undefined
undefined
undefined
போலீஸ் கெடுவை மதிக்காத சாமியார் ஸ்ரீகுமார்!

சென்னை கற்பழிப்புப் புகார் [^] கொடர்பாக இன்று பிற்பகல் 12 மணிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என போலீஸார் இறுதிக் கெடு விதித்தும் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
62 வயதான ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். வேலை கேட்டு போனபோது காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கி கற்பழித்து விட்டார். பின்னர் அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டி பலமுறை கற்பழித்தார் என்று புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஹேமலதாவை அழைத்து போலீஸார் விசாரித்து விட்டனர். மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதையடுத்து சாமியாரை விசாரிக்க போலீஸார் முயன்றனர். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். பலமுறை அவரை எச்சரித்து அழைத்தும் இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சாமியார்.
இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாமியாரின் வீட்டுக்கு சென்றபோது வீட்டில் வேலைக்காரர்கள் மட்டுமே இருந்தனர்.
வேலைக்காரர்களிடம், சாமியாரை திங்கள்கிழமை (இன்று) பகல் 12 மணிக்கு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் கொடுத்தனர்.
இன்று விசாரணைக்கு ஆஜராகா விட்டால், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்மன் வீட்டு வாசலிலும் ஒட்டப்பட்டது.
இவ்வளவுக்குப் பின்னரும் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வருவதால் அவரைப் பிடித்த தனிப்படை அங்கு விரைந்துள்ளது.
ஆனால், அவர் கோர்ட்டில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு போலீசில் ஆஜராக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் தனது ஆட்கள் மூலம் ஹேமலதாவிடம் அவர் சமரசம் பேசி வருவதாகவும் தெரிகிறது.
0 comments: