டாவின்சியின் ஒரிஜினல் ஓவியம்:அவரது விரல் ரேகை மூலம் கண்டுபிடிப்பு
லண்டன்:புகழ்பெற்ற ஓவியரான லியோனார்டோ டாவின்சி தன்னைத்தானே வரைந்த ஓவியம் இதுவரை, நகல் என்றே அதன் உரிமையாளர்களால் கருதப்பட்டு வந்தது.இப்போது, அந்த ஓவியத்தில் டாவின்சியின் மூன்று விரல் ரேகைகள் கண்டறியப்பட்டதன் மூலம், அது நகல் அல்ல, 'ஒரிஜினல்' தான் என்பது நிரூபணமாகியுள்ளது.
இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர் லியோனார்டோ டாவின்சி. இவர், 53வது வயதில் தன்னைத் தானே வரைந்த ஓவியம் ஒன்று, அவரது உண்மையான ஓவியத்தின் நகல் என்று கருதப்பட்டு வந்தது.கடந்த 2008ல் கண்டுபிடிக்கப் பட்ட இந்த ஓவியம், டாவின்சியே வரைந்தது என, இத்தாலியிலுள்ள கெய்ட்டி பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் லுயிஜிகேப்பசோ தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் தடயவியல் நிபுணர் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
இந்த ஓவியத்தில் பதிவாகியுள்ள டாவின்சியின், மூன்று விரல் ரேகைகள் மூலம், இதை இக்குழு உறுதி செய்துள்ளது.லியோனார்டோ டாவின்சியின் மற்றொரு ஓவியத்திலிருந்த ரேகையுடன், இந்தப் படத்திலிருந்த ரேகையையும் ஒப்பிட்டுப் பார்த்து, அவரது ரேகை தான் என, இவர்கள் முடிவு செய்துள்ளனர்.ஓவிய வல்லுனர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன், ரேடியோ கார்பன், பிக்மென்ட் முறையில் ஆய்வுக்குட்படுத்தி இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'நாங்கள் விஞ்ஞானிகள்; ஓவிய வரலாற்று ஆய்வாளர்கள்அல்ல. லியோனார்டோ டாவின்சி ஓவியத்திலுள்ள ரேகைகள் அவரு டையது தான்' என லுயிஜி தெரிவித்தார். இதேபோல் அவரது மற்றொரு ஓவியத்தில், இரண்டு ரேகைகளை தடயவியல் நிபுணர்கள் இதற்குமுன் கண்டுபிடித்தனர்.இதற்குமுன் கண்டுபிடிக்கப் பட்ட, டாவின்சி வரைந்த பெண் ஓவியம் ஒன்றில், சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விரல் ரேகைகளும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரேகையும் ஒரே நபருக்குரியவை எனத் தெரிகிறது.ஆனால் அவை டாவின்சியின் ரேகை தான் என்பதை உறுதிப் படுத்த முடியவில்லை.இந்த ஓவியம் 1478ம் ஆண்டிலிருந்து 1520க்குள் வரையப்பட் டிருக்கலாம் என்று 'கார்பன் டேட்' முறையில் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது.டாவின்சியின் கையெழுத்து, குறியீடுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0 comments: