undefined
undefined
undefined
ஆந்திராவிலும் ஒரு நித்தியானந்தா-ஆபாச சிடிக்கள் சிக்கின
ஹைதராபாத்: பெங்களூரில் நித்தியானந்தா செக்ஸ் லீலையில் சிக்கி கைதானது போல, ஆந்திராவிலும் ஒரு சாமியார் ஆபாச லீலைகளில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளார்.
கடப்பா மாவட்டம் பொதட்டூரில் ஆசிரமம் நடத்தி வரும் நாராயணசாமி, தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்தார்.
வழக்கமாக காவி உடையில் இருப்பார்கள் சாமியார்கள். ஆனால் நாராயணசாமியோ, அருள்வாக்கு கூறும்போது வெள்ளை நிற பேண்ட்- சட்டை தான் அணிந்திருப்பாராம்.
இவரிடம் கணவனை இழந்த விதவை பெண்கள், வறுமையில் வாடும் பெண்கள் பலர் வருவது வழக்கம்.
அவர்களுக்கு பூஜை அறையில் வைத்து அருள் வாக்கு கூறுவதாக அழைத்துச் சென்று போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து மயக்கமடைய வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இவ்வாறு இவரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசில் புகார் அளித்ததையடுத்து தான் இந்த விவரம் வெளியில் வந்துள்ளது.
புகார் கொடுக்கப்பட்டதை அறிந்து சாமியார் தலைமறைவாகிவிட்டார். அவரது இடத்தி்ல் போலீஸார் நடத்திய சோதனையில் ஆபாச சி.டிக்கள், ஆணுறைகள், பல வெளிநாட்டு செக்ஸ் சாதனங்கள் சிக்கின.
போலிச் சாமியார் நாராயணசாமியை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சாமியார் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

0 comments: