undefined
undefined
undefined
உலக செஸ்: ஆனந்த் "டிரா

சோபியா: பல்கேரியாவின் வெசலின் தபலோவுக்கு எதிரான, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்று ஆட்டத்தை, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் "டிரா' செய்தார்.
பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெசலின் தபலோவ் மோதும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டி, 9வது சுற்றின் முடிவில் 4.5-4.5 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தது.
பின் நடந்த 10வது சுற்று ஆட்டத்தில் ஆனந்த், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். நீண்ட நேரம் நடந்த இப்போட்டி, 60வது நகர்த்தலின் போது "டிரா'வில் முடிந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளி வழங்கப்பட்டது.
இதன்மூலம் 10வது சுற்றின் முடிவில் 5-5 என்ற புள்ளி கணக்கில், இப்போட்டி சமநிலையில் உள்ளது. இன்னும் இரண்டு சுற்றுக்கள் மட்டும் மீதமுள்ள நிலையில், அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆனந்த் உள்ளார்.
0 comments: