Saturday, May 8, 2010

0

பிறந்த நாள் ஆண்டு பலன்

மே 9

தாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை ஆளாக்கிக் கொள்வதிலும், தனக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதிலும் தனித்திறமை படைத்தவர்கள் தங்களுக்கு, இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் மன நிறைவான மாற்றங்களை எதிர்கொள்வீர்கள். மேலும், விட்டுப்போன உறவுகளை புதுப்பித்துக் கொள்வீர்கள். நிதி நிலையில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரையில் எதிர்பார்த்த இனங்களிலிருந்து வரவுகள் தாமதமாகும். கடன் கட்டுப்பாட்டுகள் இருக்கும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட வகையில் வருமானங்கள் திருப்தி தராது. பூர்வீக சொத்துக்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரின் உடல்நிலையில், அதிக அக்கறை தேவைப்படும். இல்லற துணையின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்து கொண்டு செல்லுங்கள். குழந்தைகளின் பழக்கவழக்கங்களில் கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிர கவனம் இருக்கட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி
அதிர்ஷ்ட தேதிகள்: 6, 15, 24.
அதிர்ஷ்ட மாதங்கள்: ஆகஸ்ட், ஜனவரி
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

மே 10

திட்டமிட்ட வாழ்க்கை, வாழ்க்கைக்கு ஏற்ற அணுகுமுறையும் கொண்ட தாங்கள், இந்த பிறந்தநாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் நல்ல மாற்றங்களையும், பொருளாதார வகையில் உயர்வும் காண்பீர்கள். சில திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பர். தவறல்ல! அதே நேரத்தில் காலங்களுக்கு ஏற்ற, செயல்பாடு வெற்றி பெற உதவும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். நிதி நிலையில் முடிந்தளவிற்கு திட்டமிட்ட செலவுகளை மட்டும் மேற்கொள்ளுதல் பற்றாக்குறையைத் தவிர்க்கும். பூர்வீக சொத்துக்களால், சிறு ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் தங்களின் கண்டிப்புகள் அவசியமான போதும் அது தவறான வழிக்கு, வழி வகுத்திடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெற்றோருக்காக மருத்துவ செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உறவினர்களிடம் பட்டும், படாததும் ஆன மாதிரி உறவுகளை மேற்கொள்ளுதல் இந்த ஆண்டுக்கு நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஏட்டளவில் இருந்த லாபம் கைக்கு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுக்கு சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தாமதமான போதும் கிடைக்கும் தெய்வ திருப்பணிகளையும் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19.
அதிர்ஷ்ட மாதங்கள்: ஜூலை, டிசம்பர்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2.

மே 11

தாங்கள் பொறுப்புள்ளம் கொண்டவர்கள். போற்றத்தக்க செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள், தங்களுக்கு இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் சில பெரிய திட்டங்களை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பும், வசதிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நிதி நிலையில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த, பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலம், வீடு சம்பந்தப்பட்ட வகையிலும் ஆதாயங்களை அடைவீர்கள். குடும்பத்தில் தங்களின் மென்மையான வார்த்தைகளால், தீராத பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இல்லறத் துணையின் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். உறவினர்களால் தங்களுக்கும், தங்களால் அவர்களுக்கும் உதவிகள் உண்டு. புதிய வீடு மாற்றவோ அல்லது கட்டவோ முயற்சி மேற்கொள் வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் விரிவாக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் பழக்கங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவிகள் மற்றும் அவர்களால் சில சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களால் சில ஆதாயங்களை, இந்த ஆண்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமை: திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 20.
அதிர்ஷ்ட மாதங்கள்: நவம்பர், மார்ச்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.

மே 12

தாங்கள் வார்த்தைகளாலே எதிரியை கூட செயலிழக்க செய்யும் குணமும், சிறு வயதிலேயே சகல, சவுபாக்கியங்களையும் அடையும் தன்மை கொண்டவர்கள் தங்களுக்கு இந்த பிறந்த நாளிலிருந்த வரும் ஓராண்டு காலம் நல்ல மாற்றங்களையும், கடந்த காலங்களில் தாமதப்பட்ட காரியங்களையும், விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். நிதி நிலையில் வருமானத்தை கூட்ட முயற்சி மேற்கொள்வீர்கள். கடன்களை விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். நிதி நிலையில் வருமானத்தை கூட்ட முயற்சி மேற்கொள்வீர்கள். கடன்களையும் தவணைகளில் முடிக்க முயற்சி செய்யுங்கள். வழக்கு மற்றும் கோர்ட் விவகாரங்களில், இழுபறி நிலை ஏற்பட்ட போதும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நல்லதொரு முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ள பொறுப்புகளையும் சற்று கவனத்தில் கொள்ளுங்கள். பெற்றோரின் நலனினும் அக்கறை இருக்கட்டும். குழந்தைகளின் நலன் கருதி, சில காரியங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் யோசிக்க வைத்த போதும், தக்க மாற்று ஏற்பாடுகளை தாமதமில்லாமல் செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருட முன்பாதி சற்று நெருக்கடியான காலகட்டம் தான் என்ற போதும், சமாளிக்க கூடிய வகையிலேயே இருக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
அதிர்ஷ்ட தேதிகள்: 3, 12, 21.
அதிர்ஷ்ட மாதங்கள்: ஜூன், செப்டம்பர்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3.

மே 13

சிந்தனை மற்றும் கருத்துக்களால் பிறரை தன் வசப்படுத்தும் தன்மை கொண்டவர்கள் தங்களுக்கு, இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் தாமதமான வளர்ச்சியையே எதிர் கொண்டாலும், அது நிரந்தரமானதாக அமையும். செய்ய போகும் திட்டங்களில் சரியான முறைதானா என யோசித்து செயல்படுங்கள். நிதி நிலையில் வருமானங்கள் கூடுவதால் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வீர்கள். கடன் தொந்தரவுகளையும் கணிசமான அளவுக்கு குறைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியில் கூடுதல், கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உறவினர்களின் வேலைகளில் சற்று கவனமுடன் செயல்படுங்கள். வீடு மாற்றவோ அல்லது புதிதாக கட்டுவதற்கோ முயற்சி மேற்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிர்வாக விவகாரங்களில், தகுந்த நபர்களின் யோசனையின் பெயரில் எந்தவொரு மாற்றத்தையும் செய்து கொள்ளுதல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். கலைஞர்களுக்கு மாற்றங்களுக்கு முயற்சி மேற்கொள்ளுதல் தாமதமான பலனையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மனநிறைவான சில பயணங்களையும் மேற்கொள்வற்கும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19.
அதிர்ஷ்ட மாதங்கள்: டிசம்பர், பிப்ரவரி
அதிர்ஷ்ட எண்கள்: 1,4.

மே 14

தாங்கள் மென்மையான பேச்சு வார்த் தைகள், அமைதியான செயல்பாடுகளை கொண்டவர்கள் தங்களுக்கு, இந்த பிறந்தநாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் நல்லது, கெட்டது கலந்தே இருக்கும். நிதிநிலையில் கூட வரவுகள் வந்தபோதும், அதிகமான செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடன் தொந்தரவுகள் குறைய வாய்ப்புண்டு. பூர்வீக சொத்து பகையில், சிற்சில பிரச்னைகளை சந்திக்க கூடும். குடும்பத்தில் சில விவகாரங்களை முடிக்க, நெருங்கிய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். குழந்தைகளுக்காக செலவுகள் கொஞ்சம் இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமே. மிகுந்த முயற்சியின் பெயரில், சுப நிகழ்ச்சிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள் வீர்கள். விரிவாக்கமும் செய்ய முயல்வீர்கள். தொழில் ரீதியான அரசாங்க விவகாரங்கள் ஆதாயமாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில், சற்று கூடுதலான கவனம் எல்லா வகையிலும் சிறந்தது. புதிய வேலைவாய்ப்பிற்கோ அல்லது தொழில் தொடங்கவோ டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள், மிகவும் ஏற்றதாக அமையும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அதிகமான ஆதாயத்தை தரும்.

அதிர்ஷ்ட கிழமை: புதன்
அதிர்ஷ்ட தேதிகள்: 5, 14, 23.
அதிர்ஷ்ட மாதங்கள்: டிசம்பர், ஏப்ரல்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 8.

மே 15

ஒவ்வொரு முயற்சிகளும், செயல்பாடுகளும் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் பயன்படும்படி ஆக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள், தங்களுக்கு இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் வளர்ச்சி நார்மலாக இருக்கும். நிதி நிலையில், கடந்த காலங்களில் பல வகையிலும் முடங்கி கிடந்த பாக்கிகளை, வசூல் செய்ய முயற்சி செய்வீர்கள். வழக்கு மற்றும் கோர்ட் வகையில் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட வகையில் வில்லங்க விவகாரங்களை எதிர்பார்க்கலாம். சொத்து சம்பந்தப்பட்ட வகையிலும், விவகாரங்கள் ஏற்பட்ட போதும் மூன்றாவது நபரின் தலையீட்டால் சுமூகமான தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் பாசம் கூடுதலாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் கூடுதலாகும். அதே நேரத்தில் பொருளின் தரத்தை மேம்படுத்த, முயற்சிகள் தேவைப்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சில மாற்றங்கள் திருப்தி அற்ற போதும், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டியிருக்கலாம். எனவே, எதையும் பெரிதுபடுத்தி கொள்ளாதீர்கள்.

அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி
அதிர்ஷ்ட தேதிகள்: 6, 15, 24.
அதிர்ஷ்ட மாதங்கள்: ஜூலை, அக்டோபர்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive