ஞாபகம் இருக்கிறதா
பஞ்சாப் சிந்து பாங்கில் ஆபிசர் பணிக்கான போட்டித் தேர்வு - மே 9
தேசிய சட்ட பல்கலைக்கழக படிப்புக்கான கிளாட் தேர்வு - மே 9
ஏ.ஐ.எம்.ஏ., நடத்தும் யுஜிஏடி தேர்வு - மே 15
எஸ்.எஸ்.சி., நடத்தவுள்ள கிராஜூவேட் லெவல் தேர்வு - மே 16
யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் தேர்வு - மே 23
தேனா பாங்கின் ஆபிசர் பணித் தேர்வு - மே 23
பஞ்சாப் சிந்து பாங்கின் கிளார்க் பணித் தேர்வு - மே 23
யு.பி.எஸ்.சி., இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு - ஜூன் 26
யு.பி.எஸ்.சி., வனச் சேவைத் தேர்வு - ஜூலை 10
பொது அறிவு
1. மனிதனால் தயாரிக்கப்பட்ட தனிமம் எது?
அ) ரேடியம் ஆ) புளூடானியம்
இ) தேரியம் ஈ) யூ-235
2. ஒரே அணுஎடையும், வெவ்வேறு அணுஎண்ணும் கொண்ட மூலகங்கள்?
அ) ஐசோடெர்ஸ் ஆ) ஐசோமர்ஸ்
இ) ஐசோபார்ஸ் ஈ) ஐசோடோப்ஸ்
3. 'பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா' நிறுவனம் எங்குள்ளது?
அ) சென்னை ஆ) மும்பை
இ) டில்லி ஈ) கோல்கட்டா
4. ஆகாயத் தாமரை ஒரு
அ) அழகுத் தாவரம் ஆ) மருந்து தாவரம்
இ) களை ஈ) உணவுத் தாவரம்
5. செவிமடல் கொண்டது எந்த பறவையினம்?
அ) வெளவால் ஆ) காகம்
இ) ஆந்தை ஈ) தீக்கோழி
6. வளர்ச்சியடைந்த மனித மூளையின் சராசரி எடை எவ்வளவு?
அ) 1000 கிராம் ஆ) 1200 கிராம்
இ) 1350 கிராம் ஈ) 1550 கிராம்
7. பார்சி மதத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) சொராஸ்டர் ஆ) பார்சவநாத்
இ) குருநானக் ஈ) மகாவீரர்
8. சட்டமறுப்பு இயக்கத்தை காந்தி கொண்டுவர காரணமாக இருந்தது எது?
அ) லாலா லஜபதிராயின் மரணம்
ஆ) ஜாலியன் வாலாபாக் படுகொலை
இ சவுரிசவரர் சம்பவம்
ஈ) மாண்டேகு, செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்
9. நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய இடம்?
அ) மலேசியா ஆ) சிங்கப்பூர்
இ) இந்தோனேசியா ஈ) ஜப்பான்
0. லூதியானா நகரம் எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது?
அ) சட்லெஜ் ஆ) பியாஸ்
இ) செனாப் ஈ) ரவி
11. 'திரவ தங்கம்' என்று அழைக்கப்படுவது?
அ) அமிலம் ஆ) எரிமலைக்குழம்பு
இ) தங்கம் ஈ) பெட்ரோல்
12. திட்ட ஆணையத்தின் வேலை என்ன?
அ) வருமானத்தை பெருக்குவது ஆ) திட்டங்களை போடுவது
இ) வரி விதிப்பது ஈ) இவை எதுவுமில்லை
13. பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
அ) 1960 ஆ) 1963
இ) 1966 ஈ) 1969
14. அன்னை தெரசா ஆரம்பித்த தொண்டு நிறுவனத்தின் பெயர்?
அ) மிஷினரிஸ் ஆப் சேரிட்டீஸ் ஆ) சேரிட்டி ஹோம்
இ) அபய கரம் ஈ) கிறிஸ்து சபை
15. உலக வர்த்தக சபையின் தலைமை அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
அ) மணிலா ஆ) ஜெனிவா
இ) வியன்னா ஈ) நியூயார்க்
விடைகள்: 1.(ஆ), 2.(இ), 3.(ஈ), 4.(இ), 5.(அ), 6.(இ), 7.(அ), 8.(இ),
9.(ஆ), 10.(அ), 11.(ஈ), 12.(ஆ), 13.(இ), 14.(அ), 15.(ஆ)
0 comments: