வதால் இதுவரை கானல் நீராக இருந்த சூழ்நிலை உத்யோகத்தில் மாறும். தொழிலில், வியாபாரத்தில் கடுமையான போட்டிகளினால் மறைமுகமாக லாபம் உண்டு. புதிய சொத்து சேர்க்கை இருக்கும்.


சிம்மம்

சிம்மராசி அன்பர்களே!
சூரியனின் பலம் முழுமையாக கிடைப்பதால் தொழிலில் திறமை, புகழ், பணஆதாயம் கூடும். அதிகாரமுள்ள பதவி உயர்வும் உண்டு. முக்கிய புள்ளிகளின் சந்திப்பும், பழக்கமும் லாபத்தை தரும். உத்யோத்தில் அதிகாரமுள்ள பதவி உயர்வு இருக்கும்.

கன்னிராசி

கன்னிராசி அன்பர்களே!
ராசிநாதன் புதன் வக்ரத்திலும்,ராசியில் ஏழரைச்சனியின் அழுத்தம் காரணமாக தொழிலில், உத்யோகத்தில் மந்தநிலை உருவாகலாம். வழக்கமான நடவடிக்கைகளில் மாற்றம் இருக்காது. புதிய முயற்சிகளில் ஈடுபட தயக்கம், பயம், தன்னம்பிக்கை குறைவு ஏற்படும். வீண் அலைச்சல் உண்டு.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே!
ராசிநாதன் ஆட்சி பலம் பெறுவது சூரியன் குருவின் பலமாக இருந்து புதிய முயற்சிகளில் வெற்றியும், நின்று போன சில காரியங்களில் வெற்றியையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில்,உத்யோகத்தில், வியாபாரத்தில் திருப்திகரமான நிலை, லாபம், பணவரவு உண்டு. புண்ணியதல யாத்திரைகள் செல்லும் யோகம் ஏற்படும்.


விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!
செவ்வாயின் வேக சஞ்சாரம் தொழில், உத்யோக வகைகளில் நல்ல முன்னேற்றத்தையும், கூடுதல் பணவரவு,பதவி உயர்வு, சுற்றுலாக்கள் என்று மகிழ்ச்சியான தருணங்களை தரும் மாதமாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். சகோதர வழியில் சுபச்செலவும் உண்டு.


தனுசு

தனுசு ராசி அன்பர்களே!
குருவின் அதிசாரம் இருப்பதால் இந்த மாதம் பிரகாரமானதாக அமையும். இருட்டிய குகையில் இருந்து வெளி வந்து கதிரவனின் ஒளியை பார்த்த பரவசம் இருக்கும். தொழிலில் லாபம், உத்யோகத்தில் மதிப்பு கூடுதல், வருமான உயர்வு, கவுரவம் உயருதல் போன்ற ஆதாயமான நிலைகள் ஏற்படும். நிம்மதியான சூழல் நிலவும்


மகரம்

மகர ராசி அன்பர்களே!
ராசிநாதன் சனிக்கு குரு பார்வையும் சுக்ரனின் சுபபலமும் அமைவதால்,உற்சாகமான மனநிலை ஏற்படும். உத்யோகத்தில் நிம்மதியான சூழல், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பணியில் சிறிய அளவிலான ஊக்கத் தொகை கிடைக்கலாம். ஆபரண, ஆடை சேர்க்கை உண்டு. விருந்து உபச்சாரஙகள் மகிழ்ச்சியை தரும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!
ராசி நாதன் அட்டாமச்சனி என்றாலும் இந்த மாதம் அதன் கடுமை குறையும்.தொழிலில், உத்யோகத்தில் வழக்கமாக காணப்படும் பாதிப்பு குறையும்.சோர்வான மனநிலை சற்று விலகி ஆறுதல் தரும். உத்யோகம், தொழில், வியாபாரத்தில் இருந்த முடங்கிய நிலை விலகும்.


மீனம்

மீனராசி அன்பர்களே!
ராசிநாதன் குரு தனது ராசியிலேயே இந்த மாதம் வந்து விடுவதாலும், சனியின் பார்வை பெறுவதாலும் தொழில் உத்யோகத்தில் இருந்து வந்த சிரமங்கள், உறவு வகை சிக்கல்கள், பணச்செலவீனங்கள் விலகும். மற்றவர்களுக்காக செய்யப்படும் உதவிகளால் கூடுதலான உழைப்பு இருக்கும். உத்யோகம் தொடர்பான சிறிய தூர பயணம் உண்டு.

"வாழ்க வளமுடன்"

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive